“ஒரு வாரத்துல ஆளே மாறிட்ட. ஷேவ்லாம் பண்ணிட்டு…ம்ம். கலக்குற போ”நு அவ சொன்னதும், "சும்மாத்தான்”நு முகத்த திருப்பிக்கிட்டான்.
அழுற மூணு மாச குழந்தையவே சிரிக்க வெச்சிடும் ரகசியம் தெரிஞ்சவளுக்கு, முப்பது வயது இளவழகனின் கோவத்தை குறைக்க வழி தெரியாதா என்ன ?
"மீசை கூட சின்னதாகிடுச்சு போல”
பட்டுனு மீசய தடவிப்பார்த்தான். லேசா சிரிச்சுகிட்டே , “இவ்ளோ மைன்னூட்டா நோட் பண்றியா நீ?”
"இதக்கூட கவனிக்கலைனா நான் என்ன ஃபோட்டோகிராஃபர்?"
“மேடம், நானும் தான் மீடியாவுல இருக்கேன்”
"இருந்து ? என்ன நோட் பண்ணீங்க?
“என்ன நோட் பண்ணல ? உங்கள பத்தி சொல்லவா?”
“சொல்லுங்களேன். ஊருக்கு போயிட்டு வந்ததுல நான் எப்படி சேஞ்சாயிருக்கேன்னு கண்டுபிடிங்களேன் பார்ப்போம்”நு சொன்னது தான் தாமதம், ஹேர் க்ளிப்பிலிருந்து கால்கொலுசு வரை அவளை அவளது டிஸைனர் புடவையையும் மீறி முட்டக்கண்ணால் ஸ்கேன் செய்தான்.
"ஹேய், முகத்த மட்டும் தான் பார்க்கணும்”
"அப்படி எதுவும் ரூல்ஸ் கிடையாது. என் இஷ்டம். இப்ப நான் உமாவ முழுசா ஸ்கேன் பண்ணிட்டேன். ஹோல் பாடி ஸ்கேன். ரிஸல்ட் வேணுமா?”
பல்ல நரநரனு கடிச்சுகிட்டே நகரப்பார்த்தாள். விடுவானா இவன்.அரை மணிநேரமா அவ கைய அவளுக்கே தெரியாம பிடிச்சுக்கிட்டிருக்கானே. அவ்ளோ லேசில் விடமாட்டன்.
….
- தற்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் "மல்லிப்பூ திருடன்" சிறுகதையிலிருந்து ஒரு பகுதி.
பாலாஜி