Contraceptives (குடும்ப கட்டுப்பாடு சாதனங்கள்) பற்றிய என் வகுப்பு. 


19 வயது மாணவ மாணவியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வகுப்புக்கு மட்டும் தூங்காம கவனிப்பாங்க. சந்தேகமெல்லாம் கேப்பாங்க. 

ஒவ்வொரு சாதனத்தை பற்றியும் விளக்கினேன் :-
1) Condom உபயோகித்தால் Pregnancyஐயும் தடுக்கலாம், HIV/ STD (பால்வினை) நோய்களையும் தடுக்கலாம்.
2) ஒரு முறை காப்பர்-டி (copper -T) போட்டுக்கொண்டால் 10 வருடம் வரை கர்ப்பமாகாமல் தடுக்கலாம். மாற்ற வேண்டாம்.
3) குழந்தை பிறந்த உடனேயே Copper -T போட்டுக்கொள்ளலாம்.
4) Mala-D எனப்படும் மாத்திரைகளை தாய்ப்பால் கொடுக்கும் அம்மா சாப்பிடக்கூடாது.
5) எதிர்பாராத விதமா, அவசரமா, பாதுகாப்பில்லாம உறவு கொண்டா, கர்ப்பத்தை தடுக்க Emergency Pills இருக்கு.
6) குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் (Tubectomy, Vasectomy ) பற்றியும் சொன்னேன்.

45 நிமிஷம்.
கண்ணு சிமிட்டாம கவனிச்சாங்க.

நான் : உங்ககிட்ட ஒரு தம்பதி வறாங்க. என்ன Contraceptive உபயோகிக்க சொல்வீங்க ?
எல்லாரும் ஆளுக்கொரு பதில் சொன்னாங்க.

(வயித்துப்போக்கு வந்தா கொடுக்கும் ORS பற்றி நேத்து வகுப்பு எடுத்தேன். அப்ப நான் கேட்ட கேள்விக்கு ஒருத்தரும் பதில் சொல்லல. ஆனா இன்னைக்கு மட்டும் பதில் சொல்றீங்க. புரிஞ்சு போச்சு டா. உங்கள அப்றமா கவனிச்சுக்குறேன்)

நான் : சரி. நீங்க ஹோட்டலுக்கு போறீங்க. சர்வர் வறார். உங்ககிட்ட என்ன கேள்வி கேட்பார் ?
மாணவன் : இட்லி தோச பொங்கல் இருக்கு. என்ன வேணும்னு கேப்பாரு சார்.

நான் : ஆங். அதே தான். என்ன இருக்குனு அவர் சொல்வார்.உங்களுக்கு என்ன தேவைனு நீங்க தான் Order சொல்லணும்.ஆனா, அவர் நேரா உங்ககிட்ட வந்து, "2 இட்லி சாப்பிடுங்க"னு சொன்னா உங்களுக்கு கோவம் வருமா வராதா ?
மாணவர்கள் : (வரும்னு தலையாட்டினார்கள்)

நான் : அதே தான். ஒரு தம்பதி நம்மகிட்ட வறாங்கன்னா, அவங்ககிட்ட எல்லா சாதனத்த பற்றியும், அதோட Advantage Disadvantage பற்றியும் Sideeffects பற்றியும் சொல்லணும். அவங்க தான், அவங்களுக்கு Suit ஆகுறத select பண்ணிப்பாங்க. படிக்காதவங்க, விவரம் புரியாதவங்களா இருந்தா நாம Suggest பண்ணலாம். புரியுதா ?
மாணவர்கள் : ம்ம்ம்

நான் : சரி. இந்த Techniqueகு பேர் என்ன தெரியுமா ?
மாணவர்கள் : ???

நான் : இதுக்கு பேரு Cafeteria Approach. ஒரு Cafeteriaக்கு (Hotel) போறோம். Menu Cardல எல்லாம் இருக்கும். அதுல உள்ளதுல இருந்து நாம Select பண்ற மாதிரி, நம்மகிட்ட இருக்குற பல சாதனத்துலயிருந்து, தம்பதி அவங்களுக்கு Suit ஆகுற ஒரு Contraceptive சாதனத்த Select பண்ணிப்பாங்க. புரியுதா ?
மாணவர்கள் : ம்ம்ம்

வகுப்பு முடிஞ்சதும், வெளிய நடக்க ஆரம்பிச்சேன்.
ஒருத்தன் வந்தான்.
எப்போதும் ஏதாவது ஏடாகூடமாத்தான் கேள்வி கேட்பான்.
இப்ப என்ன கேக்கபோறானோ ?
எனக்கு தெரியாதத கேட்டுடுவானோ ?
லேசா பதற்றம்.

"சார். Cafeteria Approach பத்தி சொன்னீங்க."
"ஆமாம் பா. Cafeteria Approach. அதுல என்ன Doubt ?"

"நம்ம College Cafeteriaவுல இது இருக்கா சார் ?"
????