டெல்லி எய்ம்ஸ்  
5 நாளாக தலைகீழாக்கப்பட்டது. எங்கும் போலீஸ், கமேண்டோக்கள். எப்போதுமில்லாத வகையில் Biochemistry போன்ற ஆய்வகத்தில் கூட சோதித்தார்கள். முழுவதும் காவிமயமாக்கப்பட்ட எய்ம்ஸை இன்று தான் பார்த்தேன். ஆறு இடங்களில் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்துவிட்டு தான் ஆடிட்டோரியத்திற்கு அனுமதித்தார்கள். 

காலை 10.40க்கு கரவொலியுடன் மேடைக்கு வந்தார் வித்தைக்காரர். எதையும் பார்த்து படிக்கவில்லை. ஆனால், பல நாட்கள், பலர் கூட்டாக தயாரித்த பேச்சாகத்தான் இருக்க வேண்டும். 45 நிமிடம் சுத்த ஹிந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் பேசியது அத்தனை பேரையும் மயக்கியது. 
"அட , நம்மூர் சூப்பர் ஸ்டார் மாதிரியே பேசுறாரே"னு நினைக்க வைத்தது அவரது உடல்மொழி. இந்த மோடி மஸ்தானின் ஒவ்வோரு வரிக்கும் கரவொலி. மருத்துவத்தில் Phd முடித்தவர்களுக்கே அறிவுரை கொடுக்குமளவுக்கு திறமை. பேச்சுத்திறமை. வீடியோகிராப்ஃபர்கள் சிரித்து சிரித்து கைதட்டினார்கள். மூளையில் அப்ரேஷன் செய்யும் Mch Neurosurgery மருத்துவர்களும், நரம்பியல் படித்த DM Neurology மருத்துவர்களும்,மனநலம் பற்றி 3 வருடம் படித்த MD Psychiatry மருத்துவர்களும் தங்களையும் மறந்து கைத்தட்டினார்கள் என்றால், சாதாரண குடிமக்கள் இந்த மந்திரவாதிக்கு மயங்கி, வாக்களித்து, பிரதமராக்கியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. 

செல்போன் எடுத்துச்செல்ல அனுமதியில்லாததால் அவரை போட்டோ எடுக்கமுடியவில்லை. வெளியே வந்ததும், வித்தைகாரர் பேசியதையெல்லாம் தமிழக மருத்துவரிடம் சொன்னதற்கு, "வாயாலே வட சுட்டிருக்கிறார்.அப்டித்தானே”நு கேட்டார். ஆமாம் அப்டியேத்தான்.

இரவு 10.40

சென்னை விமான நிலையம்.
நான் நின்றிருந்த இடத்தில் திடீர் பரபரப்பு. திரும்பினால் 4 அடி தூரத்தில் நம்மூர் சூப்பர் ஸ்டார். இவரை இன்று பார்ப்பேன் என்ற உள்ளுணர்வு உண்மையானது. ரசிகர்கள் அவரை நெருங்க, காவலர்கள் சூழ அவருக்கே உரிய ஸ்டைலில் டாட்டா காண்பித்து காரில் பறந்துவிட்டார். செல்போனில் storage memory இல்லாததால் இந்த வித்தைக்காரரையும் போட்டோ எடுக்க முடியவில்லை.

ஒரே நாளில் , இந்தியாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களை சந்தித்த பாக்யசாலி நான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒரே நாளில் இரண்டு சூப்பர் நடிகர்களை சந்தித்துவிட்டேன்.


பாலாஜி