தில்லியில் உள்ள AIIMSல் திங்கட்கிழமை (20/10/14) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக (வெள்ளி, சனி) ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஜிப்மரில் 5 நாள் விடுப்பு எடுத்து, 20 ஆயிரம் விமான டிக்கெட் செலவு செய்து, 2000 கிமீ கடந்து டெல்லி வந்த எனக்கு அவ்வுளவு மகிழ்ச்சி இல்லை. ஏதோ வெளிநாட்டிக்கு வந்த அனுபவம் தான். சொந்த நாட்டிலேயே அன்னியன் போல் நடத்தப்படுவதாக உணர்கிறேன்.
பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில் முதல் எட்டு வரிசை VIPகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், பட்டம் பெறப்போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் மாடியில் அமர வேண்டும். அவர்களோடு வந்துள்ள பெற்றோர்களுக்கு ஆடிட்டோரியத்தில் இடமில்லை என்பது அதிர்ச்சி தகவல்.
இது என்ன புதுவித நடைமுறை ?
யாருக்கு பட்டமளிக்கப்படுகிறது ? MD,MS, DM, Mch, Phd, MBBS, MSc படித்தவர்களுக்கு. அப்படியென்றால் அவர்களும் அவர்களது பெற்றோர்களும் தானே ஆடிட்டோரியத்தில் அமர வேண்டும். 3 வருடம், 5 வருடம், 6 வருடம் கஷ்டப்பட்டு இரவு பகலாக வேலை செய்து படித்து பட்டம் வாங்குபவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் பட்டம் வாங்குவது தானே சந்தோஷம் ? வாழ்க்கையில் ஒருமுறை நிகழும் நிகழ்ச்சி. இதிலும் ஏமாற்றம்.
பொதுவாக முதல் 2 வரிசையில், எங்களுக்கு பாடம் எடுத்த பேராசிரியர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். ஆனால் இம்முறை 8 வரிசையில் பெரும்பாலும் VIPகள்.
யார் அந்த VIPகள் ? Chief Guestடுடன் வரப்போகும் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள்.
(2007 - 08 காலத்தில் சென்னையில் MBBS பட்டமளிப்பு விழாவிற்கு, அப்போதைய முதல்வர் கலைஞரும், கவர்னரும் வந்திருந்தனர். முதல் வரிசையை தவிர்த்து அனைத்து வரிசையிலும் மாணவர்கள் உட்கார்ந்திருந்தோம். இடம் இல்லாததால் பெற்றோர்களுக்கு வெளியில் பந்தல் போட்டு அமரவைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியை தனி screen மூலம் அவர்களுக்கு ஒளிபரப்பினார்கள்). ஆனா, இங்கே aiimsல் vipகள் என்று சொல்லிக்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு உள்ளே இடம். பெற்றோர்களுக்கு எங்கோ வேறு இடத்தில் வகுப்பறைகளில் இடம். இது தான் பொறுக்க முடியவில்லை.
மருத்துவகள் சார்பா registrarரிடம் பேசினோம். (நான் படித்தகாலத்தில் மருத்துவ சங்கத்தில் Representativeவாக இருந்தேன்). பட்டமளிப்பை காண தமிழகம், கேரளா, கர்னாடகம் போன்ற தொலைதூர மாநிலங்களிலிருந்து பல பெற்றோர்கள் ரயில், விமானம் மூலம் வந்திருந்தனர். இத்தனைக்கும், "பெற்றோரை அழைத்து வாருங்கள்" என்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. "பெற்றோர்களுக்கு குறைந்தபட்சம் பால்கனியிலாவது இடம் ஒதுக்குங்கள்"னு வேண்டினோம். அவர் தன் கையில் எதுவும் இல்லைனு கைவிரித்துவிட்டார். Directorரிடம் பேசினேன். பலர் முன்னிலையில், அவர் என்னை நேரடியாகவே சத்தம் போட்டு அனுப்பிவிட்டார். நாங்கள் சொல்வது தான் சட்டம் என்பது போல் பேசினார். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் இப்படி நடைபெறுவது அதிர்ச்சியாக உள்ளது.
"rehearsalல் பங்கெடுப்போம், பிறகு சங்கத்தின் சார்பாக உரியவர்களுக்கு eMail அனுப்புவோம்" என முடிவெடுத்து உள்ளே சென்றோம். பல பேர் என்னை அழைத்து மிரட்டல் தொனியில் எச்சரித்தார்கள். எதுவும் பேச முடியாது. எல்லா இடத்திலும் காவலர்கள். Bomb squad,மோப்ப நாய்கள்.
நான் செய்த தவறு என்ன ?
நியாயத்திற்காக கேள்வி கேட்டது குற்றமா ?
இத்தனைக்கும் எனது பெற்றோர்கள் சொந்தக்கார்கள் யாரும் வரவில்லை. வந்திருந்த மற்றவர்களுக்காகத்தான் பேசினேன். இந்த நாட்டுல தான் அடுத்தவங்களுக்காக பேசக்கூடாதே. உனக்கென்ன, வாய மூட்டிட்டு போடானு சொல்லிடுவாங்க.
வரவேற்புரை, அறிவிப்புகள் என முழுவதும் ஹிந்தியிலேயே இருந்தது.
"வட இந்திய பல்கலைக்கழகம், ஹிந்தி தான் இந்தியாவின் Official language , அப்படித்தானிருக்கும், பொறுத்துக்கொள்"னு அறிவுரை சொல்பவர்களுக்கு ஒரு தகவல் : இதுவரை இங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் அறிவிப்புகள் இருக்கும். இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் தான் aiimsன் President. மருத்துவர் அன்புமணி ராமதாஸ், குலாம் நபி ஆசாத் அவர்கள் அமைச்சராக இருந்த பொழுது அவர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் அறிவிப்புகள் கொடுப்பார்கள். சென்ற வருடம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தான் chief guest. ஆங்கிலத்தில் தான் அறிவிப்புகள். ஆனால் இந்த வருடம் திடீரென் ஹிந்தி அறிவிப்புகள். அதுவும் 'சுத்தமான’ இந்தி. aiims டைரக்டருக்கே பல வார்த்தைகள் தெரியவில்லை, தவறாக பேசினார் என்று உத்திரபிரதேசத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் தெரிவித்தார்கள். எனக்கு இந்த ஹிந்தி புதுசா இருந்தது. நிறைய வார்த்தைகள் புரியல.
ஏன் இப்படி செய்கிறார்கள் ? யாருக்காக ?
வரப்போகும் Chief Guest ஐ குளிர்விக்கத்தான் இப்படிச்செய்கிறார்கள்.
யார் அந்த Chief Guest ?
aiimsல் இது வரை நான் பங்கெடுத்துள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் கடவுள் வாழ்த்து ஹிந்தியில் தான் ஒலிக்கப்படும். ஆனால், இப்போழுது சமஸ்க்கிருதத்தில் ஒலிக்கப்டுகிறது. நாங்கள் யாரும் இதுவரை கேள்விப்படாத பாடல். என்ன பாடுறாங்கனு யாருக்கும் புரியவில்லை.
எதற்காக சமஸ்கிருத பாடல் ?
ஏன் இந்த திடீர் மாற்றம் ?

7,8 நிமிடம் ஒலிக்கப்படும் இந்த சமஸ்கிருத பாடலில், தொடச்சியாக 6 முறை “நமோ நமஹ, நமோ நமஹ” என்று ஒலிக்கப்படுகிறது. யார் அந்த Chief Guest என்று இப்பொழுது புரிந்திருக்குமே. NaMo நமஹ , NaMo நமஹ.
India is MODIfying.
பாலாஜி