குட்டி போட்ட பூன மாதிரி வகுப்பு நடுவுல நடந்துகிட்டே பாடம் எடுப்பேன்.
என்னதான் கண்ணுல வெளக்கெண்ணைய ஊத்திக்கிட்டு உஷாரா இருந்தாலும், இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு சிக்னல் கொடுத்துடுவாங்க. 41 பேர் இருக்குற சின்ன வகுப்பு, யார் எங்கிருக்காங்கனு சுலபமா கண்டுபிடிச்சுடலாம் தான். அதனால இவங்களால கண்ணாலேயே பேசிக்க முடியுது. சரி போகட்டும்.
ஆனா,138 பேர் இருக்குற பெரிய வகுப்புலயும், இந்த மூலையில இருக்குறவன் அந்த மூலையில இருக்குற அவன் ஆள சரியா கண்டுபிடிச்சு, சிக்னல் கொடுக்குறானே எப்படி ? பதிலுக்கு அங்கிருந்தும் சிக்னல் வரது தான் ஆச்சர்யம்.
பரிட்சை அறை. நான் சூப்பர்வைஸர். ஒருத்தன் லேசா இருமுனான். பக்கத்துல இருந்த பொண்ணு வேகமா தண்ணி பாட்டில நீட்டுச்சு. எனக்கு காதுல புகை.
இன்னொருத்தனுக்கு பேனாவுல இங்க் தீர்ந்துடுச்சு. 'சார்'னு எழுந்திருச்சு தயங்கி தயங்கி 'பேனா வேணும்'னு கேட்டான். 'யார்கிட்டயாவது பேனா இருக்கா'னு கேக்க வாய தொறந்தேன். அதுக்குள்ள 2 பெஞ்சு தள்ளி இருக்குற ஒரு பொண்ணு வேகமா எழுந்திருச்சு அவனுக்கு பேனாவ நீட்டுச்சு.எனக்கு மூக்கு வழியா புகை.
நானும் தான் பல பரிட்சை எழுதியிருக்கிறேன். இங்க் தீர்ந்திருக்கு. என்னைய நக்கலா பார்த்துட்டு வேக வேகமா எழுதுவாங்க. "எழுத முடியாம இவன் ஃபெயிலானா தான் நிம்மதி"னு நினைச்சிருப்பாங்களோ.
தீபாவளி முடிஞ்ச மறுநாள்.
வகுப்பு முடிஞ்சது.
எல்லாரும் கிளம்பிட்டாங்க.
நான் மைக்க அணைச்சுட்டு, லேப்டாப்ப மூடினேன்.
ஒரு பொண்ணு, நான் ஒருத்தன் கரடி மாதிரி நிக்குறதயும் கண்டுக்காம, கையில டப்பாவோட "அவன்"கிட்ட போய் "ஹேப்பி தீபாவளி" சொல்லி அவனுக்கு மட்டும் ஸ்வீட் கொடுத்துச்சு.
நானும் தான் நாலரை வருஷம் காலேஜுல படிச்சேன்.
எங்க வகுப்புலயும் நிறைய பேர் படிச்சாங்க. டப்பா ஸ்வீட் வேணாம். அட்லீஸ்ட் ஒரு புளிப்பு முட்டாய் கூட கொடுத்ததில்ல. frown emoticon
feeling பொறாமை.
"நீயெல்லாம் ஏண்டா காலேஜ் படிச்ச ?"- என்னைய நானே கேட்டுக்குறேன்.