"ஆசிரியர் குத்திக்கொலை. மாணவர்கள் வெறிச்செயல்"
"கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொலை செய்தனர்."
- இந்த நியூஸ் எல்லாம் கேட்டு அரண்டு போயிருந்தேன். 

இன்னைக்கு மதியம் ஒருத்தன் வந்தான்.
"சார், நாளைக்கு நான் லீவு. பர்மிஷன் தாங்க"னு கேட்டான். 
முடியாதுனு சொன்னா ? 
கோவப்படுவானோ ?
ஒசரமா வேற இருந்தான்.

வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத ஒரு உயிர் அனாமத்தா போகணுமா ? யோசிச்சேன். நம்ம உசுரு முக்கியம்.
"தம்பி, அதோ பாரு, அங்க தான் HOD சார் இருக்காரு. எதுவா இருந்தாலும் அவர்கிட்ட கேட்டுக்கோ"னு அனுப்பிவெச்சுட்டேன்.