படிச்ச பள்ளிக்கூடத்துல புதுக்கட்டடம் வந்ததையே பொறுத்துக்க முடியல. கூட படிச்ச பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனத எப்படி பொறுத்துக்க முடியும் ? "பாத்து பாத்து" வெச்சிருந்த சொத்துக்கள எவனோ நேத்து வந்த ஒருத்தன் எடுத்துட்டு போனா, கோவம் வருமா வராதா? அதுல வேற உங்க குழந்தைங்க போட்டோவ போஸ்ட் பண்ணா தாங்கிக்க முடியுமா என்ன ? 

வாத்தியார் திட்டுனதுகெல்லாம் நான் வருத்தப்பட்டதே இல்லை. உங்க முன்னாடி திட்டுவாரேனு தான் வருத்தப்படுவேன். ஏம்மா, உங்களுக்காகத்தானே அன்னைக்கு கஷ்டப்பட்டு படிச்சேன். புரிஞ்சிக்கோங்க. தயவு செஞ்சு "My sweet Husband", "My cute baby"னு உங்க family photoவ போட்டு வெறுப்பேத்தாதீங்க. வேண்டாம். அப்புறம் Unfriend பண்ணிடுவேன்.