"குழந்தைய கொஞ்ச நேரம் பார்த்துக்கோ டா"னு அக்கா தங்கச்சிங்க கேப்பாங்க. ஏமாந்துடாதீங்க. 

'இதுதென்ன பெரிய கம்பு சுத்துற வேலயா'னு நம்பி வாங்கிடாதீங்க.உஷார்.150 காலேஜ் பசங்கள கூட அடக்கிடலாம். ஆனா இந்த ஒரு குழந்தயோட அழுவய மட்டும் அடக்கவே முடியாது. 

எல்லா அனிமல்ஸ் மாதிரியும் கத்திக்காட்டணும். நம்ம முகத்தசைய ரப்பர் பேண்ட் போல இழுத்துக்காட்டணும். நான்ஸ்டாப்பா அழுவும். தொண்டயில மைக் முழுங்குன மாதிரி அழுவும். ஏன் அழுவுதுனு கண்டேபிடிக்க முடியாது. எந்த பாஷையில பேசிப்புரிய வெக்குறதுனே தெரியாது. தூக்கிட்டு தெருவுல நடக்கணும். எல்லாரும் நம்மளத் தான் குத்தவாளி மாதிரி பாப்பாங்க. 

ஆனா தங்கச்சி வந்ததும் அழுவ ஸ்விட்ச அமுக்குன மாதிரி இன்ஸ்டண்டா அழுவய நிறுத்திட்டு சிரிக்கும். இந்த அவமானத கூட பொறுத்துக்கலாம். ஆனா, தங்கச்சி குழந்தகிட்ட போய், "ஏம்மா அழுற ? மாமா அடிச்சானா மா?"னு கேப்பாங்க பாருங்க, அப்ப வருமே கோவம். 

அப்பாவும் அப்ப தான் டைமிங்கா பாடுவார் : "மாமா மாமா மக்கு மாமா”.


 — feeling loved.