நான் திமிரு புடிச்சவன் தான். 
மெடிக்கல் rep கொடுத்த giftகள வேணாம்னு சொன்னேன். 
திமிர் பிடிச்சவன்னு கேலி பேசுனாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு திமிராவே சொன்னேன்.

அறிமுகமானவங்களையும், பிடிச்சவங்களையும் மட்டும் தான் Fbல friendஆக்கிப்பேன்னு சொன்னேன்.
திமிர் பிடிச்சவன்னு சொன்னாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு திமிராவே சொன்னேன்.

"ஒரே ஒரு நாள் வாங்க. ஒரு மாச சம்பளம் தறோம்"னு தனியார் கல்லூரியில கூப்பிட்டாங்க.
'inspection அன்னைக்கி மட்டும் வேல செய்யுற மாதிரி கணக்கு காட்டி அரசாங்கத்த ஏமாத்துற வேலை. முடியாதுனு சொன்னேன்.
பொழைக்க தெரியாதவன்னு கிண்டல் பேசுனாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு திமிராவே சொன்னேன்.

அணுவுலைக்கு எதிரா எழுதுறப்போ, வெளிநாட்டுலயிருந்து காசு வாங்கிட்டு எழுதுறேன்னு குத்தம் சொன்னாங்க.
account நம்பர் pan card எல்லாத்தையும் காண்பிச்சு மறுத்ததும், வீம்பு பிடிச்சவன்னு சொன்னாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு திமிராவே சொன்னேன்.

காசு வாங்கிட்டு அரசியல்வாதிக்கு ஜால்ரா அடிச்சு எழுதமுடியாதுனு சொன்னேன்.
திமிர் பிடிச்சவன்னு சொன்னாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு திமிராவே சொன்னேன்

சுத்தி நடக்குற தப்ப கண்டுக்காதீங்க. காச வாங்கிக்கிட்டு வேலைய மட்டும் பாருங்கனு சொன்னாங்க.
சம்பளத்துக்கு வேல பாக்குறவன் தான். ஆனா பணத்துக்கு வேலை பாக்குறவன் இல்லை. வாய் கண்ணை மூடிகிட்டு வேலை பார்க்க முடியாதுனு சொல்லி வேலைய உதறினேன். பொழைக்கத் தெரியாதவன்னு கேலி பேசுறாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு திமிராவே சொன்னேன்.

வரதட்சணை வேணாம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.
பொழைக்கத் தெரியாதவன், உலகம் புரியாதவன்னு கேலி பேசுறாங்க.
ஆமாம் நான் அப்படித்தான்னு பதில் சொன்னேன்.

எல்லாத்துக்கும் பதில் வெச்சுருக்கேன்.
திமிராத்தான் பதில் வெச்சுருக்கேன்.
ஆனா, "உனக்கு ஏன் டா இன்னும் கல்யாணம் ஆகலை"னு கேலி பேசுறாங்க.
இதுக்கு மட்டும் என்கிட்ட பதில் இல்லை.

ஒருத்தன சாய்ச்சு பாக்குறதுல தான் உங்களுக்கு எவ்வுளவு சந்தோஷம் ?