"சாப்டீங்களா சார்?", "நேரமாயிடுச்சே, இன்னுமா சப்பிடல ?"னு அக்கறையா கேப்பாங்க. ஆனா, "வீட்டுக்கு வாங்க சாப்டலாம்"னு யாரும் கூப்டமாட்டாங்க.
"எப்ப சார் கல்யாணம்" ,"எப்ப கல்யாண சாப்பாட்டு போட போறீங்க"னு நிறைய பேர் ஆவலா கேப்பாங்க. ஆனா, "என் பொண்ண கட்டிக்குறீங்களா"னு யாரும் கேக்கமாட்டாங்க. "என்ன கல்யாணம் பண்ணிக்குறீங்களா மாமா"னு யாரும் கேக்குறதில்லை. அதுனால நானே முடிவெடுத்துட்டேன். இனி அதிரடி தான். "சாப்ட்டீங்களா சார்?" "இதோ உங்க வீட்டுக்கு வந்துடுறேன். பிரியாணி செஞ்சு வைங்க." "எப்ப சார் கல்யாணம் ?" "உங்களுக்கு பொண்ணு ஒன்னு இருக்குல்ல ?" |