கட்சித்தலைவரும் இல்லை.
ஆட்சி அதிகாரமும் இல்லை. 
சினிமா நட்சத்திரமும் கிடையாது. 

ஆனால் அவரது மறைவுக்கு கோடிக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். 

தாமாகவே முன்வந்து கடையடைப்பு செய்தார்கள், பேனர் வைத்தார்கள். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அமைதியாக ஊர்வலம் சென்று மரியாதை செலுத்துகிறார்கள்.

கோயிலில், இறைவனை வழிபடுவதற்கு கூட க்யூவில் நிற்காத முதல்வர்கள், கவர்னர்கள் எல்லாம் அமைதியாக வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழர்களை சந்திக்கும் தேசியக்கட்சிகளின் தலைவர்கள், காலணிகளை கழற்றிவிட்டு அமைதியாக அஞ்சலி செலுத்துகிறார்கள்.

மதுரைக்கு கூட வந்திராத பல வெளிநாட்டு தூதுவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கிராமத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஒரு ராணுவ அமைச்சர், நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு சிறு கடற்கரை பகுதிக்கு வருவாரா ? இன்று வந்தார்.

படிப்பும் , உழைப்பும் இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்களிடத்தில் அன்பும் பணிவும் கூடவே தேசப்பற்றும் அவசியம் என்பதனை டாக்டர் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் உணர்த்துகிறது. மாணவர்களுக்கெல்லாம் இது ஒரு நல்ல பாடம்.