Urinary tract infection (UTI) எனப்படும் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படும். UTIs occur mainly in women and affect the bladder and urethra. காரணம் பெண்களின் உடலமைப்பு அப்படி. அவர்களின் சிறுநீர்ப்பாதை சிறியது. ஆசனவாயிலும் சிறு நீர்துவாரமும் அருகருகே இருக்கும். குடலில்லிருந்து வெளியேறும் கிருமிகள் ஆசன்வாயில் வழியா சிறுநீர் துவாரத்தை அடைந்து நீர்பைக்குள் போகும் வாய்ப்பிருக்கிறது.

All women are at risk of cystitis because of their anatomy, specifically, the short distance from the urethra to the anus and the urethral opening to the bladder. Infection of the urethra (urethritis) can occur when GI bacteria spread from the anus to the urethra. Because the female urethra is close to the vagina, sexually transmitted infections, such as herpes, gonorrhea and chlamydia, can cause urethritis.

மருத்துவமனைகளில் Urinary tract infectionநுடன் வரும் பெண் நோயாளிகளுக்கு, "சிறுநீரை அடக்கிவைக்காதீங்க. உடனுக்குடன் வெளியேத்திடுங்க"னு அறிவுரை சொல்வோம். அவர்களில் பெரும்பாலானவர்கள், “எங்க சார் போறது? எல்லா இடத்துலயும் toilet இல்லையே. அப்படியே இருந்தாலும் அதனுள் யாரும் நுழைய முடியாத அளவிற்கு தான் உள்ளது” என்று பதிலளிப்பார்கள். உண்மை தான். பெருசு பெருசா ஹோட்டல் கட்டிவெச்சிருப்பாங்க. ஆனா toilet இருக்காது. அப்படியே இருந்தாலும், எங்க இருக்குனு தெரியாது. இருட்டான சமயலறைய தாண்டி சந்து பொந்தெல்லாம் நுழைஞ்சு ஒதுக்குப்புறமான இடத்துல இருக்கும். யாராவது வேலைக்காரங்கள கேட்டு தான் போகணும். ஒருமாதிரி பாப்பாங்க. துணையில்லாம தனியா போகமுடியாது. ஒருவழியா வீட்டுக்கு போய் வெளியேத்திக்கலாம்னு அடக்கிப்பாங்க. எல்லா பெண்களுக்கும் உள்ள பிரச்சனை இது.

வெளியூர் பயணம் செல்லும் போது ஆண்களுக்கு பிரச்சனையில்லை. ஒரு மரம்,சுவர் கிடைச்சா போதும். ஆனா பெண்களுக்கு தான் சோதனை. சரியான கழிப்பிட வசதி இருப்பதில்லை. மோட்டல்களில் 5 ரூபாய் 10 ரூபாய்னு அநியாய கொள்ளை. அங்க போக பலருக்கு பயம். வீடு வரும் வரை அடக்கி வைத்திருக்க வேண்டும். டீ காப்பி கூல் ட்ரிங்க்ஸ் கூட குடிக்க முடியாது. நாக்கு வறண்டிருக்குனு தப்பித்தவறி ஏதாவது குடிச்சா, வயிறு முட்டும். வலியே வரும். வெட்கத்துல வெளிய சொல்லவும் முடியாது. Diabetes உள்ள பெண்களுக்கும், மாசமாயிருக்குற பெண்களுக்கும் பிரச்சனை இன்னும் அதிகம், அவங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும்.

சிறுநீர வெளியேத்தமுடியாம அடக்கி வெச்சிருந்தா, கிருமிகள் பெருகி infection வரும். ஆரம்பத்துல நீர்க்குத்தல் தான்னு அலட்சியமா இருப்பாங்க. 2,3 நாள் கழிச்சு ஜூரம் வந்ததும் தான் மருத்துவர்கிட்ட வருவாங்க. மருத்துவர்கிட்டயும் இத முதல்லயே சொல்ல மாட்டாங்க. மருத்துவரும், எங்க infection இருக்குனு கண்டுபிடிக்க கேள்வி மேல கேள்வி கேட்டதும் தான் நோயாளிக்கே விஷயம் புரியும். மருந்துகள் பரிந்துரைப்போம். கூடவே நிறைய தண்ணி, நீராகாரம் குடிங்கனு அறிவுறை சொல்வோம்.

இவ்ளவு பிரச்சனைக்கும் மூலக்காரணம் என்ன ?
எல்லா இடங்கள்லயும் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாதது தான். இருந்தாலும் பராமரிக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் தினம் தினம் இதனால் பாதிப்படைகிறார்கள். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் கழிவறைகள் இல்லாத மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாதுனு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். பொதுக்கழிப்பிடங்களை முறையா பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 ரூபானு எழுதி வெச்சுட்டு 10 ரூபாய் கட்டணம் வசூலித்தால் தண்டிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் அனைத்திலும் மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகள் கட்ட வேண்டும். கழிப்பறை கட்டுவதற்கு கொடுக்கப்படும் மானியத்தை அதிகரிக்க வேண்டும்.
*************************************
நிறைய எழுதணும். சக மனுஷிகள் சந்திக்கும் பிரச்சனைகள வெளிக்கொண்டு வரணும். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி எழுத போராளியா இருக்கணும்னு அவசியமில்லை. சாதாரண மனுஷனா இருந்தாலே போதும்.

உண்மையுடன்,
“ஆணாதிக்கவாதி” பாலாஜி,
நிறுவனர், ஆமுக.