டொக் டொக் டொக்.....
கதவு தட்டுற சத்தம்.
ஆழ்ந்த தூக்கத்துல இருந்த நான் "இதோ வறேன்"னு வேகமா எழுந்தேன்.

"பேஷெண்ட் வந்திருக்காங்க, PHC security guard கதவ தட்டுறார்.ஏதோ emergency case.வேகமா போய் பாக்கணும்"னு நினைச்சுகிட்டே கண்ண திறந்து பாத்த எனக்கு ஒரே குழப்பம். 

என்ன சுத்தி 6,7 பெரிய travel bags .
நிறைய புத்தகங்கள் சிதறிகிடக்கு.
தரை பூரா துணிமணிகள்.
ஒரு குப்ப மேட்டுல படுத்திருக்குற மாதிரியான நிலை..
"நான் எங்க இருக்கேன்?"னு 2 நொடி கழிச்சு தான் எனக்கே புரிஞ்சுதது .
அட இப்போ டெல்லி aiims ஹாஸ்டல்ல, என் அறையில இருக்கேனே.
நேத்தோட என் Dayalpur PHC பணி முடிஞ்சுடுச்சே..

( கதவ திறந்து பார்த்தா,வேற அறைக்கு போக வேண்டிய ஒருவர் தெரியாம என் அறைய தட்டியிருக்கிறார்.)


இன்னைக்கு காலை 11 மணிக்கு, தாயல்பூர்ல இருந்து டெல்லிக்கு பைக்குல கிளம்பினேன் .
ஆச்சர்யமா தொடர் மழை .
2 மணி நேரம், மழையில கோழி மாதிரி நனைஞ்சுகிட்டே , பைக் ஓட்டிகிட்டு டெல்லி வந்து சேர்ந்தேன். Agra- Delhi highway குண்டு குழியுமா இருந்தது .சாதாரண மழைக்கே ரோடு காணாம போயிடுச்சு.
அறைக்கு வந்ததும் அசதியில 5 மணி நேரம் தூங்கியிருக்கேன். 8 மாசம் கழிச்சு இன்னைக்கு தான் மதியம் தூங்குனேன்.


காலையில phcய விட்டு கிளம்புறப்போ,

1. எங்க phc Supervisor (50 வயது பெண்) : டாக்டர் சாப், இங்க பெரியவங்கள தான் நாங்க ஜி போட்டு கூப்பிடுவோம்.ஆனா 'பாலாஜி' ங்குற உங்க பேர்லயே "ஜி " இருக்கு.உங்களுக்கு எப்போதும் மரியாதை கிடைக்கும் சார்.நீங்க நல்லா இருப்பீங்கனு வாழ்த்தினார்.

2. சீனியர் : உனக்கு 2 அறிவுரை கொடுக்குறேன் பாலாஜி .
- கோவத்த குறை.
- neatஆ dress பண்ணு. coat, shoe போடு. நீ எவ்ளோ பெரிய வேல செஞ்சாலும், மக்கள் முதல்ல உன் dressஐ தான் பாப்பாங்க.
best wishesனு முதுக தடவி கொடுத்து அனுப்பினார்.

3. திடீர்னு 3,4 வால் பசங்க ஓடி வந்தாங்க.
மருத்துவமனையிலயே உள்ள குடியிருப்புல தங்கியிருக்குற குழந்தைங்க.
ஒருத்தன் அவன் கையில ஏதோ மூடிவெச்சு என் கையில கொடுத்தான் .
திறந்து பார்த்தா ச்சாக்லேட்.
இன்னொருத்தன் பேனாவ கொடுத்தான்.
"miss u uncle"னு சொன்னாங்க.


மழை விட்டாலும் தூறல் விடுவதில்லை
பல சமயம், தூறல் விட்டாலும், நனைந்ததால வந்த காய்ச்சல் உடனே விடுவதில்லை.
நினைவுகளும் அப்படிதான் .

தாயல்பூர் நினைவுகள் நீண்ட நாள் மனசுல இருக்கும்.
miss u dayalpur.

பாலாஜி