கட்டில் பீரோவையும், கொஞ்சம் பாத்திரத்தையும் ஊர்லயிருந்து அப்பா எடுத்துட்டு வந்தார். பாத்திர மூட்டையில என் BP apparatus. எடுத்து பார்த்தா எல்லா mercuryயும் கீழ கொட்டியிருந்துச்சு. எனக்கு பயங்கர கோவம்.

(சத்தமா)"BP மெஷின யாரு பாத்திர பெட்டியில வெச்சது ?"
"தெரியல டா எப்படியோ வந்துடுச்சு. இத சரி பண்ண முடியுமா?"

"முடியாது."
"இது எவ்ளோ வில ?"

"ஆயிர ரூபா. 12 வருஷமா வெச்சுருக்கேன். எல்லாருக்கும் இதுல தான் BP பார்த்தேன்."
"ஓஓ....12 வருஷம் ஆயிடுச்சா ? நாங்கூட புதுசோனு நினைச்சுட்டேன்"னு சொல்லி சிரிக்கிறார்.