"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணம் வழங்கினார் ஸ்டாலின்” - செய்தி

இது திமுகவினரின் நாடகமாகவே இருக்கட்டும். இந்த புகைப்படம் திமுகவின் தேர்தல் விளம்பரத்துக்காகவே இருக்கட்டும். அதிகாரம் அதிகமில்லாத ஒரு எதிர்கட்சி எம்எல்ஏ, வெள்ளநீரில் நடந்து சென்று மக்களைச்சந்தித்து குறைகளைக்கேட்கும் பொழுது, மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வர், பாதிக்கப்பட்ட மக்களை ஏன் சந்திக்கக்கூடாது ? அனைத்து அதிகாரமும் படைத்த முதல்வர் நேரில் சென்றால் இன்னும் விரைவாக நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்படுமே? மக்களுக்கும் ஆறுதலாக இருக்குமே?

ஹெலிகாப்டரில் சென்றால் 1 மணி நேரத்துக்குள்ளாகவே கடலூர் மாவட்டத்தை அடைந்துவிடலாம், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கலாம், வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிடலாம். சரி, கடலூர் தான் பக்கத்து நாட்டில் இருக்கு, அங்கிட்டு போய்வர பாஸ்போர்ட் எடுக்கணும், நேரமாகும். RK நகர் சென்னையில் தானே இருக்கு ? அதுவும் உங்கள் சொந்த தொகுதி. அங்கே போவதற்கு என்ன? கார்ல தான போகப்போறீங்க? அதுக்கும் எங்க காசுல தான பெட்ரோல் போட்டுக்குறீங்க? பூனைப்படையுடன் அடிமை அமைச்சர்களையும் அழைத்துக்கொண்டு ஒரு தடவ போயிட்டு வாங்க மேடம்.

பொதுமக்களை சந்திப்பதெல்லாம் முதல்வரின் வேலை கிடையாதுனு சொல்றீங்களா? சரி. வேறு எது எதெல்லாம் முதல்வரின் வேலை என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.

முதல்வரின் உடல் நிலை சரியில்லையா? சரி, லீவ் லெட்டர் எழுதிக்கொடுத்திட்டு, OPSஐ டம்மி C.Mஆ போட்டுடுங்க. இதென்ன உங்களுக்கு புதுசா என்ன?

இந்த சின்ன சின்ன பணிகளுக்கெல்லாம் முதல்வர் வரத்தேவையில்லை, அதிகாரிகளே போதும்னு சொல்றீங்களா? அப்படியா ! சரி. சில மாதங்களில் தேர்தல் வரும், இதையே நாங்களும் சொல்வோம், "எங்களுக்கு இந்த முதல்வரே வேண்டாம்” என்று.

- பாலாஜி