அவளுக்கும் வலித்தது

கைக்குழந்தையுடன் அவள்.
"உன் பெயரை தான் வைத்திருக்கிறேன்" என்றாள்.
"இனிஷியல் எனதில்லையே"

"மறக்க முடியவில்லை" என்றாள்.
“வேண்டாம். அவனையும் ஏமாற்றாதே"

குழந்தைக்கு முத்தமிட்டு கிளம்பினேன்.
அவளுக்கும் வலித்தது.