வாழ்றதுக்கும் தங்குறதுக்கும் நிறைய வித்யாசம்.
அறை எண் 320, மஸ்ஜித் மோத் டாக்டர் ஹாஸ்டல், எய்ம்ஸ் - இதுல 2 வருசமா தங்கிகிட்டு மட்டும் தான் இருந்தேன்.
15க்கு 10 அடி அறை .
"மனிதர்கள் தங்க லாயக்கற்ற இடம்", "bio hazard"னு நண்பர்கள் கிண்டல் பேசும் அளவுக்கு "சுத்தமா" இருக்கும். மாசம் ஒரு தடவயோ, மூணு மாசத்துக்கு ஒரு தடவயோ வெளியூர் நண்பர்கள் தங்குறதுக்கு வந்தா மட்டும் தான் சுத்தம் பண்ணுவேன். மற்றபடி, ராத்திரி வருவேன், 6 அடி இடம் மட்டும் தயார் செஞ்சுட்டு, அதுல தூங்கி,காலைல பல்கலைக்கழகத்துக்கு ஓடிடுவேன். ஹாஸ்டல்ல யாரும் என்னை எந்த கேள்வியும் கேட்டதில்ல.
2 மாசம் முன்னாடி,பிரசவத்துக்காக, கர்ப்பமா இருந்த தங்கைய அழைச்சிகிட்டு அப்பா, அம்மா வந்தாங்க.
முதல் நாள்
**********
அம்மா : போன தடவ நான் வெச்சிட்டு போன சாமி படமெல்லாம் எங்கடா ?
நான் : அங்க தான் இருக்கும்.
அம்மா : சிலையெல்லாம் காணோமே ?
நான்: எங்கயாவது இருக்கும். தேடி பாருங்க.
நான்,ஒவ்வொரு தடவயும், அறைய சுத்தப்படுத்துறப்ப, சாமி சிலை கீழ விழுந்து உடஞ்சிடும். படமெல்லாம் ஏதோ மூலையில என்னைய மாதிரியே குப்பையோட குப்பையா கிடக்கும். இத சொன்னா அம்மா வருத்தப்படுவாங்க. திட்டு விழும். "தேடிப்பாருங்க"னு சொல்லிட்டு நழுவிட்டேன்.சாயங்காலம் அறைக்கு வந்தேன். அம்மா எதுவும் பேசாம உம்முனு இருந்தாங்க.
தங்கை : தப்பு செஞ்சா கூட, அத ஒழுங்கா செய்ய தெரியலடா.
நான் : யேன் ? என்னாச்சி ?
தங்கை : உடஞ்ச சிலையெல்லாம் ஜன்னலுக்கு வெளிய போட்டுவெச்சுருக்க. அம்மா எல்லாத்தையும் பாத்துட்டாங்க.
நான் : ???
அறைய சுத்தப்படுத்துனாங்க. தினமும் விளக்கேத்தி பூஜை.
ஹாஸ்டல் அறைய, வீடா மாத்தி, வாழ்ந்தாங்க.
ஹாஸ்டல்ல இருந்த பல குடும்பங்கள் அம்மாவுக்கு பழக்கமாகிட்டாங்க. வீட்டுக்கு நிறைய பேர் வந்து போக ஆரம்பிச்சாங்க.
ஆனா சின்ன அறையில 4 பேர் தங்குறது எவ்ளோ சிரமம்.
நடக்க கூட இடமில்ல. உக்காரவும், உருளாம படுக்கவும் தான் இடமிருக்கும். இதே அறையில சமையல். பேஸ்ட்,துண்டு, செருப்புனு எதுவும் வெச்சது வெச்ச இடத்துல இருக்காது.சத்தம் போடுவேன். தேடி கொடுப்பாங்க. தினகரன் மட்டும் தான் ஒரே தமிழ் செய்தித்தாள். இவங்களுக்காக அறைக்கு வரவழைச்சோம். காலையில எழுந்ததும், அப்பா, அம்மா, நான் மூணு பேரும் அத படிக்க சண்ட போட்டுப்போம். என் லேப்டாப்புக்கு அப்பா போட்டி. ஃபேஸ்புக்ல டிமிட்ரி,ஹன்ஸானு நிறைய பேருக்கு விசிறியாகிட்டார்.தங்கை, என் லேப்ட்சாப்ல தான் மாப்ளயோட skypeல பேசுவா. எனக்கு தான் சுதந்திரம் பறிபோன மாதிரி.
அடிக்கடி சண்ட போடுவேன்.
15 நாள் முன்னாடி குழந்த பிறந்தது.
4 பேர் தங்குன அறையில இப்போ 5 பேர்.
புதுசா வந்தது நைய்யி நய்யினு அழுதுகிட்டே இருக்கும். தங்கை பால் கொடுத்ததும் தூங்கிடும். திரும்பவும் எழுந்து அழ ஆரம்பிக்கும்.அத பாக்கவே நிறைய பேர் வருவாங்க. எனக்கு துளியும் பழக்கமில்லாத வட இந்திய குடும்பம், அறைக்கு வர ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. அம்மாவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனா இவங்க நண்பர்கள். குழந்தைய அந்த வீட்டு அம்மா தான் குளிப்பாட்டுவாங்க.
ஒரு நாள் காலை,
தங்கை : குளிச்சியே, சோப்பு எப்டிடா இருந்துச்சு ?
நான் : என் சோப்ப காணோம். ஏதோ வெள்ள கலர் சோப்புல குளிச்சேன். ஆனா கொஞ்சம் கூட வாசனயே இல்ல.
தங்கை (சிரிச்சுகிட்டே) : நீ குளிச்சது பேபி சோப்பு டா.
நான் (அவமானத்த மறச்சிக்கிட்டு) : ஒன்னுத்துக்கும் பிரோஜனமில்லாத சோப்பு. குழந்த வாய திறந்து சொல்ல முடியாதுங்குறதால கம்பனிகாரங்க ஏமாத்துறாங்க.
தங்கை : (சிரிப்ப நிறுத்தவேயில்ல)
2 நாள் முன்னாடி பரதேசி படம் பார்த்தேன்.
மனசுல துக்கம் தொத்திகிச்சு. ஏதோ கோவம். எதுவும் செய்ய முடியாத ஆற்றாமை. வீட்ல இருந்த எல்லார் மேலயும் எரிஞ்சி எரிஞ்சி விழுந்தேன். யாரும் எதுவும் பேசல. அம்மா மட்டும்,
"இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம். அதான் நேரம் சரியில்ல"னு அமைதியா சொன்னார்.
'காற்றோட்டம் இல்லாத சின்ன அறையில குழந்தைய வெச்சிருக்ககூடாது'னு, முந்தா நாள் சண்ட போட்டு ,அவசரமா அவங்க 4 பேருக்கும் சென்னைக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணினேன்.
நேத்து ப்ளைட்.
எனக்கு முக்கியமான வகுப்பு. வழியனுப்ப போக முடியல.
ஃபோன் பண்ணேன்.
நான் : பத்திரமா ஏர்போர்ட் போயிட்டீங்களா ?
அப்பா (டெல்லி விமான நிலையத்துலயிருந்து) : வந்துட்டோம். க்யூவுல நிக்கிறோம்.
நான் : இறங்குனதும் ஃபோன் பண்ணுங்க.
அப்பா : சரி டா. ரூம்ல 4 அவிச்ச முட்ட வெச்சிருக்கோம். நீயும் ஃரெண்ட்சும் சாப்பிடுங்க.
நான் : (என்ன பேசுறதுனு தெரியல. 'துரத்திவிட்டதே நான் தான்'னு குற்ற உணர்ச்சி.)
சாயங்காலம் அறைக்கு வந்தேன்.
யாருமே இல்ல. திடீர்னு அறை ரொம்ப பெருசா தோணுச்சு.
ஏ.சி போட்டுவெச்சிட்டே போயிருக்காங்க. அதனால அறை எப்போதுமில்லாத அளவுக்கு ரொம்ப ஜில்.
பேச்சு , சண்ட,அழுவைனு இருந்த இடத்துல இப்போ முழுஅமைதி.
வழுச்சி எடுத்த மாதிரி சுத்தமான அறை.
நான் மட்டும் தனி ஆள்.
போட்டிக்கு யாருமே இல்லை.
பெரிய மெத்தை. தனியா தூங்கலாம்.
எவ்வுளவு வேணாலும் ஃபேஸ்புக் பார்க்கலாம். கண்டிக்க யாருமில்ல.
சொர்க்கம் தான்.
ஆனா…. ஏதோ வித்யாசம்.
ஏதோ இல்லாத மாதிரி.....
நய் நய்னு குழந்த அழுதப்போ நால்லாத்தான் தூங்கியிருக்கேன். ஆனா நேத்து ராத்திரி சரியா தூக்கமில்ல.
"கலவரம். நிறைய பேர் கத்தியோட சண்ட போடுறாங்க. வெட்டிக்குறாங்க. ரத்தம்.பிணம். கார் ஓட்டி தப்பிக்கிறேன். …"-இப்படி ஒரு திகில் கனவு .
இன்னைக்கு காலைல எழுப்ப யாருமில்ல.
செல்ஃபோன் அலாரம் எழுப்பிவிட்டது.
ராத்திரி நான் அவிழ்த்து போட்ட துணிகள் அதே இடத்துல கிடந்துச்சு..
தினகரன் பத்திரிக்கை தரையில் மடித்தபடியே. படிக்கவேயில்ல. போட்டிபோட யாருமில்ல.
பேஸ்ட், துண்டு, செருப்புனு எல்லாம் நான் வைக்கும் அதே இடத்தில். சுலபமா எடுத்துட்டு குளிக்க போனேன்.
பாதி குளியல்ல தான் கவனிச்சேன். அதே வெள்ள சோப்.
காதல், குடும்பம், நட்பு - மூணுக்கும் பொதுவான ஒரு விஷயம் :- "பிரிஞ்சதுக்கப்புறம் தான் அருமை புரியும்"
- பாலாஜி.