நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி :

"சாதாரண மக்களான நம்மளால, என்ன பெருசா செஞ்சிட முடியும் ?”
எனது பதில் : ''சாதாரண மக்கள், சாதாரண விஷயம் செஞ்சாலே போதும்..எதுக்கு பெருசா செய்யணும் ? "

2006-2007ஆம் ஆண்டு , தமிழகத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் ,பயிற்சி மருத்துவராக(house surgeon)பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
இரவு 3 மணி இருக்கும்..அவசர சிகிச்சை பகுதியில் உள்ள வார்டுக்கு( admission ward) சென்றேன்.

ஒரே இருட்டு...அப்பொழுது தான் current cut ஆகி இருந்தது.
(JCBயை வைத்து நிலத்தை தோண்டிய போது ஏதோ முக்கியமான லைன் கட் ஆகிவிட்டதாம்...கரண்ட் வருவதற்கு குறைந்தது 2 நாள் ஆகும்னு பேசிக்கொண்டிருந்தனர்.)
அபாயகரமாக உள்ள நோயாளிகள், முதலில் இந்த admission wardல் தான் சிகிச்சை மேற்கொண்டு, பிறகு அந்த அந்த unit wardக்கு மாற்றப்படுவார்கள்..

ஒரு ஓரத்தில்,மெழுகுவத்தி வெளிச்சம்...கிட்ட போய் பார்த்தேன்...2பயிற்சி மருத்துவர்கள் (எனது நண்பர்கள்),தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தவரின் தலையில் தையல் போட்டுக்கொண்டிருந்தனர்...
அந்த நிலையில், வேகமாக தையல் போடலைனா, நிறைய ரத்தம் வெளியாகி உயிர் போய்விடும்.அவ்வுளவு பெரிய காயம் .
இதில் கொடுமை என்னனா, அடிபட்ட பையனோட அப்பாவும் மாமாவும் மெழுகுவத்திய பிடிச்சிக்கொண்டிருந்தனர்...
அவங்களுக்கு உதவி செஞ்சுகிட்டே,4,5photo எடுத்தேன்...

மதியம் film develop செய்து print போட்டேன்.
மாலை 4,4.30 மணிக்கு நேரா எங்க dean அறைக்குள் சென்றேன்...
டீன் என்னோட இறுதி ஆண்டு மருத்துவ பேராசிரியர்.
நான் போனாலே 'ஏதோ பிரச்சனை'னு அவருக்கு புரிந்து விடும்.
'என்ன ராசா ? என்ன விஷயம்?' னு புன்னகை புரிந்தவரிடம்,இந்த photoவை காட்டினேன்.
ரொம்ப டென்ஷன் ஆகிட்டார்...'எனக்கு யாருமே சொல்லலையே' னு கோபப்பட்டு ,எனக்கு நேராவே யார் யாருக்கோ போன் செய்தார்.
சரியாய் 6 மணிக்குள் admission wardக்கு ஒரு generator ஏற்பாடு செய்து விட்டார்...

நான் பெருசா எதுவுமே செய்யல...ரொம்ப சாதாரண விஷயம்..
ஆனால் முதல் நாள் இருட்டில் இருந்த அவசர சிகிச்சை பிரிவில்,அடுத்த நாள் வெளிச்சம் ...

(நேற்று ஒருவர்,facebookல் "நாட்டுக்கு பெருசா என்ன கிழிச்ச"னு நக்கல் செய்தார்).
'சாதாரண மக்கள், சாதாரண விஷயம் செஞ்சாலே போதும்..எதுக்கு பெருசா செய்யணும் ? "
பெருசா செய்றதுக்கு நாம என்ன மந்திரியா?
மனசுக்கு சரினு தோனுற, சின்ன சின்ன நல்ல விஷயம் செஞ்சாவே போதும்..
நான் சொல்றது சரிதானே ?