ஜெ விடுதலையானதால் தமிழகத்திற்கு உண்டாகும் நன்மைகள்:-
1. அம்மா உணவகம் உட்பட நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல மக்கள்நல திட்டங்கள் உடனடியாக துவக்கப்படும்.
2. தள்ளிவைக்கப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும்.
3. தாமதப்படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில், இனி விரைவில் துவக்கப்படும்.
4. உடன்குடி, செய்யூர் போன்ற நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய மின் திட்டங்கள் துவக்கப்படும்.
5. உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
6. கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
7. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி போன்ற ஊழல் அமைச்சர்களுக்கு சாட்டையடி கொடுக்கப்படலாம்.
8. ஆவின் போன்ற மெகா ஊழல் அதிகாரிகளுக்கு ரிங் மாஸ்டர் கிடைத்துவிட்டார் 'இனி நல்ல காலம்' என தமிழக மக்கள் சந்தோஷப்படலாம்.
9. இலங்கை பிரச்சனைக்கும், தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கும் ஓரளவு தீர்வுகிடைக்கும் (?) என நம்பலாம்.
10. தமிழகத்தில், "எப்போ திண்ணை காலியாகும் மடத்தை பிடிக்கலாம்" என காத்துக்கொண்டிருக்கும் காவி பாம்புகள் இனி விரட்டியடிக்கப்படும்.
ஜெ விடுதலையானதால் தமிழகத்திற்கு இத்தனை நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலே சொன்ன அத்தனை நன்மைகளும் நடக்கும் என சொல்லிவிட முடியாது. ஆனால் ஜெ தண்டிக்கப்பட்டிருந்தால் இவை எதுவும் நடக்காது என சொல்லலாம். இந்த நன்மைகள் நடக்குமா நடக்காதா என்பதும் ஜெ விடுதலைக்காக அதிமுக - மத்திய அரசு செய்து கொண்ட மறைமுக ஒப்பந்தங்களைப்பொறுத்தே அமையும். அவர் 90களில் நடந்து கொண்டது போலில்லாமல் திருந்தி மீண்டும் நல்லாட்சி கொடுப்பார், தமிழக முன்னேற்றதிற்காக மட்டுமே ஆட்சி செய்வார் என நம்பலாம்.
சரி. கற்பனை தான் என்றாலும் நமக்கு இவ்வுளவு நன்மைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த காரணங்களுக்காக ஜெ விடுதலையானதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனா, "நீதி வென்றது சூழ்ச்சி தோற்றது"னு போஸ்டர் அடிக்கும் அதிமுக அடிமைகளுக்கு நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விதான் :
“உங்களுக்கெல்லாம் வெட்கமேயில்லையா?”
- பாலாஜி