உடம்புல தெம்பில்லனு வயசான பாட்டி எங்க health centreகு வந்திருந்தாங்க. பரிசோதன பண்ண டாக்டர் அவங்களுக்கு சத்து மாத்திரை எழுதிகொடுத்தாங்க. நான் கதவுகிட்ட நின்னுகிட்டிருந்தேன்.
என்கிட்ட வந்த அந்த பாட்டி, "மயக்கமா இருக்கு"னு சொன்னாங்க.
திரும்பவும் BP பார்த்தேன். வேற எந்த தொந்திரவும் இல்ல.
"சரி பாட்டி. இந்த பெஞ்சுல உக்காருங்க. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப செக் பண்றேன்"னு சொன்னேன். கதவுகிட்டயே நானும் நின்னேன்.
பாட்டி உக்காந்துகிட்டு சும்மா இருந்திருக்கலாம். இருந்தாங்களா? இல்லயே.
என்னய கூப்பிட்டாங்க.
திரும்புனேன்.
பென்சுல இருந்த ட்ரேயில இருந்து ஒரு பொட்லத்த எடுத்துகாட்டி,"இது எதுக்கு தம்பி?”னு கேட்டாங்க.
என்னத்த சொல்ல.
பாட்டிக்கு 75 வயசிருக்கும்.
"உங்களுக்கு இது தேவ படாது பாட்டி"னு சொன்னேன்.
அங்க வேல செய்யுற பொண்ணு சிரிச்சுட்டு திரும்பிடுச்சு. அப்பவாவது பாட்டி பேசாம இருந்திருக்கலாம்.
திரும்பவும் "ஏன்"னு கேட்டாங்க.
“பாட்டி இது சின்ன வயசுக்காரங்க குழந்த பொறக்காம இருக்க உபயோகிக்குறது"னு சொல்லி முடிக்கல….
என்னமோ தொடக்கூடாதத தொட்ட மாதிரி, பட்டுனு பொட்லத்த ட்ரேயில போட்டுட்டு, மைக்கேல் மதன காமராஜன் பட பாட்டி மாதிரி தெருவுல எறங்கி ஒரே ஓட்டமா ஓடிப்போயிட்டங்க. தெம்பில்லனு சொன்ன பாட்டியா இது?