
குழந்தைய தொட்டில்ல போட்டு ஆட்டினா, நிம்மதியா தூங்கிடுது.
இதுவே நமக்கு நடந்தா தலை சுத்துது.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டோமோ ?
பொண்ணுங்க,குழந்தைங்கள பார்த்து, 'ச்சோ ச்வீட்',' ச்சோ க்யூட்'னு கொஞ்சுறாங்க.
நாம குழந்தையா இருந்தப்போ இப்படி தான் கொஞ்சி இருப்பாங்களோ ?
ச்ச ..அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?
அப்போ, நாட்டு வெடிய பத்தவெச்சுட்டு ஸ்டைலா நடந்து வருவேன்.
இப்போ,ஊசி வெடிய பத்தவெச்சுட்டு பயந்து ஓடிவறேன்.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?
அப்போ, ஒண்ணுமே இல்லாத மேடை நாடகத்த கைதட்டி ரசிச்சேன்.
இப்போ,ஆஸ்கார் விருது வாங்குன படத்த, ரசிக்கத் தெரியாம விமர்சிக்குறேன்.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?
அப்போ டிவில, மகாபாரத சண்டையை, சிரிச்சு ரசிச்சு பார்த்தேன்.
இப்போ போரை பத்தி, செய்தி கேட்டாலே வருத்தமா இருக்கு.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?