நேத்து ராத்திரி அப்பா ஃபோன் பண்ணினார். "சீக்கிரமா பழத்த சாப்பிட்டுடுடா. வழக்கம் போல மறந்து போய் அழுகவிட்டுடாத"னு நியாபகப்படுத்தினார். 'காலையில சாப்பிடுவோம்'னு நினைச்சிருந்தேன். இன்னைக்கு காலையில எழுந்திரிச்சதுமே பயங்கர வாசம். ஆனா நேரமாகிட்டதால சாப்பிடமுடியல. அவசர அவசரமா காலேஜுக்கு போயிட்டேன்.
சாயந்திரம் காலேஜ் முடிஞ்சதும் தான் நினைப்பு வந்துச்சு. 'ரூமுக்கு போனதும் எல்லாத்தையும் தனியா உக்காந்து ஒரு வெட்டு வெட்டணும்'னு ஜொள்ளுவிட்டுக்கிட்டே,வேக வேகமா குவார்ட்டர்சுக்கு வந்து, 6 மாடி படியேறி, பூட்டியிருந்த என் ரூம திறந்தா... அதிர்ச்சி....ஹால்ல மாம்பழத்தோல் சிதறி கிடக்கு (போட்டோ).மொத்தமும் காலி. எனக்கு ஒன்னுமே புரியல.. பூட்டியிருந்த வீட்டுக்குள்ள இருந்த பழத்த யார் சாப்பிட்டிருப்பா ?
உள்ள வர ஒரே வழி ஜன்னல். அது வழியாத் தான் யாரோ வந்திருக்காங்க.
யார் வந்திருப்பா ?
க்ரில் வெச்ச ஜன்னல். அதுல அதிகப்பட்சமா 10 செண்டிமீட்டர் இடைவேளி தான் இருக்கு.
நிச்சயம் 6 மாடி சுவர் ஏறி, ஜன்னல் வழியா நாய் வந்திருக்க முடியாது.
காக்கா வந்திருக்குமோ ?
பெட்ரூமுல, லக்கேஜ் பேக்குல வெச்சிருந்த 1 கிலோ எடையுள்ள பழப்பைய, காக்காவால தனியா ஹால் வரைக்கும் கொண்டு வர முடியாதே.
அப்ப பூன ஏதாவது வந்திருக்குமா ?
வாய்ப்பேயில்ல. தோல் மட்டும் தான் சிதறியிருக்கு. உள்ள இருக்குற பழம் கொஞ்சம் கூட மிச்சமில்ல. பூனையால இவ்வுளவு neatஆ சாப்பிட முடியாது. அதுவும் என்னைய மாதிரி கொட்டைய வழுச்சு வழுச்சி சொரண்டி சொரண்டி திங்க முடியாது. ஒரு கிராம் கூட மீதியில்ல. தோல பாக்க பாக்க கடுப்பாயிருந்துச்சு.
வேற யாரா இருக்கும் ?
ஊருக்கு வெளிய, மக்கள் நடமாட்டமில்லாத இவ்வுளவு பெரிய campus. எப்போதும் பயங்கறமா காத்தடிக்கும். ஒரு வேள பேயா இருக்குமோ ? ச்ச ச. இருக்காது.பேயெல்லாம் கிடையாதுனு மனச தேத்திக்கிட்டேன்.
ஒரு வேள ரூமோட duplicate key வேற யார்கிட்டயாவது இருக்குமோ ?
Wardenக்கு போன் பண்ணி விஷயத்த சொன்னதும், அவர் பயந்து போய் உடனே வந்தார். வேற 'யார்கிட்டயும் சாவி கிடையாது'னு சொன்னவர், 'இது எப்படி நடந்திருக்கும்?'னு ஆச்சர்யப்பட்டார். புலன் விசாரணைய ஆரம்பிச்சோம். யாருக்குமே புரியல.
பக்கத்து ப்ளாட்ல இருந்த ஒரு மருத்துவர், "இங்க எப்பயாவது குரங்கு வரும்"நு புது தகவல் சொன்னார்.
"ஜன்னல் வழியா குரங்கு வருமா ?"
"வரும் சார்"
"10,12 செ.மீ இடைவெளிக்குள்ள குரங்கு எப்படி நுழையும் ?"
"என் ரூமுக்கு அதுவழியா ஏற்கனவே வந்திருக்கு சார் "
ஓஓ....அடிக்கடி வந்திட்டு போற விருந்தாளியா..நான் தான் அலட்சியமா ஜன்னல் கண்ணாடி கதவுகள மூடாம போயிருக்கேன். ஏமாந்த நேரமா பாத்து ப்ளான் பண்ணி அடிச்சிருக்கு.
திமிர் பிசடிச்ச குரங்கு.பழத்த மட்டும் சாப்பிட்டுட்டு, தோல இங்கயே போட்டுட்டு போய் என்னைய வெறுப்பேத்திடுச்சு. தோலையே ரொம்ப நேரம் குறுகுறுனு பார்த்த Warden, என்னமோ டீசல் இஞ்சின கண்டுபிடிச்ச விஞ்ஞானி மாதிரி,"சார்..நிச்சயம் ஒரு குரங்கு வந்திருக்காது. 2,3 வந்திருக்கும் சார்"நு சத்தம் போட்டு சொன்னார்.
ஓ...ஒரு teamமா தான் வந்திருக்கா ?
'Medical Collegeகு வேலைக்கு போறேன்'னு சொன்னதும்,"ஜாக்கிறதையா இருடா. பசங்க ரொம்ப சேட்ட செய்வானுங்க"னு எச்சரிக்க பண்ணி அனுப்புனாங்க. இனிமே,கழுத்துல ID card மாட்டிகிட்டு சேட்டை செய்றவங்களையும் சமாளிக்கணும், ID Card இல்லாம ஜன்னல் வழியா ரூமுக்கு வந்து சேட்டை செய்றவங்களையும் சமாளிக்கணும்...
ஜன்னல் வழியா வந்துச்சுங்க. சரி.
ஆனா 6 மாடி எப்படி ஏறி இருக்கும் ?
Warden என்னைய கூட்டிகிட்டு போய், "இதோ தெரியுது பாருங்க சார் பைப்பு. அது வழியா ஏறி வந்திருக்கும்"நு செய்முறை விளக்கமெல்லாம் கொடுத்தார்.
"இது வழியா 6 மாடி ஏற முடியுமா ?"
"நீங்க வேற சார். குரங்குங்க மனுசன் மாதிரியே பைப்ப பிடிச்சு தாவி தாவி ஏறி வந்திடும் "
என்னது குரங்குங்க மனுசங்க மாதிரி தாவுமா ? சரியாப்போச்சு. அதுங்க தான் Professional. நாம தான் அதுகள பாத்து காப்பி அடிக்கிறோம். விட்டா, 'விஜயகாந்த் படத்த பார்த்து தான் ஜாக்கிஜான் காப்பியடிச்சார்'னு சொல்வீங்க போல..
என்ன இருந்தாலும் குரங்குங்க செஞ்சது ரொமப தப்பு. ஒன்னு கூட எனக்கு மீதி வெக்கல. கேட்டிருந்தா, நானே அதுங்களுக்கு ஆளுக்கொன்னு கொடுத்துட்டு, நானும் 2 பழத்த சாப்பிடிருப்பேன். Selfish monkeys.
















