கரைந்துபோன உப்பணை
***************************
வறண்டபூமி !
எத்தனை எத்தனையோ ஆறுகள்
கடந்து போயின !
எத்தனை எத்தனையோ நதிகள்
வந்து போயின !
சொட்டு நீர் கூட
தேங்கியதில்லை
தங்கியதில்லை !
பாலை பூமி
வளமில்லா வற்றிய பூமி !
***************************
வறண்டபூமி !
எத்தனை எத்தனையோ ஆறுகள்
கடந்து போயின !
எத்தனை எத்தனையோ நதிகள்
வந்து போயின !
சொட்டு நீர் கூட
தேங்கியதில்லை
தங்கியதில்லை !
பாலை பூமி
வளமில்லா வற்றிய பூமி !
ஒரு பெளர்ணமி மாலையில்
தெற்கிலிருந்து
தவழ்ந்து வந்த ஒரு சிறுநதி
பாலை பூமியை
பிரியத்துடன் தீண்டியது !
அன்புவெள்ளமாய் வந்த
ஆழமான சிறுநதிக்கு
வற்றியநிலத்தின் மீது
வற்றாத காதல் !
வேறெங்கும் போகாமல்
வந்த இடத்தில் தங்கிவிட்டது !
அன்பாற்றின் அரவணைப்பில்
சிறுநதியின் பெருந்தன்மையில்
செழிப்பானது பூமி !
சந்தோஷ மலர்கள்
பூக்கத்தொடங்கின
வளங்களும் கனிகளும்
நிரம்பி வழிந்தன !
பாலை மருதமானது !
தெற்கிலிருந்து
தவழ்ந்து வந்த ஒரு சிறுநதி
பாலை பூமியை
பிரியத்துடன் தீண்டியது !
அன்புவெள்ளமாய் வந்த
ஆழமான சிறுநதிக்கு
வற்றியநிலத்தின் மீது
வற்றாத காதல் !
வேறெங்கும் போகாமல்
வந்த இடத்தில் தங்கிவிட்டது !
அன்பாற்றின் அரவணைப்பில்
சிறுநதியின் பெருந்தன்மையில்
செழிப்பானது பூமி !
சந்தோஷ மலர்கள்
பூக்கத்தொடங்கின
வளங்களும் கனிகளும்
நிரம்பி வழிந்தன !
பாலை மருதமானது !
இரண்டாவது இலையுதிர்காலம்
கடந்தது.
ஒரு நடுநிசியில்
ஊர் உறங்கியவேளையில்
போய்விடவா என்று
அழுகுரலிட்ட அன்பாற்றை
போய்விடு என
அனுப்பிவைத்தது மருதபூமி !
நதியைத்தடுக்க
மனமுமில்லை
தெம்புமில்லை !
பாவப்பட்ட பூமிக்கு
நதியைத்தடுக்க
மனமுமில்லை
தெம்புமில்லை !
கடந்தது.
ஒரு நடுநிசியில்
ஊர் உறங்கியவேளையில்
போய்விடவா என்று
அழுகுரலிட்ட அன்பாற்றை
போய்விடு என
அனுப்பிவைத்தது மருதபூமி !
நதியைத்தடுக்க
மனமுமில்லை
தெம்புமில்லை !
பாவப்பட்ட பூமிக்கு
நதியைத்தடுக்க
மனமுமில்லை
தெம்புமில்லை !
விட்டுப்போனது நதி,
வறண்டதுபோனது பூமி !
உயிர்நதியின் பிரிவால்,
கோழை பூமிக்கு
கொட்டியது கண்ணீர் !
சோக உஷ்ணத்தில்
காய்ந்தது கண்ணீர் !
கண்ணீர் வற்றி
மிஞ்சியது உப்பு !
உப்புமேட்டில்
உருவானது உப்பணை
வலிமையான தடுப்பணை !
வறண்டதுபோனது பூமி !
உயிர்நதியின் பிரிவால்,
கோழை பூமிக்கு
கொட்டியது கண்ணீர் !
சோக உஷ்ணத்தில்
காய்ந்தது கண்ணீர் !
கண்ணீர் வற்றி
மிஞ்சியது உப்பு !
உப்புமேட்டில்
உருவானது உப்பணை
வலிமையான தடுப்பணை !
நதி விட்டுச்சென்ற சோகம்
வேறெந்த நீரையும்
தேக்கவில்லை,
தேக்க மனமுமில்லை !
அணை மதகு
திறந்தேயிருந்தது !
அவ்வழியே
எத்தனை எத்தனையோ ஆறுகள்
கடந்து போயின !
சொட்டு நீர் கூட
தேங்கவில்லை
தங்கவில்லை !
நதி விட்டுச்சென்ற சோகம்.
வேறெந்த நீரையும்
தேக்கவில்லை,
தேக்க மனமுமில்லை !
அணை மதகு
திறந்தேயிருந்தது !
அவ்வழியே
எத்தனை எத்தனையோ ஆறுகள்
கடந்து போயின !
சொட்டு நீர் கூட
தேங்கவில்லை
தங்கவில்லை !
நதி விட்டுச்சென்ற சோகம்.
நீரின்றி வறண்டது பூமி !
வளமில்லாமல் வாடியது பூமி !
மருதம் பாலையானது !
இளைப்பாற வந்த
தூரதேசத்து பறவைகள்,
கரையோரப்புல்லை தேடிவந்த
பெண்பால் புள்ளிமான்கள்
எல்லாம் ஏமாற்றத்தில்
சபித்துவிட்டு போயின.
வளமில்லாமல் வாடியது பூமி !
மருதம் பாலையானது !
இளைப்பாற வந்த
தூரதேசத்து பறவைகள்,
கரையோரப்புல்லை தேடிவந்த
பெண்பால் புள்ளிமான்கள்
எல்லாம் ஏமாற்றத்தில்
சபித்துவிட்டு போயின.
காற்றடித்தது
புயலடித்தது
மழையடித்தது
வெள்ளம் பெருக்கெடுத்தது
எதற்கும் அசராத உப்பணை
கல்லணையாய் நின்றது
கம்பீரமாய் நின்றது !
வேறெந்த நீரையும் தேக்கவில்லை
தேக்க மனமுமில்லை
மதகு திறந்தேயிருந்தது !
சொட்டு நீர் கூட
தேங்கவில்லை தங்கவில்லை !
புயலடித்தது
மழையடித்தது
வெள்ளம் பெருக்கெடுத்தது
எதற்கும் அசராத உப்பணை
கல்லணையாய் நின்றது
கம்பீரமாய் நின்றது !
வேறெந்த நீரையும் தேக்கவில்லை
தேக்க மனமுமில்லை
மதகு திறந்தேயிருந்தது !
சொட்டு நீர் கூட
தேங்கவில்லை தங்கவில்லை !
நான்கைந்து வெயில்காலங்கள்
கடந்தது.
ஓர் மதிய வேளையில்
வடக்கிலிருந்து வந்தது
ஓரு மெல்லிய ஓடை !
சில்லெனப்பாய்ந்த சிற்றோடை
தலைநகரில் ஊற்றெடுத்ததாம் !
கடந்தது.
ஓர் மதிய வேளையில்
வடக்கிலிருந்து வந்தது
ஓரு மெல்லிய ஓடை !
சில்லெனப்பாய்ந்த சிற்றோடை
தலைநகரில் ஊற்றெடுத்ததாம் !
ஒல்லியான ஓடையுடன்
ஒட்டிவந்த தென்றல்
உப்பணையைக் குளிர்வித்தது !
குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய
சிற்றோடையின் சலசலப்பு
புன்சிரிப்பாய்
தேனிசையாய்
உப்பணைக்கு
உற்சாகமளித்தது !
ஒட்டிவந்த தென்றல்
உப்பணையைக் குளிர்வித்தது !
குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய
சிற்றோடையின் சலசலப்பு
புன்சிரிப்பாய்
தேனிசையாய்
உப்பணைக்கு
உற்சாகமளித்தது !
ஓடைநீர்
அணையில் மோதி
தளும்பிய நுரை
அது தந்த மணம்
புதுவண்ணமாய்
அணையை அலங்கரித்தது!
அணையில் மோதி
தளும்பிய நுரை
அது தந்த மணம்
புதுவண்ணமாய்
அணையை அலங்கரித்தது!
மீண்டது பூமி !
பூ கனி மான் என
கனவுக்கோட்டைகளை
சட்டென கட்டியது பூமி!
கனவுகிலேயே வாழ்ந்திருக்கலாம்!
பேராசைப் பிடித்த உப்பணை,
ஓடையை சொந்தமாக்க எண்ணி
மதகை மூட ஓடையிடமே
அனுமதி கேட்டது
அவசரகெதியில்
அனுமதி கேட்டது !
பூ கனி மான் என
கனவுக்கோட்டைகளை
சட்டென கட்டியது பூமி!
கனவுகிலேயே வாழ்ந்திருக்கலாம்!
பேராசைப் பிடித்த உப்பணை,
ஓடையை சொந்தமாக்க எண்ணி
மதகை மூட ஓடையிடமே
அனுமதி கேட்டது
அவசரகெதியில்
அனுமதி கேட்டது !
இளைப்பாறத்தான் வந்ததாக
சிணுங்கிச் சிணுங்கி
சிட்டென்று சென்றுவிட்டது
சிற்றோடை !
சிணுங்கிச் சிணுங்கி
சிட்டென்று சென்றுவிட்டது
சிற்றோடை !
எங்கு போனது ஓடை ?
வேறு நிலத்தில் பாய்ந்ததா?
மாற்றான் அணையில் மடிந்ததா?
கடலிலே கலந்ததா?
ஏதும் தெரியவில்லை.
பிரிவால்
கொட்டியது கண்ணீர் !
கண்ணீரில்
கரைந்தது உப்பணை !
வேறு நிலத்தில் பாய்ந்ததா?
மாற்றான் அணையில் மடிந்ததா?
கடலிலே கலந்ததா?
ஏதும் தெரியவில்லை.
பிரிவால்
கொட்டியது கண்ணீர் !
கண்ணீரில்
கரைந்தது உப்பணை !
எதுவும் மிஞ்சவில்லை !
தானாக தேடிவந்த
தெற்கின் நதியும்,
வலிய வந்த
வடக்கின் ஓடையும்
எதுவும் மிஞ்சவில்லை !
உப்பணையும் கரைந்துவிட்டது !
தானாக தேடிவந்த
தெற்கின் நதியும்,
வலிய வந்த
வடக்கின் ஓடையும்
எதுவும் மிஞ்சவில்லை !
உப்பணையும் கரைந்துவிட்டது !
எதுவும் மிஞ்சவில்லை !
நினைவலைகளை சுமக்கும்
பொதி கழுதையானது
வறண்ட பூமி !
நினைவலைகளை சுமக்கும்
பொதி கழுதையானது
வறண்ட பூமி !
- பாலாஜி
