ரொம்ப படிச்ச அறிவாளிகளே.....
இந்த போட்டோவ பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க, " விரைவில் இந்தியா வல்லரசு நாடு"னு ...

அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்கு என்னிடம் வந்த பெண்ணின் கணவரிடம்,
"குழந்தையை பெற்றுக்கொள்ள புது துணி கொடுங்க"னு கேட்டதற்கு, அவர் கொடுத்தது -கிழிந்த பழைய பனியன் (photo வில் உள்ளது ).காரணம் ? வறுமை...
முதன் முதல் இந்த உலகத்திற்கு வரும் அந்த குழந்தையை, இந்த துணியால் வரவேற்க முடியுமா ?

1) பலத்த கைத்தட்டல்களுடன்,நம்ம பிரதமர், சிரிச்சிகிட்டே வெளியிட்ட Hungama Report :
"42 % இந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ".
காரணம் ? வறுமை….
http://hungamaforchange.org/HungamaBKDec11LR.pdf

2) "போக்ரான் ,அக்னி, சந்திரயான்" னு பெருமைபடுற உங்களில் எத்தனை பேர், பக்கத்துல இருக்குற அரசு மருத்துவமனை/ஆரம்ப சுகாதார நிலையத்துல, உள்நோயாளியா சிகிச்சை பெற்றுக்கொண்டவர்கள் ?

3) 5000 km வரை சென்று தாக்கும் ஏவுகணையால், இதுவரை எத்தனை உயிர்களை காப்பாற்ற முடிந்தது/ முடியும் ? அது இந்தியாவாகட்டும் அல்லது சீனா/பாகிஸ்தானாகட்டும்.

2010 ஆம் ஆண்டு இந்தியாவின் IMR −48 (அதாவது இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில், 48 குழந்தைகள் 1 வயதிற்குள் இறந்துவிடுகின்றன).
இது ஒரு அவமானம்,அசிங்கம்...

காரணம் ?
Iceland,Japan மற்றும் Singapore ல் IMR - 2 ;
Greece ,Italy ,Norway,மற்றும் Ireland ல்-IMR 3;
Spain,Switzerland ,Australia மற்றும் Netherland ல் IMR-4,
Canada மற்றும் Englandல் IMR-5,
USA-7….
(Reference:WHO Global Health Observatory Data Repository http://apps.who.int/ghodata/?vid=200)

நம்ம நாட்டுல மட்டும் பிறக்குற/பிறந்து இறக்குற குழந்தைகள், என்ன பாவம் செஞ்சாங்க ?

4) அணு ஆயுதத்தை மட்டும் வெச்சிகிட்டு, ஒரு நாட்டை 'முன்னேறிய நாடு', 'வல்லரசு' னு சொல்ல முடியும்னு நம்புறீங்களா?

2010ஆம் ஆண்டு இந்தியாவில் 1 வயதுக்குட்பட்ட 13,00,000 குழந்தைகள் இறந்திருக்கின்றன…கொல்லப்பட்டிருக்கின்றனர்…

இதற்கு முக்கிய காரணம்-மருத்துவம் /சுகாதாரத்திற்கு ஒரு நாடு எவ்வுளவு செலவு செய்கின்றது என்பதை பொருத்து ?(Total expenditure on health as a percentage of GDP)

இதில் அமெரிக்காவுக்கு முதல் இடம் .15% GDP செலவு செய்கின்றது …
வல்லரசு இந்தியா ? வெறும் 4%….
உலக நாடுகளின் தரவரிசையில் இதில் இந்தியாவுக்கு153 வது இடம் …
'ஏழை நாடுகள்','பிச்சைகார நாடுகள்'னு பலரால் கிண்டல் செய்யப்படும் பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளை விட நாம் பின்தங்கி உள்ளோம்…
(Reference: WHO Department of Health Statistics and Informatics (May 13, 2011).
http://www.who.int/whosis/whostat/EN_WHS2011_Full.pdf

5) நம்ம நாட்டு காசெல்லாம் எங்க போச்சு?
ராணுவத்திற்கு செலவு செய்வதில்,உலகளவில் இந்தியாவிற்கு 8வது இடம்...

(Reference:The SIPRI Military Expenditure Database )
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_military_expenditures
பெரும் தொகையை ராணுவம் முழுங்கிவிடுகிறது.அதற்கு வரவு செலவு வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.அது தான் ராணுவ ரகசியம்

6) அடுத்த முறை ,இந்தியா வெற்றிகரமா ஏவுகணை சோதனை செய்தால்,அந்த செய்தியை Like/Share பண்ணீங்கன்னா ,ஒவ்வொரு வருடமும் இறக்கும் 13,00,000 குழந்தைகளின் ஆவி உங்களை சும்மா விடாது...

பள்ளிக்கூடத்தில் படித்தது :-
அரசனை பார்த்து,புலவர் கூறிய அறிவுரை :
" வரப்பு உயர நீர் உயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர குடி உயரும்.
குடி உயர கோன் உயர்வான் ".

(பின் குறிப்பு :"Facebookல் என்னால் என்ன செய்ய முடியும்" னு கேட்பவர்களுக்கு :

1.குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க,அரசாங்கத்தால் இலவசமாக கொடுக்கப்படும் தடுப்பூசி/சொட்டுமருந்து என்ன என்ன ?
அவை எப்பொழுது கொடுக்க வேண்டும் ?
என்ற இந்த linkஐ share பண்ணுங்க

https://www.facebook.com/photo.php?fbid=184103335041224&set=a.184103331707891.38995.180094148775476&type=1&theater

2) ஒரு பெண் கருவுற்றால் ,அவர் என்ன என்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்? என்ற இந்த linkஐ share பண்ணுங்க ..
இந்த பரிசோதனைகளால் High Risk Pregnancy ஐ கண்டுபிடித்து, தாய்/சேய் இருவரின் உயிரையும் காப்பாற்ற முடியும்

https://www.facebook.com/photo.php?fbid=208584455926445&set=a.184103331707891.38995.180094148775476&type=1&theater.. . .