
''வைகோ ஒரு தமிழனா?''-என் ஊரிலிருந்து(நெய்வேலி) வந்த ஒரு மருத்துவ தோழி tamil இல் கேட்கும் கேள்வி.
நான் மதிமுக கட்சியை சேர்ந்தவன் இல்லை...தமிழன் தமிழன் என்ற சொல்லில் எனக்கு அவ்வுளவு ஈடுபாடு இல்லை..நான் மனிதன்...வைகோ என்ற சக மனிதனை பற்றி உங்களுக்கு எனது பதில்:
Neyveli Lignite Corporation (NLC) தனியார் மயமாக்கப்பட இருந்த சமயத்தில் வைகோ அவர்கள் அதனை தடுத்து நிறுத்திய விதம் அனைவரும் அறிந்ததே .(திரு வாஜ்பாயி அவர்களிடம் கொண்ட நெருக்கம்).
நம் அருகில் உள்ள கண்ணீர் தீவு -இதற்கு குரல் கொடுத்ததற்காக 18 மாதம் சிறை..'நாம் இந்த பிரச்சனைக்காக என்ன கிழித்தோம்'?-ஒரு நிமிடம் அந்த தமிழச்சி எண்ணி பார்க்க வேண்டும் .
பிறந்தது தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம்.(தெலுங்கு பேசும் குடும்பத்தை சார்ந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை).
தமிழகத்திற்காகவும் ,தமிழர்களுக்காகவும் 25முறைக்கு மேல் சிறை சென்றவர் (மொத்தமாக 4 வருடம்).
பாராளுமன்றத்திலும்,பொதுக்கூட்டத்திலும் தமிழில் அவர் உருமியதை நீங்கள் கேட்கத் தவறியது அல்லது மறந்தது ஏன்?
ஆளுங்கட்சியும் இல்லை,எதிர் கட்சியும் இல்லை....நதி நீர் இணைப்பு,காவிரி ,முல்லைபெரியார்,sterlite--
எவ்வாறு ஒருவன் தமிழனாகிறான்?
1)அவன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்…
2 )தமிழ் இலக்கியத்துக்கு என்ன செய்தான் …
ஜீ.யு.போப் ஒரு தமிழன் …
நான் இதுவரை தமிழனாகவில்லை…
- பாலாஜி