2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம். 

2013 மே மாதம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார். 

'இதோடு இவரது குத்துச்சண்டை வாழ்க்கை முடிந்தது, இனி இவர் போட்டியில் பங்கேற்க மாட்டார். முடியாது. முடியவே முடியாது,வாய்ப்பேயில்லை’னு பலரும் நம்பினர். நானும் கூட அதையே நம்பினேன். 

காரணம், சிசேரியன் செய்து கொண்டவர்கள், வாழ்க்கை முழுதும் அதன் வடுவை உடலிலும் மனதிலும் சுமந்து செல்வர். ஆனால், சிசேரியன் முடிந்து சரியாக ஒன்றறை வருடத்தில், ஆசிய குத்துச்சண்டையில் தங்கம் வென்று பலரது கணிப்புகளை தகர்த்தெறிந்தார் மேரி கோம். 

இது என்ன சாதாரண காரியமா ? 
அதிசயத்திலும் அதிசயம். 

இந்த தில் மனுஷியை பற்றிய வரலாறு நம் குழந்தைகளின் பாடபுத்தகத்தில் இடம் பெற வேண்டும். இவர் அதிகளவில் பேசப்பட வேண்டியவர், எழுதப்பட வேண்டியவர். 

ஆனால், “பெண்ணியவாதிகள்" என தங்களைத்தாங்களே சொல்லிக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் சிலர் இவரை கண்டுகொள்ளவேயில்லை. 

இவரை பாராட்டவும் இல்லை. யாரோ ஒரு 70 வயசு முதிய பாடகர் ஏதோ ஜீன்ஸ் அணிவதை பற்றி கருத்து சொன்னாராம். அதையே 3 நாளா விவாதிக்கிறார்கள். 
சண்டை போட்டுக்கொள்கிறார்கள். 

நம் குழந்தைகளுக்கு எதை சொல்லிக்கொடுக்க போகிறோம் ? மேரி கோம் என்ற இந்த பெண்ணின் மன உறுதியை பற்றியா ? அல்லது வீண் விவாதங்களில் பங்கெடுப்பது பற்றியா ?

- “ஆணாதிக்கவாதி" பாலாஜி