
இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இந்த நடிகரின் வீர வரலாற்றை பாராட்டித் தள்ளியிருக்கின்றன.
காரணம் ?
இவர் சுதந்திர போராட்ட வீரர் !
வவுசியுடன் சேர்ந்து சிறையில் செக்கிழுத்தார் !
விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார் !
இவரது சேவையை பாராட்டி ,"இவருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும்"னு ரசிகர்கள் போராட்டம் செய்தால் கூட நாம் ஆச்சர்யப்படக்கூடாது. ஏன்னா பெரியாரை விட இவர் நாட்டுக்கு அதிகமாக சேவை செய்துவிட்டார்.
விடுதலைக்காக பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ன ஆனார் என்றே இன்று வரை தெரியாத இந்த நாட்டில், இந்த நடிகரின் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் துள்ளியமாக வெளியிடுகின்றன நம் பத்திரிக்கைகள்,.
இவருக்கு பிடித்த உடை என்ன, பிடித்த உணவு என்ன, என்ன கார் உபயோகிக்கிறார்னு பத்திரிக்கைகளில் விபரம் கொடுக்குறாங்க. இவர் எத்தனை படத்துல நடித்திருக்கிறார், அதில் தமிழ் எத்தனை கன்னடம் எத்தனை,எத்தனை ஹிட்டு எத்தனை ஃப்ளாப்னு புள்ளிவிவரம் கொடுக்குறாங்க. சரி. இதுவரை எத்தனை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளதுனு கேட்டா, அது...அது வந்து… ஒரு நானூறோ ஐநூறோ இருக்கும்னு தோராயமா சொல்றாங்க.
கடந்த ஒரு மாசமா, இந்த படத்தோட ட்ரெய்லரை டீசரை பல நூறு தடவை தொலைக்காட்சிகள்ல வெளியிட்டாங்க. சரி. நம்ம பக்கத்து நாட்டுல, ஆயிரக்கணக்கானவங்கள கொன்னு குவிச்சாங்களே. அந்த சமயம், போர்க்காட்சிகள ஒரு முறை கூட இவர்கள் தொலைக்கட்சிகள்ல வெளியிடவில்லையே, ஏன் ?
இன்று ஒரு பத்திரிக்கையின் நடுபக்க செய்தி:
"லிங்கா படத்தின் டிக்கெட் விலை 500 ரூபாய். ரசிகர்கள் பெருமிதம்”.
500 ரூபா கொடுத்து ஒரு படத்த பாக்கணுமா ?
ஏன்னு கேட்டா, தலைவராம் அடுத்த முதல்வராம்.
ஒரு படத்துல முதல்வரா நடிக்கவே பயந்து ஒதுங்கிய ஒருவர் எப்படி தமிழ்நாட்டை ஆள முடியும்