
'பணம் தான் முக்கியம்' என அடிக்கடி என்னுடன் விவாதம் செய்பவர்களுக்காக :-
1. Sex and Marriage Counseling Clinic மூலம் பல தம்பதியினருக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறேன்...
பெரும் பணக்காரர்கள் வந்திருக்கிறார்கள்..
திருமணமான பெரும்பான்மை ஆண்களுக்கு 2 வித குறைபாடுகள் தான் - 1) Premature ejaculation 2) Impotence....
பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இந்த குறை இருக்கிறதுனு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வெளியே சொல்ல மாட்டார்கள் .
இந்த 2 குறைபாட்டிற்கும் பணத்துடன் தொடர்பில்லை..மாத்திரை மருந்தும் பெருசா பலன் அளிக்காது...
'எப்படி மனைவியை காதலிக்க வேண்டும் , சந்தோசப்படுத்த வேண்டும்'னு மருத்துவராக நிறைய ஆலோசனை தருவேன்...வெட்கப்பட்டுகிட்டே கேட்டுச் செல்வார்கள்...
நான் கொடுத்த அறிவுரைகள் தான் அவர்களுக்கு பலன் கொடுத்திருக்கிறது…
வரதட்சணையாக 100 பவுன் நகை , பணம், வீடு,கார் வாங்கினால் மட்டும் ஒரு திருமணம் முழுமை அடைந்து விடாது.
எல்லா சந்தோசத்தையும் ,அன்பையும் பணத்தால் வாங்கி விட முடியாது...
2) உண்மை சம்பவம் ....
சினிமாவில் மட்டுமே அவர் நடிகர். தமிழக 'Bharat Ratna'.
அவர் தன் நண்பரிடம் (கண்ணீருடன்) கூறியது :
“புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது.
ஒண்ணு : குழந்தைங்க வாரிசு இல்லாத குறை. பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு சொல்லிட்டார்.நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும்.ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன்.
ரெண்டாவது குறை : ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே.. அண்ணாதுரை,கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசி சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே!
அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!"
அவரிடம் இல்லாத பணமா ?
இவர் இறந்ததும் கிட்டதட்ட 10 லட்சம் பேர் அவர் இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்றார்கள்.அவர்கள் பணத்திற்க்காகவா ஊர்வலத்தில் சென்றார்கள் ?
சென்னை கடற்கரையில் உள்ள அவர் சமாதியில், சூடம் ஏத்தி வெச்சு கண்ணீர் விட்ட ஒரு ஏழை பெரியவரை நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன்.
உள்ளே படுத்து இருப்பவர், வெளிய வந்து பணம் கொடுப்பார் என்ற காரணத்திலா பொது மக்கள் அவர் சமாதிக்கு போகிறார்கள் ?
25 வருடம் முன்பு இறந்து போன அவர் பெயரை சொல்லித்தான் ஒரு கட்சி வாக்கு சேகரிக்கிறது.
3) பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி விட முடியுமா ?
Sperm Bank மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்னு ஒரு நண்பர் சொன்னார்...
நான் மருத்துவர் மட்டுமில்லை.சராசரி மனிதனும்...
'யாரோ ஒரு ஆண் இரவல் கொடுக்கும் விந்தணு மூலம் தான், தன் மனைவி கருவுருகிறாள் என்றால்..... இந்த பணம் எதற்கு ? ".
4) பணம் தேவை தான்..அவசியம் கூட...
பணம் புடவை போல- ஐநூறு ரூபாய்க்கும் புடவை வாங்கலாம்...லட்ச ரூபாய்க்கும் வாங்கலாம்..
'தேவை' (Essential) என்பதற்கும் ,'வசதி' (Comfort) என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
5) "இல்லை.பணம் மட்டும் இருந்தால் போதும் ,மற்ற எல்லாத்தையும் வாங்கிவிடலாம்.உங்களுக்கு வயசு பத்தாது "னு எதிர்வாதம் செய்யவறீங்களா ?
30 ஆயிரத்துக்கு செல்போன் வாங்கலாம்.
ஆனா பிரிந்து போன காதலரை ஒரே ஒரு முறை பழையபடி பேச வைக்க முடியுமா ?
இறந்து போன பெற்றவரிடம்: "எப்படி மா இருக்கீங்க","சாப்டீங்களா பா"னு ஒரே ஒரு முறை கேட்க முடியுமா ?
நம்ம யாருக்கு வேணாலும் 'அஞ்சலி' பாப்பா மாதிரி ஒரு குழந்தை பிறக்கலாம்..அந்த குழந்தைய வளர்பதற்கு பணம் தேவை தான்...ஆனா பணத்தால் மட்டுமே அந்த குழந்தைய காப்பாத்த முடியும்னு நினைக்குறீங்களா ?