"நான் நன்றாக இருக்கிறேன், விஷமிகளின் வதந்தியை நம்பாதீர்"- திமுக தலைவர் வேண்டுகோள். 
வயது முதிர்ந்த தலைவர், இப்படி ஒரு அறிக்கை வெளியிடும்படி, வதந்தியை பரப்பிவிடுவது தான் நமது பண்பாடா ? 

அவர் உடல் நிலைக்கு ஏதாவது தீங்குனா நிச்சயம் திரு.வைகோ கண்ணீர் விடுவார். அது அரசியல் நாடகமாக இருக்காது. பரம எதிரியாக கருதப்படும் செல்வி.ஜெயலலிதா கூட அதை விரும்பமாட்டார்.

சில மணி நேரம் முன் இணையத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. திமுக தலைவரை தொடர்ந்து அரசியல் ரீதியா விமர்சித்து வரும் திரு.Walter Williams அவர்கள், எதிர்கட்சினு பார்க்காம, புகைப்படத்திற்கு லைக் செய்திருந்தார். இது தான் நாகரிகம். அவருக்கு இருப்பது பக்குவம்.

தனியா சதுரங்கம் விளையாடி,'ஜெயிச்சுட்டேன்'னு சொல்வீங்களா ?
எதிரி இறந்தா தான் அரசியல்ல ஜெயிக்க முடியுமா ?
அப்படி யாருங்க சொல்லிக் கொடுத்தது ?
உயிரோடு இருப்பவர்களை தோற்கடிப்பது தானே வெற்றி .


அதுக்காக அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஜால்ரா அடிக்க சொல்லவில்லை. 
ஒரு தலைவரை பிடிக்கவில்லையா ? ஓட்டு போடாதீங்க.
அவர் மேல கோபம் இருக்கா ? வழக்கு தொடருங்கள்.
தில் இருக்கா ? எதிர்த்து போட்டியிடுங்கள்.
அது முடியவில்லையா ? விமர்சித்து எழுதுங்க.
அதுவும் இல்லாத கோழைகளா ? ஒதுங்கிவிடுங்கள்.


நினைவிருக்கட்டும் : மரணம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது 1 வயது குழந்தையானாலும் சரி , 100 வயது முதியவரானாலும் சரி. கணிக்க முடியாதது தான் மரணம்.


திமுக தலைவர் நலமுடன் வாழ வேண்டும்.
பாலாஜி.

( நான் திமுக உறுப்பினர் கிடையாது. எதிர்காலத்திலும் தி.மு.கவிற்கு ஓட்டு போடும் எண்ணமில்லை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது திமுகவை விமர்சிக்காமல் விடமாட்டேன் )