இன்னைக்கு ஸ்டூடண்ட்ஸ அழைச்சிகிட்டு கிராமத்துக்கு field visit.
வழக்கமான ஒன்னு தான்.
ஏன் இந்த field visit ?
போன வருஷம் முதலாம் ஆண்டு மாணவர்களோட, Health Education வகுப்புல, "வயித்துப்போக்கால பாதிக்கப்பட்ட குழந்தைக்கு என்ன மாதிரி தண்ணி கொடுக்க சொல்லி அறிவுரை கொடுப்பீங்க"னு கேட்டேன்.
"மினரல் வாட்டர்"னு ஒருத்தன் பதில் சொன்னான்.
"இது தப்பு. வில அதிகம். வசதி இல்லாதவங்க மினரல் வாட்டர் வாங்க முடியாது. காய்ச்சுன தண்ணியே போதும்.அதிக செலவில்ல"னு சொல்லிக்கொடுத்தேன்.
நோயாளிகளோட குடும்ப சூழ்நிலைய மாணவர்களுக்கு புரியவெக்குறதுக்கு தான் இந்த field visit.
வீடு வீடா போய் நோயாளிகள கவனிக்கணும்.
"நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிக்கக் கூடாது. நோயாளிகளின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்"னு சொல்லித்தருகிறோம்.
வீடு வீடா போய் நோயாளிகள கவனிக்கணும்.
"நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிக்கக் கூடாது. நோயாளிகளின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்"னு சொல்லித்தருகிறோம்.
அவங்க வீடு எப்படி இருக்கு, அடுப்படில புகை அதிகமா இருக்கா, காற்றோட்டம் சரியா இருக்கா, கழிவறை இருக்கா இல்லையா, அவங்க தொழில் என்ன, மாசவருமானம் எவ்ளோ, அவங்க குடும்பத்துல வேற யாராவது நோயாளிகள் இருக்காங்களா, குழந்தைங்க இருக்காங்களா, ஒழுங்கா தடுப்பூசி போடுறாங்களா, குடும்ப கட்டுப்பாடு முறைகள பயன்படுத்துறாங்களா, கர்ப்பமா இருக்குறவங்க நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு வராங்களா, வரலைன்ன ஏன் வரலைனு விசாரிக்கணும். நோயாளிகளுக்கு நிறைய அறிவுரைகள் கொடுப்போம். மருந்து தேவைப்பட்டா ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோம்.
வாரத்துக்கு ஒரு நாள்னு ஒரு வருஷம் அந்த கிராமத்துக்கு போகணும். வழக்கமா இது மாணவர்களுக்கு குஷியான வேலை. எனக்கும் தான். இன்னைக்கு மதியம் கொஞ்சம் வெயில் ஜாஸ்தி. தெரு தெருவா போனதுல களைப்பு. இந்த குடிச வீட்டுல ஒரு நிறை மாத கர்ப்பினி. பார்த்தாச்சு. பேசியாச்சு. அறிவுரை கொடுத்தாச்சு. கிளம்பணும்.
பசங்ககிட்ட, "வாங்க நேரமாவது, கிளம்பலாம்"னு சொன்னேன்.
எடத்துவிட்டு நகராம லேசா நெளிஞ்சாங்க.
ஒன்னும் புரியல.

திரும்பவும் "வாங்க"னு சொன்னதும், "சார், எளனி சாப்ட்டுட்டு வறோம்"நு சொல்லி சிரிச்சாங்க. அப்ப தான் கவனிச்சேன், வீட்ல இருந்த 2 பேர் நிறைய தேங்கா பறிச்சு கொண்டுவந்துகிட்டிருந்தாங்க
"சரி சாப்டுட்டு வாங்க"னு சொல்லி, ஜூனியர்கிட்ட,"வாப்பா நாம கிளம்பலாம்"னு கூப்டதும்,"சார் நானும் எள்னி குடிச்சிட்டு வறேன். நீங்க போங்க"னு சொன்னார்.
வெயில். தாகம். களைப்பு.
எள்னி வேற ரொம்ப எளசா இருந்திச்சு.
சீவ ஆரம்பிச்சதும் வாசம் கிளம்புச்சு. என்ன செய்றதுனு தெரியல.
ஜூனியர் பையனோ,"நீங்க போங்க சார்"னு திரும்பவும் சொன்னான். துரோகி. நீ மட்டும் குடிப்பியாடானு மனசுக்குள்ள கடிச்சுகிட்டேன்.
நல்ல வேள, அந்த வீட்டுக்காரங்களே எனக்கு ஒன்னு நீட்டுனாங்க. அவங்க நல்ல மனசு கஷ்டப்படுமேங்குற ஒர்ர்ரே காரணத்துக்காக வாங்கி குடிச்சேன். ஆனா, இந்த ஜூனியர் நான் குடிக்குறத போட்டோ எடுத்தான். சரி போகட்டும்னு விட்டுட்டேன்.
கொஞ்ச நேரத்துல எள்னிய வெட்டி உள்ள இருக்குறத ரசிச்சு ரசிச்சு சாப்ட்டேன்.
2 நிமிஷத்துல, ஜூனியர் செல்போன காட்டுனான். பாவி. எல்லாத்தையும் போட்டோ எடுத்து Whatsappல Upload பண்ணியிருக்கான்.
2 நிமிஷத்துல, ஜூனியர் செல்போன காட்டுனான். பாவி. எல்லாத்தையும் போட்டோ எடுத்து Whatsappல Upload பண்ணியிருக்கான்.
பஸ்ஸுல ஏறி உக்காந்ததும், எல்லார்கிட்டயும் காட்டுனார். சரி போகட்டும்னு விட்டேன்.
5 நிமிஷத்துல, Whatsappல வரிசையா கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சுடுச்சு.
5 நிமிஷத்துல, Whatsappல வரிசையா கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சுடுச்சு.
"இதுக்கு தான் நீங்க கிராமத்துக்கு போறீங்களா சார்?"
காலேஜ்ஜுக்கு திரும்பி வந்ததும், ஒரு ஜூனியர், "சார் நீங்க மட்டும் போய் எள்னி குடிக்குறீங்க, அடுத்த வாரம் நானும் வரேன்
”காலேஜ்ஜுக்கு திரும்பி வந்ததும், ஒரு ஜூனியர், "சார் நீங்க மட்டும் போய் எள்னி குடிக்குறீங்க, அடுத்த வாரம் நானும் வரேன்
— feeling ஒரு எள்னி குடிச்சது குத்தமாயா ?