மருத்துவம் - தடுப்பூசி


மருத்துவம் 
தடுப்பூசி - பாகம் 1 
**************************

நம் உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி பற்றிய சிறு குறிப்பு
********************************************************** 
Bacteria, Virus போன்ற கிருமிகள் நம் உடலை தாக்கும் பொழுது, அவை உடலுக்குள் புகுந்து, உடலில் இனப்பெருக்கம் (multiplication) செய்துவிடும். கிருமிகள் உடலுக்குள் புகுதலை infection என்று அழைக்கிறோம். இந்த கிருமிகள் நம் உடலுக்கு நோயை (Disease,illness) உண்டாக்கும்.இந்த கிருமிகளுக்கு எதிராக, நம் உடலின் எதிர்ப்பு சக்தி, பல வழிகளில் போராடும்.



நம் உடலின் எதிர்ப்பு சக்தி எவ்வாறு கிருமிகளுக்கு எதிராக போராடும் ?
நம் உடலில் , நோய்களுக்கு எதிராக போராட B-lymphocytes, T-lymphocytes மற்றும் Macrophages என்ற வெள்ளை அணுக்கள் இருக்கின்றது . ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி.
உதாரணம் : macrophageன் பணி கிருமிகளை சாப்பிட்டு (முழுங்கி ) செரித்துவிடுதல்.


முதன் முதல் நம் உடலில் கிருமி நுழையும் பொழுது உடலின் எதிர்ப்பு சக்தி , அந்த கிருமியை அழித்து, infectionஐ நீக்க பல நாட்கள் ஆகலாம். நம் எதிர்ப்பு சக்தி, இந்த கிருமியை பற்றியும் அதன் குணாதிசியத்தை பற்றியும் அதை எப்படி அழிக்க வேண்டும் என்பது பற்றியும் நினைவில்(memory) வைத்திருக்கும். அடுத்த முறை அதே கிருமி தாக்கும் பொழுது, கிருமியை உடனே அழித்து உடலை காக்கும்.


________________________________________________________

தடுப்பூசி(vaccine) எவ்வாறு செயல்படுகிறது ?
தடுப்பூசி நம் உடலில் (குறிப்பிட்ட) நோய் எதிர்ப்பு சக்தியை (immunity ) உண்டாக்கும்.

தடுப்பூசி எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் ?
தடுப்பூசியில், நோய் தாக்கும் அதே கிருமிகள் இருக்கிறது.

"என்னது தடுப்பூசியில் கிருமிகளா?"னு பயப்படாதீர்கள்.
தடுப்பூசியில் உள்ள கிருமிகள் கொல்லப்பட்டிருக்கும் அல்லது அந்த கிருமிகள் செயற்கை முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். அதனால் தடுப்பூசியை , நம் உடலில் செலுத்தியவுடன், 'கிருமியினால் ஏற்படும் infection'ஐ போன்றே தடுப்பூசியும் பாவனை (imitate ) செய்யும். ஆனால் நோயை உண்டாக்காது.
(உதாரணம் : ஒரு கண்ணாடியில் கத்தியின் பிம்பம் தெரிகிறது . பிம்பத்தினால் நமக்கு ஆபத்து இல்லையே. )


தடுப்பூசி செய்யும் இந்த பாவனையால் (நோய் போன்றே imitate செய்தல்) நமக்கு நோய் உண்டாகாது. ஆனால் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் T-Lymphocyteகளையும் , எதிர்ப்பு சக்தியை தரும் antibodiesகளை உண்டாக்கும் B-Lymphocyteகளையும் தூண்டிவிடும்.
(கண்ணாடியில் தெரியும் கத்தியின் பிம்பத்தை பார்த்து, நாம் பயந்து கத்துவது போல், நம் உடலும், ஆபத்தில்லாத தடுப்பூசியை பார்த்து, ஏமாந்து போய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும்.)



கொஞ்ச நேரத்தில் அந்த நாடகம் (நோய் கிருமி தாக்கியது போன்ற பிம்பம் ) முடிவுக்கு வந்துவிடும். ஆனால் T-Lymphocyteகள் இந்த கிருமி பற்றி நியாபகத்தில் வைத்திருந்து, அடுத்த முறை,உண்மையான கிருமி உடலை தாக்கினால், இவை எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி கிருமியை கொன்று உடலை காக்கும் .

_______________________________________________________

"இயற்கையாக நோய் வந்தால், நம் உடல் , எதிர்ப்பு சக்தியை தானாகவே உண்டாக்குகிறது"னு சொல்றிங்களே, அப்புறம் எதற்கு இந்த தடுப்பூசி ? நான் நோயை இயற்கையாகவே பெற்றுக்கொள்கிறேன். எனக்கு தடுப்பூசி தேவையில்லை தானே ?னு சிலருக்கு கேள்வி எழலாம்.

விடை : இயற்கையாக நோய் தாக்கினாலும் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்பது சரி தான். ஆனால் அப்படி இயற்கையாக வரும் நோய்களில் பல ஆபத்தான விளைவுகள் (complications) வரலாம்.நோய் தாக்கிய சிலர் இறந்தும்விடலாம். அதனால் நோய் வராமல் தடுக்கவே தடுப்பூசி போடப்படுகிறது.

ஆதாரம் : Centre for Disease Control and Prevention, Atlanta, USA
http://www.cdc.gov/vaccines/hcp/patient-ed/conversations/downloads/vacsafe-understand-color-office.pdf


தடுப்பூசிகளின் வகைகள் என்ன? இந்திய அரசு இலவசமாக அளிக்கும் தடுப்பூசிகள் என்ன? தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன ?- போன்ற கேள்விகளுக்கு விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.

அன்புடன்,
மருத்துவர். கார்த்திக் பாலாஜி.

Photo: மருத்துவம் 
                         தடுப்பூசி -  பாகம் 1 
                     **************************

நம் உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி பற்றிய  சிறு குறிப்பு
********************************************************** 
Bacteria, Virus போன்ற கிருமிகள் நம் உடலை தாக்கும் பொழுது, அவை உடலுக்குள்  புகுந்து, உடலில் இனப்பெருக்கம் (multiplication) செய்துவிடும். கிருமிகள் உடலுக்குள் புகுதலை infection என்று அழைக்கிறோம். இந்த கிருமிகள் நம் உடலுக்கு நோயை (Disease,illness) உண்டாக்கும்.இந்த கிருமிகளுக்கு எதிராக, நம் உடலின் எதிர்ப்பு சக்தி, பல வழிகளில்  போராடும்.
  


நம் உடலின் எதிர்ப்பு சக்தி எவ்வாறு கிருமிகளுக்கு எதிராக போராடும் ?
நம் உடலில் , நோய்களுக்கு எதிராக போராட B-lymphocytes, T-lymphocytes மற்றும் Macrophages என்ற வெள்ளை அணுக்கள் இருக்கின்றது . ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி.  
உதாரணம் : macrophageன் பணி கிருமிகளை  சாப்பிட்டு (முழுங்கி ) செரித்துவிடுதல்.


முதன் முதல் நம் உடலில் கிருமி நுழையும் பொழுது  உடலின் எதிர்ப்பு சக்தி , அந்த கிருமியை அழித்து, infectionஐ நீக்க பல நாட்கள் ஆகலாம். நம் எதிர்ப்பு சக்தி, இந்த கிருமியை பற்றியும் அதன் குணாதிசியத்தை பற்றியும் அதை எப்படி அழிக்க வேண்டும் என்பது பற்றியும் நினைவில்(memory) வைத்திருக்கும். அடுத்த முறை அதே கிருமி தாக்கும் பொழுது, கிருமியை உடனே அழித்து உடலை  காக்கும்.

  
________________________________________________________

தடுப்பூசி(vaccine) எவ்வாறு செயல்படுகிறது ?
தடுப்பூசி நம் உடலில் (குறிப்பிட்ட) நோய்  எதிர்ப்பு சக்தியை (immunity ) உண்டாக்கும். 

தடுப்பூசி எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் ?
தடுப்பூசியில், நோய் தாக்கும் அதே கிருமிகள் இருக்கிறது.

"என்னது தடுப்பூசியில் கிருமிகளா?"னு பயப்படாதீர்கள். 
தடுப்பூசியில் உள்ள கிருமிகள் கொல்லப்பட்டிருக்கும் அல்லது அந்த கிருமிகள் செயற்கை முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். அதனால்  தடுப்பூசியை , நம் உடலில் செலுத்தியவுடன், 'கிருமியினால் ஏற்படும் infection'ஐ  போன்றே  தடுப்பூசியும் பாவனை (imitate ) செய்யும். ஆனால் நோயை உண்டாக்காது. 
(உதாரணம் : ஒரு கண்ணாடியில்  கத்தியின் பிம்பம் தெரிகிறது . பிம்பத்தினால் நமக்கு ஆபத்து இல்லையே.  )


தடுப்பூசி  செய்யும் இந்த பாவனையால்  (நோய் போன்றே imitate செய்தல்) நமக்கு நோய் உண்டாகாது. ஆனால் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் T-Lymphocyteகளையும் , எதிர்ப்பு சக்தியை தரும்  antibodiesகளை உண்டாக்கும் B-Lymphocyteகளையும் தூண்டிவிடும்.
(கண்ணாடியில் தெரியும் கத்தியின்  பிம்பத்தை பார்த்து, நாம் பயந்து கத்துவது  போல், நம் உடலும், ஆபத்தில்லாத தடுப்பூசியை பார்த்து, ஏமாந்து போய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும்.)



கொஞ்ச நேரத்தில் அந்த நாடகம் (நோய் கிருமி தாக்கியது போன்ற பிம்பம் ) முடிவுக்கு வந்துவிடும். ஆனால் T-Lymphocyteகள் இந்த கிருமி பற்றி நியாபகத்தில் வைத்திருந்து, அடுத்த முறை,உண்மையான கிருமி  உடலை தாக்கினால், இவை எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி கிருமியை கொன்று உடலை காக்கும் .

_______________________________________________________

 "இயற்கையாக நோய் வந்தால், நம்  உடல் , எதிர்ப்பு சக்தியை தானாகவே உண்டாக்குகிறது"னு சொல்றிங்களே, அப்புறம் எதற்கு இந்த தடுப்பூசி ? நான் நோயை இயற்கையாகவே பெற்றுக்கொள்கிறேன். எனக்கு தடுப்பூசி தேவையில்லை தானே ?னு சிலருக்கு  கேள்வி எழலாம்.

விடை : இயற்கையாக நோய் தாக்கினாலும் எதிர்ப்பு  சக்தி உண்டாகும் என்பது சரி தான். ஆனால் அப்படி இயற்கையாக வரும் நோய்களில் பல ஆபத்தான விளைவுகள் (complications) வரலாம்.நோய் தாக்கிய சிலர் இறந்தும்விடலாம். அதனால் நோய் வராமல் தடுக்கவே தடுப்பூசி போடப்படுகிறது.

ஆதாரம் : Centre for Disease Control and Prevention, Atlanta, USA
http://www.cdc.gov/vaccines/hcp/patient-ed/conversations/downloads/vacsafe-understand-color-office.pdf


தடுப்பூசிகளின் வகைகள் என்ன?  இந்திய அரசு இலவசமாக அளிக்கும் தடுப்பூசிகள் என்ன? தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன ?- போன்ற  கேள்விகளுக்கு விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். 

அன்புடன்,
மருத்துவர். கார்த்திக் பாலாஜி.

 (மருத்துவ பகுதியை தமிழில் எளிதாக விளக்க முடிந்த வரை முயற்சித்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்)
(மருத்துவ பகுதியை தமிழில் எளிதாக விளக்க முடிந்த வரை முயற்சித்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்)

மகளிர் தின வாழ்த்து


"நேரமாயிடுச்சு.சீக்கிரம் போய் சாப்பிடுங்க.அப்புறம் வேலை செய்யலாம்."
"ம்ம்ம்.சரி.போறேன்" 

"சாப்பிட்டா தான் உங்களோட பேசுவேன்"
"சாப்பிட்டுட்டேன்னு ஃபோன்ல பொய் சொன்னா ? உன்னால கண்டுபிடிக்க முடியாதே"

"நீங்க என்கிட்ட பொய் சொல்ல மாட்டீங்க."
"பொய் சொன்னா? "

"பொய் சொன்னா சாமி கண்ண குத்திடும்"
"எனக்கு கண்ணு தெரியாம போயிடுமா?"

"ஐய்யோ இல்லீங்க.கண்ணு குத்திடும்னா..குத்திடும்னா..கெடுதல் வரும்னு அர்த்தம்"
"ஓ... அப்ப எனக்கு கெடுதல் வருமா? என்ன கெடுதல் வரும் ?"

"கெடுதல்னா கெடுதல் இல்லீங்க. லேசா..லேசான கஷ்டம்..இல்ல..அதுவும் உங்களுக்கு வராது...பேசாம முதல்ல போய் சாப்பிடுங்க."

# இப்படி 300 கோடி பேர் இருக்கிறார்கள். மீதியுள்ள 300 கோடி பேரை இயக்குகிறார்கள். ஆனால் இவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை...முயற்சிக்கிறேன்.

மகளிர் தின வாழ்த்துகள்.



ஐ.நா சபை - இனியும் அதை நம்பணுமா ? 
********************************************
இலங்கையில் இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஐ.நா சபை குழு ஒன்றை அமைத்து விசாரித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த விசாரணைக்குழுவின் அறிக்கை, சில நாள் முன் சமர்பிக்கப்பட்டது- "Report of the Secretary-General’s Internal Review Panel on United Nations action in Sri Lanka, November 2012".
" இலங்கையில் நடந்த போர்.. ஏற்கனவே தெரிந்தது தானே. இதை ஏன் இப்ப எழுதணும் ?"னு கேப்பீங்க.
இது மற்ற விசாரணைக்குழு அறிக்கை போல் இல்லை.
128 பக்க அறிக்கையில் 1)இலங்கை அரசு 2).விடுதலைப்புலிகள் 3) ஐநா சபை, என மூன்று தரப்பையும் விசாரணைக்குழு நார் நாராக கிழித்து உள்ளது...

ஆமாம்.
ஐநா சபை அமைத்த குழு, ஐநா சபையையே மிகவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது .நம்பவே முடியவில்லை...
விசாரணைக்குழு மீது நம்பக்கத்தன்மை ஏற்பட்டிருக்கு. அதனால் தான் இந்த 128 பக்க அறிக்கையை முழுதும் படித்தேன் . அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான சிலவற்றை மொழி பெயர்த்துள்ளேன்.



அறிக்கையின் முடிவு என்ன தெரியுமா ?
*************************************
"போர் நடந்த பொழுது ஐநா சபை , இலங்கை அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால், மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டது."
இந்த அறிக்கை வெளியான பின்பும், ஐநா சபையை நாம் நம்ப வேண்டுமா ?



August 2008 முதல் – May 2009 வரை நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை தோராயமாக 40,000 . இது ஐநா சொந்தமாக கணக்கெடுத்தது..
".......number of credible sources have estimated that there could have been as many as 40,000 civilian deaths....."



ஐநா சபை, மனித உரிமைகளை மீறிய விடுதலைப்புலிகளை மட்டுமே தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஆனால் (அதே தவறை செய்த ) இலங்கை அரசை கண்டு கொள்ளவில்லை.
" ......The UN repeatedly condemned the LTTE for serious international human rights and humanitarian law violations but largely avoided mention of the Government’s responsibility......."




மனித உரிமை மீறிய இலங்கை அரசை ஐநா அதிகாரிகள் ஏன் எச்சரிக்க வில்லை ?
இலங்கை அரசு தவறு செய்ததற்கான ஆதாரம் இல்லையென்று ஐநா மூத்த அதிகாரிகள் மழுப்புகின்றனர். அது பொய். ஆதாரம் இருந்தது.
"......Senior UN officials said this was because information could not be verified. In fact, information had been verified to a good standard; indeed UN statements on LTTE violations, including the killing of civilians and holding civilians hostage, were based on information verified in the same manner......"



"பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள்" என்று ஐநா அதிகாரிகள் தகவல் சொன்னார்களே தவிர , "இலங்கை அரசு பயன்படுத்திய நாசரக ஆயுதத்தால் தான் கொல்லப்பட்டார்கள்" என்பதை ,தெரிந்திருந்தும் , அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை

" Numerous UN communications said that civilians were being killed in artillery shelling, but they failed to mention that reports most often indicated the shelling in question was from Government forces. The UN condemned the use of heavy weapons in general, and some officials appeared to believe that because such weapons were almost exclusively used by the Government that this was a sufficient means of raising Government responsibility."


இலங்கை அரசை பகைத்துக் கொண்டால் , 'மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இலங்கை அரசு தடுத்துவிடும்' என்ற காரணத்தினால், இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறல்களை ஐநா மறைத்துவிட்டது. "......the UN almost completely omitted to explicitly mention Government responsibility for violations of international law. UN officials said they did not want to prejudice humanitarian access by criticizing the Government..."



" போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை 'பாதுகாப்பான பகுதி' என அறிவிக்கப்பட்ட இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தர். அந்த இடங்களையும் , மருத்துவமனைகளையும் இலங்கை ராணுவம், குண்டுகளை வீசி கடுமையாக தாக்கி பல அப்பாவிகளை கொன்றது"
"....From January 2009 onward, Government forces carried out intense artillery shelling which killed or injured many civilians – whether in makeshift IDP sites in the NFZs, at hospitals, or in UN compounds."



"...விடுதலைப்புலிகள், நன்கு அறிந்தே, வேண்டுமென்றே , பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில், தங்கள் அலுவலகத்தையும், ராணுவ தளவாடங்களையும் வைத்திருந்தனர். அங்கிருந்தே தாக்குதல் நடத்தினர். தப்பித்துச் செல்லும் பொதுமக்களை சுட்டு வீழ்த்தினர்"
" The LTTE wilfully placed their offices and military equipment near IDP sites and civilian installations and fired mortars and light arms from the vicinity of areas with civilians, and it shot civilians who tried to escape."


" 2008 இறுதியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்க இடமும் கழிப்பறையும் இல்லாமல் தவித்தனர்.January 2009 இல் அவர்கள், தங்களை குண்டு மழையிலிருந்து காத்துக்கொள்ள , மண்ணில் குழி வெட்டி பதுங்கி இருந்தனர். March 2009ல் சாப்பாடும், மருத்துவ வசதியும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர்."
" in late 2008, tens of thousands of internally displaced persons (IDPs) had no access to latrines and little to no shelter. ......By January 2009, to protect themselves from shelling, IDPs were living and sleeping in mud-and water-filled trenches. By March 2009, thousands were reported dead from inadequate medical care and lack of food."



" ...February 2009ல் , பாதுக்காகப்பட்ட பகுதியில் , 300,000 பொது மக்கள் தங்கி இருந்தனர். அந்த இடத்தை, இலங்கை ராணுவம், தரை வழி -கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக, ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தி தாக்கினர் "
“From as early as 6 February 2009, the SLA [Sri Lanka Army] continuously shelled within the area that became the second NFZ, from all directions, including land, sea and air. It is estimated that there were between 300,000 and 330,000 civilians in that small area. The SLA assault employed aerial bombardment, long-range artillery, howitzers and MBRLs [unguided missile systems] as well as small mortars, RPGs [Rocket Propelled Grenades] and small arms fire ...”

2009 மே மாத துவக்கத்தில் , தோல்வியை நெருங்கிய புலிகள், சமாதானத்திற்காக ஐ.நா வை அணுகினார்கள். ஐ.நா வும் தயாராக இருந்தது. ஆனால் இலங்கை அரசு அதற்கு மறுத்துவிட்டது."
"....early May 2009 .....LTTE was nearing total defeat, some of its members contacted senior UN officials to ask for their help in facilitating a surrender........The Chef de Cabinet asked the Government to allow him to fly into the conflict zone to witness a surrender and act as a guarantor of safe passage. The Government refused and the UN believed it could not attempt further follow-up........"


May18 அன்று, விடுதலைப்புலிகளின் மீதம் இருந்த தலைவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள் . "புலிகள் அவர்களுக்குள்ளாகவே தாக்கிக்கொண்டு இறந்துவிட்டார்கள்" என அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில், அவர்கள் சமாதனத்திற்காக ஆயுதம் ஏதும் இல்லாமல் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்தவர்கள். அவர்களை இலங்கை ராணுவம் கொன்றுவிட்டது
"By 18 May 2009 most of the remaining LTTE leadership was reported killed. The Government claimed they died in armed engagements, possibly at the hands of other LTTE fighters. Other credible sources said many were executed, including some who on the morning of 18 May had crossed into Government-held territory unarmed and with white flags...."


Throughout the final stages of the conflict, Member States did not hold a single formal meeting on Sri Lanka, whether at the Security Council, the Human Rights Council or the General Assembly.



Reference :

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/The_Internal_Review_Panel_report_on_Sri_Lanka.pdf



இன்னைக்கு கிராமங்கள்ல உள்ள வீடுகளுக்கு போய் ,சுகாதார பணியாளர்கள், சரியா மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தாங்களானு சரி பார்த்தேன். 

காலையில இருந்து சாயங்காலம் வரை தெருத் தெருவா அலைஞ்சேன். உதவிக்கு ஒரு ASHA ( social health activist ,திருமணமான பெண் ) கூடவே வந்தார்.


என்னோட பேசிக்கிட்டே வருவார். ஆண்கள் யாராவது எதிரே வந்தா, உடனே முகத்த மூடிப்பார்-இது ஹரியானா வழக்கம்.
திருமணமான பெண்களுக்கு மட்டும் தான் இந்த கட்டுப்பாடு. ஆரம்பத்துல எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. ஆனா போகப் போக கோவம் வந்துச்சு.



"பெண்கள் வெக்கத்துல முகத்த மூடிக்குறாங்க"னு நினைச்சா அது தப்பு .
தன்னோட முகத்த, வயசுல பெரிய ஆண்கள்கிட்ட காட்ட கூடாதாம். மீறி முகத்த மூடாம தெருவுல நடந்தா, "அந்த வீட்டு மருமகள பாரு..வெக்கமே இல்லாம தெருவுல நடக்குறா"னு கிராம மக்கள் அவதூறு பேச ஆரம்பிச்சுடுவாங்களாம்.



முகத்த மூடிக்கிட்டு தெருவுல நடக்குறது எவ்வுளோ சிரமமா இருக்கும் ?எருமைகளுக்கு தீனி போட தலையில பெரிய பெரிய புல் கட்டுகளோட, முகத்த துணியால மூடிக்கிட்டு,தெருவுல பெண்கள் நடந்து போறது மனசுக்கு கஷ்டமா இருக்கும்.



நிமிஷத்துக்கு ஒரு தடம் முகத்த மூடுறது ரொம்ப சிரமம். இத எந்த பெண்ணும் விரும்பி செய்யறது இல்லை. கட்டுப்பாடு.(நம்ம ஊர்லயும், நிமிஷத்துக்கு ஒரு தடவ , சேலைய சரி செய்யுற பெண்கள பார்த்திருக்கேன். அதுக்கு வேற காரணம்.)


"திருமணமான பெண்ணை வேற ஆண் பார்க்கக் கூடாது. அதுக்கு தான் முகத்த மறைக்குறாங்க"னு காரணம் சொன்னாங்க. சின்ன வயசு பெண்கள் முகத்த மூடுறதுல இந்த காரணம் சொல்லலாம்.ஆனா 40,45 வயசு பெண்ணும் வயசுல பெரிய ஆண்கள பாத்தா முகத்த மூடிக்கொள்வார். இதுல என்ன லாஜிக் இருக்கு ?


பல இடங்கள்ல ,எதிர்ல வந்த பெண்கள பார்த்து, "யார் இது ? தெரியலையே.முகத்த திறந்து காட்டுங்க "னு ASHA சொன்னார். முகத்த திறந்ததுக்கு அப்புறம் தான் பேச ஆரம்பிச்சார் .


ஆஹா.
மனுசங்க நாம நல்லாவே முன்னேறி இருக்கோம்.


இந்த போட்டோவ ராக்கெட்டுல ஒட்டி, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்க. அங்க உயிரினம் இருந்தா,'பூமியில மனுசனுங்க எவ்ளோ முன்னேறி இருக்குறாங்க'னு தெரிஞ்சிகட்டும்

பாலாஜி.


திருவண்ணாமலை 
******************* 
அண்ணாமலையார் கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்ட பார்த்ததும், "கோயில கட்டுனது அந்த சோழ ராஜா. கும்பாபிஷேகத்துக்கு உதவுனது எங்க செல்ல ராஜா"னு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. 
கூடவே,"இளையராஜாவை தொட மறுத்த சங்கராச்சாரியார்" என்ற செய்தியும் உறுத்தலா நினைவுக்கு வந்தது.ஒரு ராஜாவை தொட பரதேசிக்கு கொடுத்து வைக்கல. அவ்வுளவு தான். 


பெண்கள், சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் நழைய தடை.
நட்டம் யாருக்கு ? ஐயப்பனுக்கு தான ? வருமானம் போச்சே.
குருவாயூர் கோயிலுக்குள் நுழைய பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பு.
நட்டம் யாருக்கு ? கோயிலுக்கு தான. அவர் பக்தி பாட்டு போச்சே.


திருப்பதி,குருவாயூர் கோவில் நழைவாயில்களில் ,
"இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நழைய தடை"னு பெரிய அறிவிப்பு பலகை வைத்திருப்பார்கள். மனுசங்க கட்டுன கோயிலுக்குள்ள, "மனுசங்க நுழைய தடை"னு மனுசங்களே எழுதி வெச்சிருக்காங்களே. இவங்கெல்லாம் மூளை வெக்குறதுக்கு முன்னாடியே அவசரமா பிறந்தவர்கள் .


கருவறை நுழைவு போராட்டங்கள் நினைவுக்கு வந்தது.
சிலையும் சாதியும், கோயிலும் கருவறையும் நாம உருவாக்குனது தான.
"எங்கள உள்ள விடுங்க"னு எதுக்கு போராடணும் ?
மதியாதார் தலைவாசல ஏன் மிதிக்கணும் ?
சண்ட போட்டு ,உரிமை வாங்கி, உள்ள போய் தான் சாமிய கும்பிடணுமா ?
ஈஸ்வரன் கோயிலுக்குள்ள விடலைனா என்ன, முனீஸ்வரன் கோயில் இருக்கே.


போராட்டம் தீர்வல்ல.
புறக்கணிப்பு தான் தீர்வு .
உள்ள விடலையா ?
"போடா. உன் சிலை எனக்கு *** போச்சு"னு போயிட்டேயிருக்க வேண்டியது தான்.


பாலாஜி.

இன்று சென்னை-டெல்லி, இனிமையான விமான பயணம்.
*****************************************************


1) டெல்லி ஃப்ளைட்டுக்குள்ள ஏறுனதும்,"ஒரு வேள இது பிரிட்டீஷ் ஏர்வேஸா இருக்குமோ ?"னு ஒரு சந்தேகம். 
ஆமா பின்ன எல்லாரும் இங்கிலீசுல தான பேசுறாங்க.
60 வயசு தமிழ்நாட்டு மாமா ," can i get an english newspaper"னு பணிப்பெண்கிட்ட பீட்டர் விட்டார்.
டீ ஷர்ட் போட்ட தமிழ்நாட்டு அக்கா, தன்னோட 6 வயசு பொண்ணுகிட்ட இங்கிலீஷ்லயே அதட்டி உதார்விட்டுகிட்டு இருந்தாங்க.


"ஃப்ளைட் கிளம்ப போகுது. போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யங்க"னு அறிவிச்சதும் ,எல்லா இங்கிலீஷ் துரைகளோட சாயமும் வெளுத்துடுச்சு: "நான் ஃப்ளைட்ல ஏறிட்டேன் மா", "பாப்பாவ பத்திரமா பாத்துக்கோங்க" , " அம்மு நான் வரட்டா" " ம் கிளம்பிட்டேன் " "டாடிக்கு பை பை சொல்லு"- ஆஹா….இந்த இங்கிலீஷ் நடிகர்கள், வீட்டுக்கு ஃபோன்ல பேசுறப்போ மட்டுமாவது தமிழ்ல பேசுறாங்களே.


2) கரும்பு சாறு தான் இனிப்பா ?
கிடையவே கிடையாது.
ஸ்கர்ட் போட்ட பணிப்பெண்கள் சிரிச்சுகிட்டே , புரியாத பாஷையில கொஞ்சி கொஞ்சி பேசுறது தான் இனிப்பு.


3) " apple laptop யூஸ் பண்றீங்க. இப்படி இண்டீசெண்டா பொட்டலத்துல சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்களே?"னு பக்கத்தில் இருந்த ஒரு தமிழர் இங்கிலீஷில் என்கிட்ட நக்கல் கேள்வி கேட்டார்.
எனக்கு பயங்கர கோவம்.
" எங்க தோட்டத்து எழுமிச்சை பழத்த வெச்சு, என் பாட்டி செஞ்ச சாப்பாடு இது. எனக்கு என்ன பிடிக்கும் எவ்ளோ சாப்பிடுவேனு அவங்களுக்கு தான் தெரியும். இத எங்க வீட்டு வாழையிலையில வெச்சு ஆசையா கட்டி கொடுத்தது என் அப்பா .
இத சாப்பிடுறதுல என்ன indecency இருக்கு ?
இந்த ஃப்ளைட்ல கொடுக்குற காஞ்சு போன பிரியானிய செஞ்சது யார் தெரியுமா ? எப்பொ செஞ்சாங்க தெரியுமா ?
சில்வர் ஃபாயில்ல சுத்தி கொடுத்தா சுத்தமானதா ?
ஃளைட்டுக்குள்ள இவங்க ரீஹீட் பண்ணி தர சாப்பாடால என்ன நோய் வரும் தெரியுமா?"னு விடாம பதில் கேள்வி கேட்டேன்.
நக்கல் கேள்வி கேட்ட சக பயணி பதில் ஏதும் சொல்ல முடியல.
laptop உபயோகிச்சாலும் சாப்பாட கையால எடுத்து வாய் வழியா தான சாப்பிட முடியும் ?


4) பணிப்பெண் : மேடம் குழந்தைய அவன் சீட்டுல உட்கார வெச்சு பெல்ட்டு போட்டு விடுங்க."
பயணி : இவன என் மடிய விட்டு இறக்குனா அழறான் . மடியில வெச்சு நான் பாத்துக்குறேன் .

பணிப்பெண் : மேடம், ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க. இப்போ 15 ஆயிரம் அடி உயரத்துல பறக்குறோம். கொஞ்ச நேரத்துல லேண்டிங் . அவசியம் குழந்தைக்கு பெல்ட்டு போடணும்.

சரினு அந்த அம்மா , ரெண்டர வயசு வால் பையன, பக்கத்து சீட்டுல உக்கார வெக்குறாங்க.
வீல்ல்ல்ல்னு சத்தம்.
பையன் அலாரம் அடிச்ச மாதிரி அழுதான்.
பணிப்பெண் காத மூடிகிட்டார்.
எல்லா பயணிகளும் திரும்பி பாக்குறாங்க.

பணிப்பெண் : ஓகே ஒகே மேடம் . குழந்தைய மடியிலேயே வெச்சுக்கோங்க.

பணிப்பெண் ஒரு ரெண்டர கிட்ட பணிஞ்சிட்டார்.
அது ! யார் கிட்ட ? நடக்குமா ?
யசோதையாலேயே வால் பையன அடக்க முடியலையாம். நீங்கள்லாம் எம்மாத்திரம்?



5) ஒரு 80 வயது முதியவருக்கு அவசரமா பாத்ரூம் போகணும். கதவ தட்டினார்.தள்ளினார்.
"உள்ள இன்னொருவர் இருக்கிறார், கொஞ்சம் பொறுங்க"னு பணிப்பெண் சொன்னது கூட அவரால் புரிஞ்சிக்க முடியல.
எல்லாருக்கும் சிரிப்பு.


6) அருகில் 55 வயது மருத்துவர் .என்னைப் பற்றியும் என் ஃபோனை பற்றியும் விசாரித்தார். திடீர்னு "உனக்கு எப்போ கல்யாணம்?"னு கேட்டுவிட்டார் .
எனக்கு ஆச்சர்யம் .
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"
"உங்க ஃபோன்ல உங்க ஃபோட்டோவ ஸ்கிரீன் ஸேவரா வெச்சுருக்கீங்க.கல்யாணம் ஆகியிருந்தா மனைவி போட்டோவ தான் வெச்சிருப்பீங்க.வெச்சே ஆகணும்.இல்லைனா நடக்குறதே வேற."
அடா அடா அடா. என்ன ஒரு தத்துவம் ? எல்லாம் அனுபவம்.


7) ஃப்ளைட் தரை இறங்குது.
ஷ்ஷ் ஆஆ னு மெல்லிய சத்தம்.
திரும்பி பார்த்தேன்.
30 வயசு பெண் , பயத்துல கண்ண இறுக்கமா மூடிகிட்டு, தன் கணவர் கைய அழுத்தமா பிடித்திருக்கிறார்.
ஏதாவது அசம்பாவிதம்னா ரெண்டு பேரும் தான மேல போய் சேரணும்? கணவரால் மனைவிய எப்படி காப்பாத்த முடியும் ?
இதுல அறிவுக்கு வேலையே இல்ல. காப்பாத்த முடியாது தான்.
ஆனா துணைகிட்ட மட்டுமே கிடைக்கும் பாதுகாப்பு . நம்பிக்கை உணர்வு.
சீக்கிரம் என் கையையும் யாராவது பிடிப்பாங்க.


 இறங்குறப்போ , பைலட் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார்.
பயணிகளும், "ஸ்மூத் லேண்டிங். தேங்க்யூ"னு அவருக்கு நன்றி தெரிவிச்சாங்க.
எத்தன தடவ நாம பேருந்து, ரயில்கள்ல பயணிச்சிருப்போம்.
பத்திரமா நம்மல கொண்டு சேர்த்த அந்த ஓட்டுனர்களுக்கு நாம் நன்றி தெரிவிச்சிருப்போமா ?


9) ஆண்களுக்கு , பெண்களுக்கு , நடக்க முடியாதவர்களுக்குனு 3 வித கழிப்பறை. அட.
இது போல பேருந்து நிறுத்தங்கள்லயும் நடக்க முடியாதவர்களுக்கு தனி கழிப்பறை வெக்கலாமே ?

நடக்க முடியாதவர்களுக்கு தனியே சக்கர நாற்காலி. அவர்களை அதில் அமர்த்தி விமானம் வரை அழைத்து வர அன்பான பணியாட்கள்.

நம்ம ஊர் பேருந்து படிகட்டுகளில் இவர்களால் எப்படி ஏற முடியும் ?
'ஒரு நாள் நமக்கும் வயதாகும்'னு நினைப்பிருந்தால், வயதானவர்களுக்கும் ஏற்ற மாதிரி பேருந்துகளை வடிவமைத்திருப்பார்கள்…


10) ஒரு 70 வயசு பாட்டி, வேகமா பெல்ட்டில் வந்த பெரிய பயண பைய இறக்க முடியாம சிரமபட்டார்.
நான் இறக்கி கொடுத்ததும் , "நன்றி தம்பி"னு என் தலையியில கை வெச்சு வாழ்த்துனாங்க.
இருந்தாலும் அந்த 70 வயசு பாட்டிக்கு நான் தம்பியா ?

வெளிய வரப்போ, ஒரு தம்பதி ட்ராலியில பயண மூட்டைகள வெச்சு, அது மேல 2 குட்டி குழந்தைகள உட்கார வெச்சு, தள்ளிகிட்டே வந்தாங்க. விளையாடிக்கிட்டே வந்த அந்த 2 பொடிசுகளும், என்னய பாத்து சிரிச்சுகிட்டே "பை அங்கிள்"னு சொன்னதுடன் சந்தோஷமான பயணம் முடிவுக்கு வந்தது..

பாலாஜி.




Second hand smoke/புகை


------மருத்துவம்-------

கேள்வி பதில் - பகுதி 1
**********************************
Second Hand Smoke
*************************
பீடி சிகரட் குடிப்பவர்களுக்கு, இருதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய் என பல நோய்கள் வரும் என்பது தெரிந்தது தான்.

அது போல் ,பீடி சிகரட் குடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமாமே. பீடி சிகரெட் புகையினால், புகை பழக்கம் இல்லாத பெண்களும் அப்பாவி குழந்தைகளும் பாதிப்படைவார்களாமே . உண்மையா ?
உண்மைதான்.

அது எப்படி ?
இதை புரிந்து கொள்ள, முதலில் "Second hand Smoke" பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

________________________________________________________

1) "Secondhand smoke" என்றால் என்ன ?
ஒருவர் பீடி/சிகரெட் குடிக்கும் பொழுது, புகையிலை எரிக்கப்படுகிறது. புகையிலை எரிவதால் வெளியேரும் புகை “sidestream” smoke எனப்படும்.
பீடி/சிகரெட் பிடிப்பவர் வாய்வழியாக புகையை உள்ளே இழுத்து வெளியே வெளியிடுவார் அல்லவா. அப்படி அவர் வெளியிடும் புகை “mainstream” smoke எனப்படும்.

“Sidestream” smoke மற்றும் “Mainstream” smoke என்ற இந்த இரண்டு வகை புகையையும் "Secondhand smoke" என்று பொதுவாக அழைக்கிறோம்.

அதாவது புகை பிடிப்பவர் வெளியேற்றும் புகை தான் இந்த "Secondhand smoke". இதனை அருகில் இருப்பவர் (புகை பழக்கம் இல்லாதவர்) சுவாசிப்பார். அவருக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

_______________________________________________________

2) "Secondhand smoke"ல் உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் ஏதாவது இருக்கிறதா ?
இருக்கிறது.
"Secondhand smoke"ல் கிட்டத்தட்ட 4000 வேதிப்பொருட்கள் இருக்கிறது.
அவற்றுள் 250 வேதிப்பொருட்கள் உடலுக்கு தீமை ஏற்படுத்தக்கூடியவை. உதாரணம் : கார்பன் மோனாக்ஸைட் ,அமோனியா, ஹைட்ரஜென் சயனைட்.


________________________________________________________

3) "Secondhand smoke"கினால் நம் உடலுக்கு என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் ?
மிகக்குறைவான அளவு Secondhand smoke கூட உடலுக்கு தீங்கு தான் .
இந்த புகை நம் வாழ்நாளை குறைத்துவிடும் (premature death).
சுவாசக்குழாய்களை பாதிக்கும் .
இருதயம் மற்றும் இரத்தக் குழாய்களை உடனடியாக பாதிக்கும் . இருதய நோய் வரும் சாத்தியம் 30 % அதிகரிக்கும்.

ஆதாரம் : California Environmental Protection Agency, Office of Environmental Health Hazard Assessment.Proposed Identification of Environmental Tobacco Smoke as a Toxic Air Contaminant: Part B Health Effects, 2005.

______________________________________________________


4) "Secondhand smoke"கினால் குழந்தைகளுக்கு ஏதும் பாதிப்புகள் இருக்கிறதா ?
"Secondhand smoke"கினால் குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் உண்டாகும் .
அவை :
# காதில் சீல் கோத்துகொள்ளுதல்
# நியூமோனியா.
# ஆஸ்த்மா.
குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி குறைந்துவிடும்.
அடிக்கடி இருமல், சளி பிடிக்கும் .

ஆதாரம் : The Health Consequences of Involuntary Exposure to Tobacco Smoke: A Report of the Surgeon General. Rockville, MD: U.S. Department of Health and Human Services, Centers for Disease Control and Prevention, Office on Smoking and Health, 2006.


________________________________________________________


5) கருவுற்றிருக்கும் பெண்களுக்கு "Secondhand smoke"கினால் ஏதும் பாதிப்புகள் இருக்கிறதா ?
"Secondhand smoke"கினால் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும்.
அவை :
பிறக்கும் குழந்தை எடை குறைவானதா இருக்கும் ( Low Birth Weights. )
அந்த பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையின் நுரையீரல் பலவீனமா இருக்கும்.
பிறக்கும் குழந்தை , 1 வயதிற்குள், காரணமில்லாமல் திடீரென இறந்து போகும் ஆபத்து அதிகம் (Sudden Infant Death Syndrome)


______________________________________________________


6) புகை பிடிப்பவர்களுக்கு புற்று நோய் வரும் என்பது தெரியும். அதே போல், புகை பிடிக்காதவர்களுக்கு, "Secondhand smoke"கினால் புற்று நோய் வர வாய்ப்பிருக்கிறதா ?

ஆம். புகை பிடிக்காதவர்களுக்கும் , "Secondhand smoke"கினால் பல வகையான புற்று நோய வர வாய்ப்பிருக்கிறது.

அவை :
# நுரையீரல் புற்று நோய் (30 % அதிக ஆபத்து)
# மார்பக புற்று நோய்
# தொண்டை புற்று நோய்
# மூக்கினுள் உள்ள சைனகளில் புற்று நோய்
# இரத்த புற்று நோய்
# குழந்தைகளுக்கு மூளை புற்று நோய்

ஆதாரம் : U.S. Department of Health and Human Services. How Tobacco Smoke Causes Disease: The Biology and Behavioral Basis for Smoking-Attributable Disease: A Report of the Surgeon General. ,CDC, 2010.


________________________________________________________

7 ) புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு "Secondhand smoke"கினால் எப்படி கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளது ?
"Secondhand smoke" ல் குறைந்தபட்சம் 69 கேன்சர் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் (Carcinogens) இருக்கிறது .
அவற்றுள் சில :
# அர்ஸனிக்
# பென்ஸீன்
# பெரிலியம்
# கேட்மியம்
# குரோமியம்
# நிக்கல்
# எதிலீன் ஆக்ஸைட்
# பொலோனியம் 210 .
# வினைல் குளோரைட்
காற்றில் கலக்கும் இந்த வேதிப்பொருட்களால், அருகில் இருக்கும் புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும், புற்று நோய் வரும் வாய்ப்புள்ளது.

ஆதாரம் : National Toxicology Program. Report on Carcinogens. Eleventh Edition. U.S. Department of Health and Human Services, Public Health Service, National Toxicology Program, 2005.


________________________________________________________


 "Secondhand smoke"ன் ஆபத்துகளிலிருந்து தப்பிக்க வழி இருக்கிறதா ?
வீடு, அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் புகைபிடிக்கக் கூடாது. இது தான் ஒரே வழி.


Secondhand smokeஐ தவிர்க்க சில டிப்ஸ் :
********************************************
நீங்கள் புகை பிடிப்பருடன் வசித்தால், அவரை வெளியே சென்று புகைக்குமாறு சொல்ல வேண்டும்.
வெளியே சென்று புகைக்க அவர் மறுத்தால், வீட்டினுள் ஏதாவது ஒரு அறையில் மட்டும் அவர் புகைக்க சொல்ல வேண்டும்.
அல்லது நீங்களும் குழந்தையும் இல்லாத நேரத்தில் மட்டும் புகைக்கலாம்னு சொல்ல வேண்டும்.
வீட்டு ஜன்னலை திறந்து வைத்து தூய காற்று உள்ளே வர செய்யலாம்.
மின்விசிறியை உபயோகித்து புகையை வெளியேற்றலாம்.
அவர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட உதவி செய்ய வேண்டும்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் , வீட்டினுள் புகைக்க கூடாதுனு சொல்லிவிட வேண்டும்.

நீங்கள் அடுத்தவர் வீட்டிற்கு சென்றால், அவரிடம் தன்மையா பேசி, உங்கள் அருகில் புகைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருமல் தொந்தரவு , கண் எரிச்சல் இருக்குனு சொல்லிடுங்க.

_______________________________________________________

அன்புடன் ,
மருத்துவர்.கார்த்திக் பாலாஜி.




Secondhand smoke பற்றி மேலும் தெரிந்து கொள்ள:
**********************************************

1)http://www.cdc.gov/tobacco/data_statistics/fact_sheets/secondhand_smoke/general_facts/index.htm

2) http://www.tobaccofreekids.org/research/factsheets/pdf/0104.pdf

3) http://www.epa.gov/smokefree/healtheffects.html

4)http://kidshealth.org/parent/asthma_center/preventing_flareups/smoking_asthma.html

5) http://womenshealth.gov/smoking-how-to-quit/secondhand-smoke/

6) http://www.epa.gov/smokefree/pdfs/trifold_brochure.pdf




"தீ விபத்தால் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் நடிகை சுகுமாரியை,மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்" -செய்தி.


சில சந்தேகங்கள் 
***************
# "அமைச்சர்கள் தன்னிடம் தெரிவிக்காததால் தான், தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவுவது தனக்கு தெரியவில்லை" என்று காரணம் சொன்ன முதல்வருக்கு, நடிகையின் தீ விபத்து செய்தி மட்டும் உடனே தெரியவந்தது எப்படி ?


# மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திரு.வைகோ பல நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது, "எதற்காக நடைபயணம் இருக்கிறார்" என்றே தெரியாத முதல்வருக்கு, நடிகை பற்றிய செய்தி மட்டும் எப்படி தெரியவந்தது ?


# கல்லூரிகளுக்கு அரசாங்கமே விடுமுறை அளிக்கப்படும் அளவிற்கு மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில்,பேச்சுவார்த்தை நடத்தி அதை முடிவிற்கு கொண்டு வர, நேரமில்லாத முதல்வருக்கு , நடிகையை சந்திக்க மட்டும் நேரமிருக்கிறதா ?

அப்படியானால் தமிழகத்தில் உள்ள பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளை சினிமாக் கல்லூரிகளாக மாற்றி, எல்லாருக்கும் அரிதாரம் பூசி நடிகர்களாக்கிவிடட்டும் . அப்பொழுதாவது முதல்வரை சந்திக்க முடியுமே.


# தமிழகத்தில் உள்ள (?) கூடங்குளத்தில், 500 நாட்களுக்கு மேல் மீனவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒரு முறை சந்தித்து பேச நேரமில்லாத முதல்வருக்கு, நடிகையை சந்திக்க மட்டும் நேரமிருக்கிறதா ?



# முதல்வர் சினிமாத்துறையில் உள்ளவர்களை மட்டும் தான் சந்திப்பாரா ?


தங்கத்தாரகை-காவிரித்தாய்-ஈழ அன்னை-இதய தெய்வம்-மாண்புமிகு-புரட்சித்தலைவி டாக்டர்.அம்மா அவர்கள் இதற்கு பதில் சொல்வாரா ?

பாலாஜி.





“தேசப்பற்று


பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தடை விதித்தபொழுது, "தேசப்பற்று" என்று சிலிர்த்து எழுதினார்கள்.

ஆனால், 'இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்யும் இலங்கை'யின் கிரிக்கெட் வீரர்களுக்கு,தமிழகத்தில் விளையாட தடைவிதித்த உடனே,"இனவெறி" என்று தமிழர்களை கிண்டல் செய்கிறார்கள். 
பொதுவாக வடஇந்திய ஊடகங்கள் தான் அப்படி பிரச்சாரம் செய்யும்.

# ஆனால் நம்மூரில் இருந்து செயல்படும் "தி இந்து" நாளிதலே, இனவெறியெர்கள் என்று நம்மை தூற்றுகிறதே !

# இந்து நாளிதழுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமா ? இல்லை இதனையும் துரத்த வேண்டுமா ?
கோபப்பட்டு பத்திரிக்கை பிரதிகளை யாரும் எரிக்கக் கூடாது.நாம் புத்த மண்ணில் பிறந்தவர்கள்.


பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கும் வன்முறை கூடாது. நாம் காந்தி தேசத்தில் வாழ்பவர்கள்






கிட்னி தேவை

"கிட்னி தேவை"- இன்றைய ஹிந்து நாளிதழில் விளம்பரம்.

125 ஆண்டுகளா நாளிதழ் நடத்துபவர்களுக்கு, இந்த விளம்பரம் 'சட்டப்படி குற்றம்'னு தெரியவில்லையா ?

ஏற்கனவே,காசுக்காக கிட்னி விக்குற அவலம் நாடு முழுதும் நடந்துகிட்டுயிருக்கு. அதுல பாதிக்கப்படுறதும் ஏமாற்றப்படுவதும் ஏழைகள் தான். இந்த நேரத்துல இப்படி ஒரு விளம்பரம் வந்தா...? 

'ஸ்ரீ லங்கா ரத்னா' விருது வாங்கின பத்திரிக்கையில் இனி இப்படியும் விளம்பரம் செய்வார்கள்- "சின்ன வீடு தேவை","40 தொகுதிக்கு வேட்பாளர் தேவை- லஷ்கர் இ தைபா", "கொலை செய்ய கூலிப்படை தேவை"

பாவிகளா,காசு கொடுத்தா எதை வேண்டுமானாலும் விளம்பரம் செய்வீர்களா ?

- பாலாஜி 






" சேலம் அரசு பொது மருத்துவமனை- பிரசவத்திற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், நிறைமாத கர்ப்பிணி பெண்ணை செவிலியர் திருப்பி அனுப்பினார்.பிரசவ வலியுடன் வெளியேறிய அந்த ஏழைப்பெண் வணிக வளாகம் ஒன்றில் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பகுதியில் இருந்த பெண்களே பிரசவம் பார்த்தனர்"- செய்தி. 

பெண் முதலமைச்சராக இருக்கும் மாநிலத்திற்கு இதைவிட அவமானம் வேறு கிடையாது.

# உடனே விசாரணை நடத்த வேண்டும். அதிகபட்சம் 2 நாள்.
# அரசு ஊழியர் குற்றவாளி என தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இந்த பெண், அரசு ஊழியரின் கன்னத்தில் பொளிச்சென அறைய வேண்டும்.இதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டும். இதுவே மருத்துவதுறையில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு பாடமாக இருக்கும்.

- பாலாஜி



"ஈழத் தமிழர் நலனுக்காக, திக்கோயாவில் மருத்துவமனை கட்ட,48 கோடி நிதி உதவி செய்தது இந்திய அரசு" - தமிழக காங்கிரஸ்.

# திக்கோயா எங்கயிருக்கு, ஈழம் எங்கயிருக்குனு வரைபடத்துல பாத்துட்டு,அப்புறம் அறிக்கை கொடுங்க காங்கிரஸ் கார். 
ஏ.. தப்பிக்கவா பாக்குற.



உலகை உலுக்கிய புகைப்படம் - 1
******************************
ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ?

# 2010 பிப்ரவரி மாதம். நியூயார்க்கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் தீ பரவத்தொடங்கியது. மனித மூளை மழுங்கும் சமயம் இது. இந்த நேரத்தில் நாம் என்ன செய்திருப்போம் ? என்ன செய்வதென்று தெரியாமல் கூச்சல் போடுவோம்.

ஆனால் படத்தில் இருக்கும் 18 வயது பெண் Vanessa Scott என்ன செய்தார் தெரியுமா ? வீட்டில் இருந்த Zaniwah Alexandra என்னும் 7 மாத சொந்தக்கார பெண் குழந்தையை ஜன்னல் இடுக்கின் வழியே வெளியே அந்தரத்தில் தொங்கவிட்டு கையால் பிடித்துக்கொண்டிருந்தார். ஏன் ?

"உள்ளே மூச்சுவிட முடியவில்லை. தீ பரவத்தொடங்கியது.புகையால் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும் என ஜன்னல் வழியே குழந்தையை காற்றில் தொங்கவிட்டு பிடித்துக்கொண்டிருந்தேன் " என அவர் கூறுகிறார்.

தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

- பாலாஜி



ரத்தக்கொதிப்பு (High Blood Pressure) நோயினால் மூளையின் ரத்தக்குழாய் வெடித்து, இறந்தபோன ஒரு நோயாளியின் மூளை இது. 


ரத்தக்கொதிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி ? அல்லது வந்த பின் கட்டுப்படுத்துவது எப்படி ?
• பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், அதிக நார் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும்.
• நாள் ஒன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான உப்பு மட்டுமே உட்கொள்ளுதல் வேண்டும்.
• ஒவ்வொரு நாளும், குறைந்தது 30 நிமிடங்கள் உடல் செயல்பாடு (உடற்பயிற்சி) செய்ய வேண்டும்.
• அதிக எடை இருந்தால் இரத்த அழுத்தம் ஏற்படும். எடையை குறைப்பதன் மூலம் BPயை குறைக்க முடியும்.
• புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
• மதுவகைகள் உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
• யோகா, தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
• உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதித்து கொள்ள வேண்டும்.
• உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

High blood pressure is the leading risk factor for death in South-East Asia Region, claiming 1.5 million lives each year. It can lead to heart attack and stroke and other health problems.

How can you prevent and control high blood pressure?
• Eat a healthy diet consisting of fresh fruits and vegetables, whole grains, high fibre and low fat.
• Reduce salt intake to less than 5 grams per day
• Do at least 30 minutes of physical activity every day.
• Being overweight can raise blood pressure.Losing weight can lower BP.
• Avoid tobacco use.
• Limit alcohol intake.
• Manage stress positively through yoga, meditation.
• Check your blood pressure regularly.
• Take the medicines regularly as prescribed by your doctor.


Karthik Balajee L
Family doctor

Reference : http://www.searo.who.int/entity/world_health_day/leaflet_didyouknow_hbp_whd_2013.pdf


"உதயகுமாரை நாடு கடத்த வேண்டும்"- அ.இ.அதிமுக ஆதரவு பத்திரிக்கையான 'இதயக்கனி'.

# ஊழல் குற்றட்சாட்டில் நீதிமன்றத்தால் 1300 கேள்வி கேட்கப்பட்ட ஒருவர் கொடநாட்டில் சொகுசாக வாழலாம். ஆனால், மக்களுக்காக போராடுபவர்கள் நாடு கடத்தபட வேண்டுமாம். 

# "கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் பரிந்துரைத்த 17 அம்சங்களை நிறைவேற்ற,6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தேவைப்படும்"-மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ள கால அவகாசம்.
அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த காலவகாசம் கேட்கிறது அரசு. இதுவே போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தானே ?

# இதன் பிறகும் "உதயகுமார் தோற்றுவிட்டார்","போராட்டம்ஊத்திக்கொண்டது" என கேலி கிண்டல் பேசுபவர்களுக்கு என் பதில் :-
"உதயகுமார் தோற்கவில்லை. அரசு ஜெயித்துவிட்டது. அதை உருவாக்கிய மக்கள் தோற்றுவிட்டார்கள். நீங்களும் நானும் இந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."

பாலாஜி






பல்பு வாங்குறது ஒன்னும் புதுசில்ல,பழகிடுச்சு...
ஆனா இன்னைக்கு கூட்டமா போய் பல்பு வாங்குனது ஒரு தினுசா இருந்துச்சு.


எய்ம்ஸ் MD மருத்துவர்களுக்கு, தலைமைப்பண்பு மற்றும் Teaching skills தொடர்பா 10 நாள் training. MBBS மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க வேணும்? Lesson Plan உருவாக்குவது எப்படி ? மருத்துவ தேர்வுக்கு கேள்வித்தாள் உருவாக்குவது எப்படி போன்ற பல பயிற்சிகள கொடுக்குறாங்க. பெரும்பாலும் செய்முறை வகுப்புகள் தான்.

இன்னைக்கு 5வது நாள். நாங்க 9 மருத்துவர்கள்.
செய்முறை பயிற்சி. பயிற்சியாளார் ,"உங்களுக்கு 2 நிமிஷம் தான் அவகாசம்.அதற்குள் 10 கேள்விக்கும் விடையளிக்கணும்"னு சொல்லிகிட்டே அவசர அவசரமா எல்லாருக்கும் ஒரு தாளை கொடுத்தார்.(photoவுல உள்ளது).
stop clockஐயும் துவக்கிவிட்டார்.
"2நிமிஷம்"."ரெண்டே நிமிஷம்" என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொன்னார்.
எங்க எல்லாருக்கும் டென்ஷன்.பரபரப்பா துவங்குனோம்.


முதல் கேள்வி: "உங்கள் பெயரை பின்னிருந்து முன்னாக ரிவர்சில் எழுத வேணும்".
எங்க அப்பாவும்,அவர் மாமனாரும் டிஷ்யூம் போட்டுக்காம இருக்குறதுக்காக, எனக்கு 2 பேர சேத்து பெரிய பெயரா வெச்சுட்டாங்க. தலயெழுத்த தலகீழா எழுதுனேன்.


அடுத்த கேள்வி : 259,314,279,128 - இந்த 4 எண்களையும் கூட்டணும். பேப்பர்ல எழுதி, விரலவிட்டு எண்ணி கூட்டுனேன். அடுத்தது தான் வில்லங்கம். அந்த கூட்டு தொகையிலயிருந்து 0.0054 என்ற எண்ணை கழிக்கணும். ம்க்கும். +2 முடிஞ்ச சமயம்,"தம்பி, கணக்கு பிடிக்கலைனா Mbbs எடுத்துடுங்க"னு அறிவரை சொன்னவர் உருவம் இப்போ கண்ணுக்கு முன். அவர நேர்ல வெச்சிகிறேன்.


அடுத்து ?
"கைய மேல தூக்கி "ஜெய் மாதாஜி"னு கத்தணும்". அமாவாசை பிட்டுக்கு வர காக்காய்ங்க மாதிரி ஒவ்வொருத்தரா கத்துனோம்.


இதுக்குள்ள பாதி நேரம் ஓடிடுச்சு.
"பக்கத்துல இருக்குறவர் பேர எழுதணும்".
இடதுல இருக்குறவர் பெயரையோ வலதுல இருக்குறவர் பெயரையோ எழுதணும்.யார எழுதுறதுனு நான் யோசிக்கவேயில்லை. வலப்பக்கமிருந்த பொண்ணு பேர எழுதுனேன்.
இப்ப தான் ஒருத்தர் ஜெய் மாதாஜினு கத்துனார். அட நம்மல விட மந்தம் போலனு சந்தோஷபட்டுகிட்டே அடுத்த கேள்விக்கு போனேன்.


"சொல்லிக்கொடுக்குற பயிற்சியாளர் பெயர எழுதணும்"-இதெல்லாம் ஒரு கேள்வினு கேக்குறாங்க பாருனு கடிகாரத்த பாத்துக்கிட்டே எழுதிட்டு அடுத்த கேள்விக்கு தாவுனேன்.


"எய்ம்ஸ் எந்த வருஷம் துவங்கப்பட்டது ?"
இப்போ இந்த வரலாறு ரொம்ப முக்கியம்.
1955ஆ ,56ஆ ? யோசிக்கலாம்னு யோசிச்சா ஒரு வேள 57ஆ இருக்குமோனு புது குழப்பம்.
வேண்டாம் ராசா .வேணாம்.
இந்த கேள்விக்கு பதில் எழுதவே வேணாம்னு முடிவு செய்யுறப்போ, ஆளாளுக்கு அவங்க பேர சத்தமா கத்திகிட்டு இருந்தாங்க.என்னாடா இவிங்க எல்லாம் லூசாகிட்டானுங்களானு நினைசிக்கிட்டே அடுத்த கேள்விக்கு போனேன்.
15 நொடி தான் மீதி.


"இருக்கையை விட்டு எழுந்து, உங்கள் பெயரை சத்தமாக சொல்லவும்?"
ஓ இதுக்கு தான் சட்டசப மாதிரி ஆளாளுக்கு பேர கத்திகிட்டு இருந்தானுங்களா.


அடுத்து 8 வது கேள்வி..
படிச்சதும்.....புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
ஒவ்வொருத்தரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துகிட்டோம்.
சிரிப்பு வருது ஆனா சிரிக்க முடியாத நிலை.
யாரும் எதிர்பாராத அந்த விசித்திர வரி :-
"மேலே உள்ள 7 கேள்விக்கும் பதில் எழுத கூடாது.9 மற்றும் 10வது கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவும்"


அதாவது ரெண்டே 2 கேள்விக்கு மட்டும் பதில் கொடுத்தா போதுமாம்.
உலகத்த சுத்தாம, அம்மா அப்பாவ மட்டும் சுத்தி, பழத்த லவுட்டுன பிள்ளையார் மாதிரி, இது வாச்சாங்கோலி ஆட்டமாயில்ல இருக்கு.
பயிற்சியாளர் சொன்னார்,"கொடுத்த instructionஐ ஒழுங்கா படிச்சீங்களா ? You must read all statements before starting.விடை எழுத ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி 10 statementகளையும் ஒரு முறை படிச்சியிருந்தீங்கன்னா,வெறும் 9,10வது கேள்விக்கு மட்டும் பதில் எழுதியிருப்பீங்க. உங்க எல்லாருக்கும் அவசரம்"


5.5 வருஷம் பட்டப்படிப்பு படிச்சிட்டு, 'தென்கிழக்கு ஆசியாவுலேயே சிறந்தது'னு சொல்லிக்குற பல்கலைக்கழகத்துல 3 வருஷம் பட்டமேற்படிப்பு படிச்ச "அறிவாளி"களோட திறம, ஒரே ஒரு கேள்வியுல வெளுத்துடுச்சு. எங்கள மாதிரி ஆளுங்கள நம்பி தான் வருங்கால மாணவர் சமூகம் இருக்குதுங்குறத நினச்சா தான் பாவமா இருக்கு.


பயிற்சி முடிஞ்சு வெளிய வந்ததும் அடக்குன சிரிப்பு மொத்தமா கொட்டிட்டோம். அதுலயும் ஒருத்தன் அவன் பேர கத்துனானே.. யப்பா... என்னமோ கல்யாணத்துல 1000 ரூபா மொய் வெக்குறவன் மாதிரி வகுப்பே அதிர்ந்துச்சு.


பல்பு வாங்கினாலும், இன்னைக்கு ஒரு நல்ல பாடம் கத்துகிட்டோம்.
"விடை எழுதுறதுக்கு முன்னாடி முதல்ல கொடுக்கப்பட்டிருக்கும் instructionகளை முழுசா படிக்கணும்"


பாலாஜி.



இமயமலை பயணம்






இமயமலைக்கு போய் ஞானம் வாங்கி வருவாங்க. நான் குழப்பத்த வாங்கி வந்திருக்கேன்.

கங்கையில river rafting செய்ய 8 நண்பர்கள் நேற்று முன் தினம் கிளம்பினோம்.நக்கல் கேலி கிண்டல்னு ஜாலியா கார்ல உத்திராகண்டக்கு பயணிச்சோம். ரிஷிகேஷுக்கு போய் இமயமலையேறி ஷிவ்புரிங்குற மலைப்பகுதியில ராத்திரி டெண்ட்டுல தங்குனோம். திடீர் மழை. மின்சாரம் இல்ல. செல்போன்ல சார்ஜ் இல்ல.உலகத்துலயிருந்து பிரிஞ்சாச்சு.நாங்களும் இயற்கையும் மட்டும். நேற்று காலையில எதிர்பாராத அதிர்ச்சி செய்தி : "கங்கையில வெள்ளம். அரசாங்கம் எச்சரிக்கை கொடுத்திருக்கு.ஆத்துல இறங்க கூடாது"
ஏமாற்றத்தோட ஊருக்கு கிளம்பினோம்.


# கொட்டுற மழையில ஃபிட்ஸ் வந்த நாய்க்கு முதலுதவி செய்து கொண்டிருந்த தாடி வெச்ச வெளிநாட்டவரை பார்த்ததும், ஆச்சர்யம்.
"ஃபிட்ஸ் நின்னதும் மூளை பாதிப்பால அந்த நாய் அவர கடிக்க நிறைய வாய்ப்பிருக்கு"னு நண்பர்கள எச்சரிச்சிட்டு, தள்ளி நின்னு எதுவும் செய்யத்தெரியாம, குழப்பத்தோட வேடிக்க மட்டுமே பாக்க முடிஞ்சுது.
இந்த ஆபத்தான இந்திய தெருநாய்க்கு வெளிநாட்டு பயணி எதுக்கு உதவணும் ?
அவர் 'சம்பளத்துக்கு வைத்தியம் பார்க்குற வைத்தியர்' கிடையாது.
'உதவி செய்யுறத ஃபோட்டோ எடுத்து அத வெச்சு ஓட்டு பிச்சயெடுக்குற அரசியல்வாதி'யும் கிடையாது.
'ஃபோட்டோவ ஃபேஸ்புக்குல போட்டு லைக்குக்கு அலையுற மனநோயாளி'யும் கிடையாது. சுத்தியிருந்த உலகத்த அவர் கண்டுக்கவேயில்ல.
அப்புறம் எதுக்கு அவர் இதை செய்றார் ?
குழம்ப ஆரம்பிச்சேன்.


# கங்கை கரைக்கு போனேன்.
போலிஸ் தடுப்பு இல்ல.நதியில பயங்கர இறைச்சல். திகிலா இருந்தது.
எப்ப வேணாலும் தண்ணி நம்மை விழுங்கிவிடும். ஆனா கரையோரம் பல சாதுக்கள் கொஞ்சம் கூட சலனமே இல்லாம தகர ஷீட் வீடுகள்ல படுத்திருந்தாங்க. எந்த நேரத்துலையும் மொத்தமும் தண்ணியில மூழ்கிடும். அத தெரிஞ்சே தான் அங்க படுத்திருக்காங்க. நேரமானதால நண்பர்கள் என்னைய அங்கிருந்து கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போயிட்டாங்க.
ஆனா யாரும் அந்த சாமியார்கள அழைச்சிட்டு போகல. ஏன் ?
இந்த சாமியார்கள் சாக துணிஞ்சிட்டாங்களா?
உலக வாழ்க்கை போதும்னு முடிவெடுத்து தான் அங்க இருக்காங்களா?
அது தற்கொலை முயற்சியா ? இல்ல, உலகத்துலயிருந்து வெளியேறும் விடுதலை முயற்சியா ?


# ஒரு பெட்டிக்கடைக்கு 4 நடுத்தர வயது ஆண்கள் காரில் வந்திருந்தாங்க. ஏற்கனவே நல்லா குடிச்சிருந்தாங்க. பாட்டில கையில வெச்சிகிட்டு குடிச்சுகிட்டே சந்தோஷத்துல ஆடுனாங்க. "இது டெல்லி ரெஜிஸ்ட்ரேஷன் கார். இந்த போதையில வண்டி ஓட்டுனா மலைய விட்டே இவங்க கீழ இறங்க முடியாது. இவங்க எப்படி டெல்லி போய் சேர்வாங்க ? ச்சான்ஸே இல்லை"னு நண்பர் சொன்னார்.
உண்மைதான். தெரிஞ்சே தான் குடிக்குறாங்க. எதுக்கு?
உயிர் ஆசைய விட மதுபோதை மேல அதிக போதையா?
சாமியாருர்களுக்கு தான் குடும்பம் இல்ல. இவங்கள நம்பி நிறைய சொந்தம் இருப்பாங்களே ?


# தஞ்சாவூர்ல mbbs படிச்ச சமயம். சுனாமி அடிச்சுது. உயிர் தப்பி வந்த நூத்துக்கணக்கானவங்கள எங்க காலேஜ் ஆடிடோரியத்துல தங்க வெச்சிருந்தோம்.அவங்க பெயர்கள நோட்டு போட்டு எழுதி வெச்சிருந்தோம். செல்ஃபோன் வசதி கிடையாது. சொந்தங்கள தேடி நிறைய பேர் வருவாங்க. தேடிவந்தவங்களோட பெயர் இல்லைனா அழுதுகிட்டே அடுத்த எடத்துக்கு தேடப்போயிடுவாங்க.
தட்டு, பாய், போர்வைனு தஞ்சைவாசிகள் நிறைய பேர் நாங்க கேக்காமலேயே தானம் பண்ணாங்க. லட்சாதிபதி, கோடீஸ்வரர்கள் பல பேர் ,எல்லா சொத்தையும் இழந்து அடுத்த வேள சாப்பாட்டுக்கே வழியில்லாம அழுதத பார்த்ததும் , வெக்கத்த விட்டு பசிக்குதுனு கேட்டதும்,வரிசையில நின்னு இலவசமா கொடுக்குற தட்டையும் பாயையும் அழுதுகிட்டே வாக்குனத பார்த்ததும் , சுனாமியில சிக்காத என்னையும் என் வாழ்க்கையும் சுத்தமா திருப்பி போட்டுச்சு. "ச்ச... வெறும் பணம்"குற எண்ணம் உருவானது அப்ப தான்.

3 நாள் கழிச்சு நாகப்பட்டினம், பூம்புகார் பகுதியில கல்லூரி சார்பா medical camp நடத்த போனோம். பெரிய பெரிய படகெல்லாம் ஊருக்குள்ள ரொம்ப தூரம் இழுத்து வந்து போட்டிருக்கு சுனாமி. அலையவே பாக்கல..ஆனா தெருவுல ராட்ஷச படுகுங்க தலைகீழா கிடந்தத பாத்ததும் பயம் தொத்திகிச்சு. .இயற்க மேல முதல் முறையா பயம் வந்தது அப்ப தான்.

சுனாமி- எதுவும் தெரியாத கடலோர கிராம மக்கள் ஆயிரக்கணக்கானவங்கள தண்ணி இழுத்துகிட்டு போச்சு. கொத்து கொத்தா அடக்கம் செஞ்சாங்க. கடவுள மேல நம்பிக்கை போக ஆரம்பிச்சது அப்ப தான்.

campல கட்டுகட்டுறது, மருந்து எடுத்து கொடுக்குறதுனு சின்ன சின்ன எடுபிடி வேல செஞ்சேன். அது மட்டுமே தெரிஞ்ச மருத்துவ மாணவன் நான். "திரும்பவும் அல வருது" "அல வருது.ஓடுங்க" னு கிளம்புன புரளிய கேட்டதும், உயிர் பயத்துல எல்லாரும் ஓடுனோம். கடவுள வேண்டுறதுக்கே நேரமில்ல.

நேத்து பாலத்துக்கு மேல நின்னு கீழயிருந்த கங்கைய பார்த்தேன். வெள்ளத்த பார்த்ததும் அதே பயம். பெரிய பெரிய மரங்கள் வேரோட வேகமா அடிச்சுகிட்டு போனது. பிரம்பு ச்சேர்கள் , வீட்டுக்கூரைகள் அதுல மிதந்து வந்துச்சு. இயற்கை மேல பயம். எத்தன பேர் இறந்தாங்களோ ?
பக்கத்துலயிருந்த பிரசித்தி பெற்ற கோயிலுக்கு நண்பர்கள் போனாங்க. எனக்கு போக மனசில்ல. பாலத்துல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டேன்.
சாமி இருக்குற எடத்துல எதுக்கு வெள்ளம் வரணும் மக்கள் சாகணும் ?


# வழி நெடுக்க பெரிய பெரிய பாறைகள்.மலையிலயிருந்து உருண்டு வந்திருக்கு. முதல் நாள் சந்தோஷமா பாட்டு கேட்டுகிட்டு போன சாலையில , அடுத்த நாள் பாறைகள் இருந்தா என்ன தோணும் ? பயம். அதுவும் சில மணி நேரம் முன்னாடி தான் பாறைகள் விழுந்திருக்குனு கேள்விப்பட்டதும் திகில். கார்ல விழுந்திருந்தா உயிர் தப்ப வாய்ப்பேயில்ல . ஜஸ்ட் எஸ்கேப்.

ஜூனியர்கள் சிகரெட் பிடிச்சாலோ குடிச்சாலோ திட்டுவேன். பக்கம் பக்கமா அட்வைஸ் செய்வேன். எனக்கு நேரா குடிக்கவே சங்கடப்படுவாங்க. ஆனா நேத்து திரும்பி வரப்போ, 3 பேர் கொட்டுற மழையில தலையில துண்டு போட்டுகிட்டு நின்னு, ஒரே சிகரெட்ட மாறி மாறி இழுத்து புகை விட்டுகிட்டிருந்தாங்க.எனக்கு கோவமே வரல. "போகட்டும்.சந்தோஷமா இருக்கட்டும்"னு மருத்துவருக்கு வரக்கூடாத சிந்தனை . அவங்கள ஒன்னுமே சொல்லல.
நான் கொஞ்சம் மாறிவிட்டேன்.


# ரிஷிகேஷ்- ஹரித்வார் சாலையில் traffic jam. 20 கிமீ தூரத்துக்கு பேருந்துகளும் கார்களும் வரிசையா நிக்குது..
எதனால ? நிலச்சரிவு தான் காரணமா ? இல்லவே இல்ல.
சின்ன மலைப்பாதையில ஒருத்தர ஒருத்தர் முந்த முயற்சி செஞ்சதால, ஒரு வழிசாலையில தெரிஞ்சே எதிர் திசையில தப்பா வந்ததால, "தான்"குற திமிர் பிடித்த கார் ஓட்டிகளால தான் இந்த பிரச்சனையே.பயணிகள் சிலரே போக்குவரத்த ஒழுங்கு படுத்த ஆரம்பிச்சாங்க. ஆனா ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் 'முதல்ல நான் தான் செல்ல வேண்டும்'னு சுயநலம். வழி விட மனமில்ல. ரிவர்ஸ்ல எடுக்க மாட்டேன்னு ஈகோ. யாராலையும் எதுவும் செய்ய முடியல. நிறைய பேர் சண்ட போட ஆரம்பிச்சாங்க.வாக்குவாதம் முத்தி அடிதடி.கண்ணாடி உடைப்பு. 30 கிமீ தூரத்த கார்ல கடக்க 12 மணி நேரம் ஆனது.


சாலையில விழுந்து கிடந்த பெரிய பாறைகள பார்த்ததுக்கப்புறமும் மக்களிடம் இந்த பிடிவாதம் இருக்குமானால், கங்கை வெள்ளத்துல அடிச்சுகிட்டு போன வீடுகள பாத்துக்கப்புறமும் இந்த ஈகோ இருக்குமானால், அதுவும் படிச்சவர்களிடம் இவ்வுளவு சுயநலம், முட்டாள் தனம் இருக்குமானால், குடித்தால் விபத்து நிச்சயம்னு தெரிஞ்சே குடிப்பார்களேயானால், இந்த உலகத்துல ஏதோ ஒரு தீர்க்க முடியாத பெரிய பிரச்சனை இருக்கு. அதுல இருந்து தப்பிக்க தான் இந்த சாதுக்கள் சாக விரும்புறாங்களா ?


650 கி.மீ பயணம்.
கொஞ்சம் தெளிவு கிடச்சிருக்கு.
ஆனா நிறைய குழப்பம் வந்திருச்சு..


- பாலாஜி


சமீப காலமாக மக்கள் மத்தியில் 2 விஷயம் பரவலாக பேசப்படுகிறது :-
1) ஃபேஸ்புக் ஒரு வெட்டி பொழுதுபோக்கு. இதுனால பிரச்சனை தான் அதிகம்.
2) தமிழ்நாடுல இருக்குற கட்சிகளால மக்களுக்கு எந்த பிரோஜனமும் இல்ல.

இந்த கருத்துக்கள் எந்தளவிற்கு உண்மை ?


நேத்து ராத்திரி 12.50 க்கு ஃபேஸ்புக்கில் இருந்தேன்.
மருத்துவர்.Mariano Anto Bruno Mascarenhasஅவர்களிடம் இருந்து இன்பாக்ஸ்கு ஒரு செய்தி வந்தது:-
"அவசர உதவி தேவை. உத்ராகண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. டெல்லியில் தமிழக மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா? உடனே தெரியப்படுத்தவும்".
(ஃபேஸ்புக்கில் உள்ள பலருக்கு இந்த செய்தி கிடைத்திருக்கும்.)

மருத்துவர். ப்ரூனோ அவர்களை ஃபேஸ்புக் மூலம் மட்டுமே அறிவேன். அவரிடம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால், அவரது ஃபேஸ்புக் பதிவுகளை படித்ததன் மூலம் அவர் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தேன். என் செல்ஃபோன் நம்பரை உடனே அவருக்கு அனுப்பினேன். அடுத்த நொடி செல்ஃபோனில் பேசினார்.

மருத்துவர்.ப்ரூனோ : தமிழக மருத்துவ டீம் காலை ஃப்ளைட்டில் சென்னையிலயிருந்து கிளம்பி மதியத்துக்குள் டெல்லி வந்திருவாங்க. அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க சார்.

நான் : சார், இப்ப டெல்லியில தான் இருக்கிறேன். நான் பாத்துகுறேன் சார். கவல படாதீங்க.


"பாலாஜி என்கிற தமிழக டாக்டர் campக்கு போகிறார்" என்ற தகவலை ப்ரூனோ சார் தமிழக சுகதாரத்துறை உயர் அதிகாரிக்கு (Addl. Director Dept.Public Health) தெரியப்படுத்திவிட்டு, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஃபோன் நம்பரை எனக்கு அனுப்பி வைத்தார். காலை 1.10 க்கு தமிழ்நாடு இல்லத்திற்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே,"சார் சொல்லுங்க. இப்ப தான் தமிழ்நாட்டுலயிருந்து (மேலதிகாரி) பேசினாங்க. இங்க தங்கியிருக்குறவங்களுக்கு ஹிந்தி தெரியல, டெல்லி டாக்டர்ஸுக்கு தமிழ் தெரியல.பிரச்சனையா இருக்கு சார். நீங்க வாங்க"னு சொன்னாங்க.


# தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அனைவரும் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்றவர்கள். அனைவருக்கும் வயது 50+. தமிழ் மட்டுமே தெரிந்த நம் வீட்டு பாட்டி தாத்தா மாதிரி தான் இருந்தாங்க. பெரும்பான்மையானவர்களுக்கு ரத்த அழுத்தம், சக்கிரை வியாதி, இதய தொந்தரவு இருந்தது. நான் அவர்கள பரிசோதிச்சேன். யாருமே emergency நோயாளிகள் கிடையாது. சின்ன சின்ன தொந்தரவு தான். ஆனா எல்லோருக்கும் பயம். உயிர் தப்பி வந்த பயம். ஒவ்வொருத்தர்கிட்டயும் 5,10 நிமிஷம் பொறுமையா பேசினேன். மருந்து எழுதி கொடுத்தேன். எல்லாரும் ஓரளவு அமைதியடைஞ்சாங்க. தமிழக மருத்துவ குழு வந்தடைந்தாங்க. தேவைப்படுற மருந்துகள அவங்களே ஃப்ளைட்ல கொண்டு வந்திருந்தாங்க. பி.பி அப்பரட்டஸ் மட்டும் விமானத்துல எடுத்து வர அனுமதி கிடையாதுங்குறதால, எய்ம்ஸ் அழைச்சிட்டு போய் தனியார் ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தேன். எல்லா செலவும் தமிழக அரசுடையது.


இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது 3 கருத்துக்கள் :-

1) மருத்துவர்.ப்ரூனோ அவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இரவு வரை என் ஃபோன் நம்பர் கூட அவரிடம் கிடையாது. ஆனால் அவர் செய்தி அனுப்பியதற்கும்,எங்கோ டெல்லியில் உள்ள நான், தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதற்கும் சரியாக 20 நிமிடம் மட்டுமே இடைவெளி. அதுவும் உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் இரவு 1 மணிக்கு !

இது எப்படி சாத்திமானது ?
பதில் :- " ஃபேஸ்புக் "

இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ரொம்ப சக்தி வாய்ந்தது. சரியாய் பயன்படுத்தினால் மனிதயினம் முன்னேற பெரும் உதவியாய் இருக்கும். ஆனா இது ஒரு Double edged weapon. இதனை பலர் தவறாய் பயன்படுத்தி தவறு இழைப்பதும், பயன்படுத்த தெரியாமல் வீணடிப்பதும் தான் வேதனையா இருக்கு .


2) தொலைதொடர்பு வளர்ச்சி
*************************
18 வருஷம் முன் தேசிய அளவிலான ட்டோர்னமெண்ட் ஒன்றிற்காக தமிழ்நாட்டில் இருந்து மைசூர் போனோம். திடீர் கலவரம். இரவு நேரம். அப்ப ஃபோன் வசதி கிடையாது. நாங்க போன குழு தனித்தனியா பிரிஞ்சு ஓடினோம். 5 பேர் மட்டும் ஒரு கல்யாண மண்டபத்தின் சமையல் அறையில் ராத்திரி முழுக்க இருட்டில் தங்கினோம். அடுத்த நாள், நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்ததும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நெய்வேலியில் இருந்த பெற்றோர்கள், குழந்தைகளை மைசூருக்கு அனுப்பிவெச்சுட்டு பயந்து போயிருந்தாங்க. எங்களை பற்றிய எந்த வித செய்தியும் அவங்களுக்கு தெரியவில்லை.
காரணம் ? அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே. அதுவும் ஊரில் சிலர் வீட்டுல மட்டுமே தொலைகாட்சி இருக்கும்.
ஆனா, இப்ப நடந்திருக்கும் உத்திராகண்ட் வெள்ள பாதிப்பு பற்றி, எல்லா செய்தி ஊடகங்களும் நிமிஷத்துக்கு நிமிஷம் செய்தி வெளியிடுது. ஹெலிகாப்டரில் போய் செய்தி சேகரிக்குறாங்க. பாதிக்கப்பட்ட உறவினர்களை பற்றி தெரிந்து கொள்ள Helpline கொடுத்திருக்காங்க. இந்த தொலைதொடர்பு வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.


3) பெருமை கொள்ள வைக்கும் தமிழகம்
********************************
"உத்திராகண்டில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை, பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தமிழக முதல்வர் உடனடியா செயல்பட்டு அத்துனை உதவியையும் செய்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக, எதிர்கட்சியை சேர்ந்த தொலைகாட்சிகளில், மக்களின் குறைகளை எடுத்துச் சொல்கிறார்கள். ஆள்பவர்களுக்கு அதை சரி செய்தாக வேண்டிய காட்டாயம். தமிழக அரசியல் கட்சிகளிடையே உள்ள இந்த ஆரோக்கியமான அரசியலை பாராட்டத்தான் வேண்டும். ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் மக்கள் பிரச்சனையை 2 கட்சிகளுமே கண்டுகொள்ளாது.

தமிழ்நாடு பவனில் தங்கியிருந்த தமிழக மக்கள், மனநிறைவு அடைஞ்சு சந்தோஷமாய் தமிழக மருத்துவர்களையும் தமிழக அரசையும் பாராட்டினாங்க. வந்திருந்த அத்தனை தமிழர்களுக்கும் இலவசமா அறை ஒதுக்கி, உணவு அளித்து, மருத்துவ வசதியையும் செய்து கொடுத்து, இலவசமா விமானத்தில் தமிழகம் அழைத்து போகிறது தமிழக அரசு. இது சிலருக்கு சாதாரண விஷயமா தெரியலாம். ஆனா, ஒரிசா, பீகார் மருத்துவ நண்பர்கள் இத கேட்டதும்," உங்க கவர்ன்மெண்ட் இவ்ளோ செஞ்சு கொடுத்திருக்கு. எங்க ஸ்டேட்லயிருந்து எத்தன பேர் போனாங்கனு கூட யாருக்கும் தெரியாது. யூ ஆர் லக்கி பீப்பிள்"னு தமிழ்நாட்ட பாத்து பொறாமையா பேசுனாங்க. உண்மை தான்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவத்துறை மிகச்சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலான health indicatorகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் (சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்தபடியாக).
இந்த பெருமைக்கு யார் காரணம் ?
தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் சுகாதாரத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். தமிழக மக்களின் படிப்பறிவு, விழிப்புணர்வு. "தமிழ் நாட்டு மருத்துவர்களுக்கு தான் அதிக பொறுப்புணர்வு இருக்கு" என்பது எய்ம்ஸில் உள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள துறைத்தலைவர்களின் கருத்து.

தமிழ்நாடு இல்லத்தின் வாசலில் உள்ள இந்த தமிழக அரசு முத்திரையை ஃபோட்டோ எடுத்தேன். அதில் உள்ள 4 தலை சிங்கத்தை பல இடங்களில் பார்த்துள்ளேன். ஆனா அதில் உள்ள கோபுரத்தை இன்று பார்த்ததும் ஏதோ ஒரு ஈர்ப்பு, சந்தோஷம்,பெருமை.
தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற பெருமை.

பாலாஜி.