'பணம் தான் எல்லாம்'
***********************
'பணம் தான் எல்லாம்’
அப்படியா ? சரி.
இதை கொஞ்சம் படியுங்கள்
இந்த படத்தில் இருப்பது தமிழ் நாட்டில் உள்ள ஒரு 'வீடு' தான்.
சுவர் ?
தார் பாயினால் எழுப்பப்பட்டிருக்கிறது.
கதவு ?
ஒரு தகர ஷீட்
கூரை ?
அஸ்பெஸ்டாஸ் ஷீட் .
கழிப்பறை ?
கிடையாது.
அதில் யார் வசிக்கிறார்கள் ?
மனிதர்கள் தான் .
எனக்கு தண்ணீர் கொடுத்து அன்பாய் பேசினார்கள்..கண்ணீரோட நகைச்சுவையா பேசினாங்க.இனிமையான மொழி- தமிழ்.
பல வீடுகள் ஒரே ஒரு பெரிய கூரையின் கீழ் அமைந்துள்ளது. அதாவது ஒரு குடோனில் 15 வருடங்களுக்கு மேலாக, 50 கும் மேற்பட்ட மனிதர்கள் வசிக்கிறார்கள். ஆனா என்னால் அந்த இடத்தில் 10 நிமிடத்திற்கு மேல் உட்கார முடியவில்லை..புழுக்கம்...
இவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது! பிறகு ஏன் இந்த அவல நிலை ?
யார் அவர்கள் ?
மன்னிக்கவும் யார் இவர்கள்?
'அவர்கள்' என்பதற்கும், 'இவர்கள்' என்பதற்கும் வித்யாசம் இருக்கிறது.
'இவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது'
எங்கே இருக்கிறது ?
இலங்கையில் !!
இந்த போட்டோ எடுக்கப் பட்ட இடம் : அகதிகள் முகாம், காட்டுமன்னார்குடி. போர் நடைபெற்றதால், அனைத்து சொத்துக்களையும் இலங்கையில் விட்டு விட்டு உயிரை ம ட்டும் எடுத்துக் கொண்டு, நம்மை நம்பி வந்தவர்கள் .
திரும்பவும் சொல்லுங்கள் - ' பணம் தான் எல்லாம் '.
