இன்னைக்கு 18 சுகாதார பணியாளர்களுக்கு, 'ஹீமோ குலோபின் பரிசோதனை செய்வது எப்படி?'னு பயிற்சி கொடுத்து, ரத்த சோகை பற்றி வகுப்பும் எடுத்தேன். கஷ்டப்பட்டு நான் ஹிந்தியில பேசுனத,உன்னிப்பா கவனிச்சாங்க.நிறைய சந்தேகம் கேட்டாங்க.சந்தோஷமா இருந்துச்சு . 

வகுப்பு முடியிற நேரத்துல,"கடைசியா ஏதாவது சந்தேகம் இருக்கா?"னு கேட்டேன். ஒருவர் கேட்டாரெ ஒரு கேள்வி: "டாக்டர் சார், உங்களுக்கு எப்போ சார் கல்யாணம்?". என்ன பதில் சொல்றது ? சிரிப்பு தான் வந்துச்சு.
அது ஏன் எப்போ பார்த்தாலும் எல்லாரும் சுத்தி சுத்தி அதே கேள்விய கேக்குறாங்க ? கல்யாணம் அவ்ளோ முக்கியமா? கல்யாணம் கட்டிகுறது பெரிய சாதனையா என்ன ?

கடுப்பேத்துறாங்க.


1) வேலைக்கு லேட்டா போனா திட்டுறாங்க. எனக்கு அப்புறம், இன்னும் லேட்டா, பணிக்கு வந்தவரை ஒன்னுமே சொல்லலை.
"ஏன் சார் அவர மட்டும் திட்டல"னு கேட்டா, "அவர் ஃபேமிலி மேன்"னு பதில்.அப்போ எனக்கு மட்டும் ஃபேமிலி இல்லையா? என்னை என்ன தவுட்டுக்கு வித்துட்டாங்களா ? ஊர்ல எனக்கும் அப்பா, அம்மா, பாட்டி தாத்தானு ஃபேமிலி இருக்குங்க . 


2) மெஸ்ஸு க்கு நான் நடந்தே போய் சாப்பிடுறேன்.ஒரு பையனுக்கு மட்டும் அறைக்கே போய் சாப்பாடு கொடுத்தாங்க. அவருக்கு மட்டும் ஏன் இந்த கவனிப்பு ? கேட்டா , அவர் கூட பெண் (மனைவி)இருக்கிறாராம். 


3) "இட்லி தோசை செய்ய மாட்டீங்களா?"னு கேட்டா ,"சீக்கிரம் கல்யாணம் கட்டிக்கோங்க"- சமையல் செய்பவரின் பதில்.


4) "ரொம்ப நாளா நீங்க வரலையே. கல்யாணம் ஆயிடுச்சா சார்?"- தோபி.


5) "உனக்கு என்ன .நீ சிங்கிள்.உனக்கு அந்த சின்ன அறையே போதும்" - நிர்வாகம்.

இப்படி யார பார்த்தாலும்,எங்க போனாலும் வெறுப்பேத்துறாங்க.
உங்களுக்காக நான் கல்யா ணம் கட்டிக்கணுமா ? கல்யாணம் கட்டிக்கிட்டவங்க என்ன பெருசா சாதிச்சுட்டாங்க?

ஒரே ஒரு விஷயத்துக்காக, ஏமாந்து போய், கல்யாணம் கட்டிக்கிட்டவங்ககிட்ட கேட்கிறேன், பதில் சொல்லுங்க பார்ப்போம் : 


1) என்னால ராத்திரி சகெண்ட் ஷோ பார்த்துட்டு,எதைபத்தியும் கவலை இல்லாம,வீட்டுக்கு வர முடியும். ராத்திரி 2 மணி வரை நண்பர்களோட அரட்டை அடிச்சுட்டு,இஷ்டப்பட்டா ரூமுக்கு வருவேன்.இல்லைனா அவங்க அறையிலேயே தூங்கிடுவேன்.உங்களால அப்படி செய்ய முடியுமா? 'கால் கட்டு'னு சரியா தான் பேர் வெச்சிருக்காங்க.


2) "அப்பா.. அப்பா.. சாக்லேட் வேணும்... பார்க் போகலாம் வாங்க...அண்ணன் அடிச்சிட்டான்... அவ கிள்ளிட்டா...ஹோம் வொர்க் எ ழுதி கொடு"னு யாரும் என்னை இம்ச செய்யுறது இல்ல. ரூமுக்குள்ள வந்தா நிம்மதியா தூங்குவேன். உங்களால முடியுமா?


3) "அந்த நகை வேணும், இந்த புடவை வேணும்.இப்பவே வாங்கித் தாங்க"னு நொய்யு நொய்யுனு யாரும் என்னை நச்சரித்ததில்லை. 


4) "வீடுக்காரம்மாவுக்கு உடம்புக்கு முடியல...மாமனார் மாமியார வழியனுப்பணும்"னு இது வரை நான் லீவு போட்டதில்லை, பெர்மிஷன் கேட்டு கெஞ்சியதில்லை. நீங்க எப்படி?


5) "உன் பொண்டாட்டி ரொம்ப பேசுரா டா.கண்டிச்சுவை"னு அம்மா சொல்றதை தலையாட்டி கேட்டுக்கிட்டு, "உங்க அம்மா முக்கியமா? நான் முக்கியமா? முடிவு செஞ்சிக்கோங்க"னு வீட்டம்மா முறைச்சிகிட்டே சொல்றதையும் கேட்குறீங்களே. உங்களுக்கும் பூம் பூம் மாட்டிற்கும் என்ன வித்யாசம்?

டியர் ஏமாந்தாங்கோலீஸ் : நீங்க எல்லா பக்கமும் அடி வாங்குற ஃபுட்பால். கல்யாணம் ஆகாத நாங்க free birds.

# bachelor rocks