நாளைக்கு எங்க வீட்டுல கல்யாணம். நான் பொண்ணு வீட்டு தரப்பு. என் தங்கச்சி மணமகன் தரப்பு. அதுனால அவ கொஞ்சம் திமிர்த்தனமா பேசுறா. “பொண்ணு ரொம்ப பழசா தெரியுது. வேற பொண்ணு பாக்கலாமா ? யோசிச்சு கல்யாணம் பண்ணுங்க"னு அட்வைஸ் கொடுக்குறா. இப்ப போய் பொண்ண மாத்த முடியுமா ? மாப்பிள்ளைக்கும் மட்டும் என்னவாம் ? வயசாகிடுச்சு. நரைச்ச முடி இருக்கு. ரிட்டயராகி பென்ஷன் வாங்குறாரு. 2 புள்ளைங்க வேற இருக்கு. பொண்ண மட்டும் குறை பேசினா பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்.
#அறுபதாம்_கல்யாணம்
#அறுபதாம்_கல்யாணம்