
இந்தியாவின் மொத்த health budgetல் 65 % "தேசிய ஊரக நல வாழ்வு இயக்கம்/ National Rural Health Mission"(NRHM)க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள,NRHMன் 168 பக்க Documentல் மூன்றே முன்று தலைவர்களின் பெயர்கள் தான் இடம் பெற்றுள்ளது..
அவர்கள் :
1) எம்.ஜி.ஆர்
2) காமராஜர்
3) பெரியார் .
நம்ப முடிய வில்லை தானே ?
இந்திய அளவில் வெளியிடப்பட்டுள்ள Documentல், மூன்று தமிழக தலைவர்களின் பெயர்கள் மட்டுமா ?
மருத்துவம்/
இன்று தமிழகம், Infant mortality rate,Maternal mortality rate,contraception,female literacy என அனைத்திலும் இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறது எப்படி ?
http://nrhm.gov.in/images/
"TAMIL NADU’S SUCCESSFUL INITIATIVES IN THE HEALTH SECTOR" என்ற தலைப்பில் இதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் .
இதில் தான் நமது 3 தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது..
( எனது தமிழாக்கம் )
1) முதலமைச்சர் எம் ஜி ஆர் :
1982ல் மதிய உணவு திட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடங்கினார் (காமராஜர் துவக்கியதை விரிவுபடுத்தினார்).
''100 கோடி ரூபாய் திட்டம்...2 லட்சம் பணியாளர்கள் தேவை ..அதனால் வேண்டவே வேண்டாம்'' என்று அதிகாரிகள் பலரும் தடுத்தனர்..
''நான் வறுமையில் இருந்த போது,என் பக்கத்து வீட்டு அம்மா எங்களுக்கு சோறு போட்டு எங்களை அழிவிலிருந்து காப்பாற்றினார்.இன்று, ஒரு முதலமைச்சராக ,ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வேளையாவது உணவு அளிப்பது எனது கடமை.இதன் மூலம் வசதியில்லாத அம்மாக்களின் துயரத்தை கொஞ்சமாவது குறைக்க முடியும் " னு விடாப்பிடியாக அந்த திட்டத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் துவக்கினார்..
இன்று,இந்தியாவில் உள்ள சுகாதாரத்துறை மொத்தமும் இந்த திட்டத்தை தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க...
"பள்ளிக்கு குழந்தைகளின் வருகை அதிகமாகிடுச்சு",
" 2 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து விட்டார் "
அப்பிடி இப்புடினு எல்லா அறிக்கைகளிலும் ஒரே பாராட்டு ...
(இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் அதிகம் படிக்கவில்லை.எம்.ஜி.ஆர் ஒரு 'நல்ல நடிகரே' இல்லைனு பலர் விமர்சனம் செய்வர்.அவர் ஒரு 'நடிகரே' இல்லை...இந்திய மக்கள் நல்வாழ்விற்கு முக்கிய பங்காற்றிய "மக்கள் திலகம்"..)
2) முதலமைச்சர் காமராஜர் - ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடம்,இலவச கல்வி,இலவச சீருடை,மதிய உணவு திட்டம் என இவர் தொடங்கிய புதிய திட்டங்களினால் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை கூடியது.சுகாதாரம் தானாகவே உயர்ந்தது ....
( அவரை 'தோற்றுப்போன அரசியல்வாதி'னு சொல்பவர்கள் உண்டு...அவரை ஏன் அரசியல்வாதியாக பார்க்க வேண்டும்?.தமிழகத்திற்கு கல்வியறிவு தந்த தலைவர்.பெருந்தலைவர்)
3) பெரியார் - பெண்களின் திருமண வயதை உயர்த்தியதில் பெரும் பங்காற்றினார்…சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்....அடிக்கடி
'Bharat Ratna' எம் ஜி ஆர் ….
'Bharat Ratna' காமராஜர்.....
அப்படினா 'Bharat Ratna' பெரிய விருது தான்.