இன்னைக்கு ப்ரொப்ஃபசர் வீட்ல லஞ்ச். 

பொதுவா அவர்கூட இருந்தா நேரம் போறதே தெரியாது. நிறைய பேசுவார், சுவாரஸ்யமா பேசுவார். முப்பது வருஷத்துக்கு முன்னாடியான அவர் லவ் ஸ்டோரி பத்தி இன்னைக்கும் பேசினேன். பேச்சுவாக்குல மொழி பற்றி திருப்பினோம். ஜிப்மர்ல பல மாநில மாணவர்கள் படிக்குறாங்க. சிலர் நல்லா தமிழ் பேசுவாங்க, சிலருக்கு வராது. ஆனா சார் நல்லா தமிழ் பேசுவார்.

பரிமாரிக்கிட்டிருந்த சாரோட மனைவி, "எப்டி டெல்லியில இருந்த பா..ஹிந்தி தெரியாம?"
"மேடம், அங்க போற தமிழ் நாட்டுக்காரங்களுக்கு மட்டும்தான் ஹிந்தி தெரியாது. மத்த ஸ்டேட்காரங்களுக்கெல்லாம் நல்லா தெரியும்.நான் தான் odd man"
"ப்ராப்லம் ஏதும் இல்லையா?"

சாப்பிடுறப்போ இத சொல்லலாமா வேணாமானு யோசிச்சுட்டு, என்ன ஆனாலும் பரவாயில்லனு பேச ஆரம்பிச்சேன்.
"தினமும் மொபைல் பஸ்ல ஏதாவது ஒரு இடத்துக்கு போய் க்ளினிக் பார்ப்போம். ஆரம்பத்துல பேஷண்ட்கிட்ட பேசுற அளவு மட்டும் ஹிந்திய எழுதி வெச்சிருந்தேன்"
என்ன சொல்லப்போறேன்னு ரெண்டு பேரும் சாப்பிடாம என்னையவே ஆர்வமா கவனிச்சாங்க.
“கவனமாத்தான் இருந்தேன். ஆனா வர பேஷண்ட்லாம் என்னை ஒரு மாதிரி பாத்தாங்க, சிலர் சிரிச்சாங்க, சிலர் முறச்சாங்க, சிலர் கோவமா பார்த்தாங்க. என்னனே புரியல"
"என்ன செஞ்ச ?”

நானும் சாப்பிடுறது நிறுத்தினேன்.
"ஹிந்தி நல்லா பேசுற டாக்டர்கிட்ட விஷயத்த சொல்லி, நான் என்ன தப்பு பண்றேன்னு சொல்லுனு கேட்டேன். அவனும் நான் ஒரு பேஷண்ட்கிட்ட பேசுறத கவனிச்சிட்டு சிரிக்க ஆர்மபிச்சான். என் நோட்ல, 'ஆல்கஹாலுக்கு ஷராப், யூரினுக்கு பெஷாப்’னு எழுதிவெச்சிருந்தேன். ஆனா, இத எப்படியோ குழப்பிக்கிட்டேன். நிறைய பேஷண்ட்ஸ்கிட்ட, "நீங்க எப்பயாவது பெஷாப் குடிப்பீங்களானு கேட்டிருக்கேன். நல்லவேளை யாரும் என்னை அடிக்கல"
ப்ரொஃபசரும் மேடமும் மாறி மாறி சிரிச்சுகிட்டாங்க.
"ஆனா மேடம், இங்கயும் சரி, டெல்லியிலயும் சரி, மொழி பிரச்சனயால, பேஷண்ட்ஸ் யாருமே டாக்டர் மேல கோபப்பட்டது இல்லை.”

ப்ரொஃபஸர் பேச ஆரம்பிச்சார்.
"இட்ஸ் ட்ரூ. லேங்குவேஜ் ப்ராப்ளம அவங்க அண்டஸ்டேண்ட் பண்ணிப்பாங்க"நு சொல்லி அவரும் ஜிப்மர்ல நடந்த 2, 3 மொழி சம்பந்த சம்பவங்கள நியாபகப்படுத்தினார்.

1. “அனஸ்தீசியாவுல ட்யூட்டி பார்த்த வெளிமாநில இன்டர்ன், post op notesல நிறைய பேஸ்ண்ட்ஸ்க்கு, பெயர்: "கண்ணன் துரை"நு எழுதியிருக்கிறார். அது எப்படி, இவ்ளோ "கண்ணன் துரை” வருவாங்கனு விசாரிச்சப்ப தான் புரிஞ்சது"
நானும் யோசிச்சேன்.
எப்படி?
சிரிப்ப அடக்கி ஃப்ரொபஸர் சொன்னார்:
"post opல என்ன செய்வாங்க ? அனஸ்தீஸியாவுல இருந்துவர பேஷண்ட எழுப்ப, கைல தட்டி, 'கண்ண திற” ,"கண்ண திறங்க”னு சொல்லுவாங்கள்ல, அத இன்டர்ன், "கண்ணன் துரை"நு எழுதியிருக்கிறார். 


2. பீடியாட்ரிக் வார்ட்ல இருந்த இண்டர்ன், அம்மாகிட்ட,
“குழந்தைக்கு தடுப்பூசி எங்க போட்டாங்க"னு கேட்டிருக்கிறார்.
அம்மாவும்,”சூத்தாம் பட்டையில போட்டாங்க"நு சொல்லியிருக்காங்க.
அத இந்த இண்டர்ன் case sheetல, “child vaccinated at PHC sooth thaampettai"நு எழுதியிருக்கிறார்.
எந்த ஆஸ்பத்திரியில தடுப்பூசி போட்டாங்கனு இன்டர்ன் கேட்டிருக்கணும். 
இன்னைக்கு மதியம் சார் வீட்டுக்கு, சோகமா போயிருந்தேன்.
2 1/2 மணி நேரம் உலகத்தையே மறந்திருந்தேன்.

PHC sooth thaampettai- மறக்கவே முடியாது.