இரண்டாம் ஆண்டு mbbs மாணவர்களை தினமும் கிராமத்துக்கு அழைத்துக்கொண்டு போய் அங்குள்ள மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் பற்றி வகுப்பெடுக்கிறோம். இன்று, லால்குடி அருகில் உள்ள ஒரு கிராம பள்ளிக்கு School Health Visit போனோம்.

"1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.அனைவருக்கும் ஒரே ஒரு ஆசிரியை"."வகுப்பில் பெஞ்ச் இல்லை. குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருந்தனர்", "எ
ல்லா குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு" இருந்ததை கண்டுபிடித்தேன். "40 மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தில் ஒரு நாள் காய்கறி வாங்க, வெறும் 8 ரூபாய் மட்டுமே அரசு கொடுக்கிறது." அதில் என்ன காய்கறி வாங்க முடியும் ? "திருச்சி பகுதியில் குடிநீரில் fluorine அளவு அதிகம் என்ற காரணத்தால் பாதி மாணவர்களுக்கு caries tooth"---> இப்படி நிறைய பிரச்சனைகள். இதை பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்களா ? இதையெல்லாம் பத்திரிக்கையாளார்கள் எழுதுகிறார்களா ? சரி, இதெல்லாம் ஏற்கனவே நமக்கு தெரிந்த பிரச்சனைகள் தான்.

ஆனால், இன்று ஒரு புது பிரச்சனையை கவனித்தேன்.
வகுப்பில் உள்ள மாணவர்களது வருகைப் பதிவேட்டில், ஒவ்வொரு குழந்தையின் பெயருக்கு முன்னும், அவர்களின் ஜாதி குறிப்பிடப்பட்டுள்ளது - SC/MBC/BC.
அரசு அச்சடித்துக் கொடுத்துள்ள இந்த Attendance Registerல் "ஜாதி" என்றொரு column இருப்பதை பாருங்கள் (photo). அப்படியானால் தமிழகத்தின் உள்ள எல்லா அரசு பள்ளியிலும் இந்த Register தான் பின்பற்றப்படுகிறதா ?

ஜாதி பெயரை எழுதிவைத்துவிட்டு, "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று அவர்களுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கிறார்கள். பாவம் 5 வயது குழந்தைக்கு ஜாதியை பற்றி என்ன தெரியும் ? இது ஒருபுறம். மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அவர்களின் ஜாதியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ?

MBC/SC/ST மாணவர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை, அரசே நேரடியாக அவர்களின் Bank Accountல் செலுத்திவிடுகிறது என்பதை கேட்டறிந்தேன். அப்படியானால், ஆசிரியருக்கு ஒரு மாணவனின் ஜாதி பற்றி எதற்காக தெரிவிக்க வேண்டும் ? இதை வைத்து அவர் மாணவர்களிடம் பாகுபாடு காட்ட வாய்ப்பிருக்கிறதே ? ஜாதியை அரசே ஊக்குவிக்கிறதா ?

- பாலாஜி