"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”- பழமொழி
"தங்கச்சி உடையான் பேய்க்கே அஞ்சான்" - பாலாஜி
சின்ன வயசுல நானும் தங்கச்சியும் அவ்ளோ ஒத்துமை. அவளுக்கு வாய் நீளம். எனக்கு கை நீளம்.
வீட்ல நான் கொஞ்சம் நல்லா படிப்பேன்.
அவ படிக்காம டிமிக்கி கொடுக்குறத கண்டுபுடிச்சி "படி டி" னு திட்டுவேன் (பெரிய இவன் மாதிரி).
அவ தான் பாசக்கார தங்கச்சியாச்சே - 'உன் வேலைய பாருடா நாயே ' பதில் வரும்.
கோவத்துல 'பன்னாட' னு திட்ட ஆரம்பிப்பேன்.
அப்புறம் கைகலப்பு. சாத்து சாத்துனு சாத்திடுவேன்.
எனக்கும் சில பல சேதாரம் ஆகியிருக்கும்.
பிரச்சன எப்படியோ முடிஞ்சிடும்.
ஆனா அப்பா வரப்ப, அவ அப்பாவி மாதிரி மூஞ்ச வெச்சுகிட்டு "அவன் என்னய அடிச்சிட்......" சொல்லி கூட முடிக்கமாட்டா - அப்பாகிட்ட இருந்து விழும் பாருங்க - கைல கிடைக்குற எடுத்து துரத்த ஆரம்பிச்சிடுவார்- நான் ஓட அவர் துரத்த- அவர் துரத்த நான் ஓட- தோட்டம் தெருவுனு விழுந்தடிச்சி ஓடுவேன்- மாட்டுனா நெம்பி எடுத்துடுவார். தண்ணி விடுற ஹோஸ் பைப் இருக்கும்ல - அதுல அடி விழுந்தா தொடை சிவந்திடும்.
"ரெண்டும் கார்த்திகை நட்சத்திரம். அதான் இப்படி அடிச்சுகுதுங்க"னு கோயில்ல பூஜ எல்லாம் செஞ்சாங்க.
ரெண்டு பேரையும் கராத்தேவுல சேர்த்திருந்தாங்க.
"ஏற்கனவே கீரி பாம்பு மாதிரி அடிச்சுகுதுங்க. இதுல இவங்க சண்டைக்கு ட்ரைனிங் வேற கொடுக்குறீங்களா? "னு யாரோ கொளுத்தி போட, என்ன மட்டும் அனுப்புனாங்க. புண்ணியமா போச்சு.
தங்கச்சி என்னை, 'நாயே' 'பேயே'னு அன்பா தான் அழைப்பார். யாராவது வெளி ஆள் வந்தா மட்டும் -''டேய் அண்ணா''- இது தான் அவர் எனக்கு கொடுத்த அதிகப்படியான மரியாதை.
எல்லாருகிட்டயும் தங்கச்சிக்கு ''நல்ல பொண்ணு'' இமேஜ். எனக்கு "வாலு பையன்" பட்டம். ''பொம்பள புள்ள டா. இன்னொருத்தன் வீட்டுக்கு போறவ''னு எனக்கு தான் திட்டு விழும்.
காலேஜ் படிக்க வெளியூர் போனேன். ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கப்புறம் தான் டர்னிங் பாய்ண்ட்- விஜயகுமார்- ராதிகா மாதிரி பாச மலர்களா மாறிட்டோம்.
இப்போ நிலைமையே வேற.
சின்ன வயசுல, "நீ உருப்புட மாட்ட டா", "அனுபவிப்ப டா "னு அடிக்கடி தங்கச்சி சாபம் விடுவா- இப்போ நான் பலனை அனுபவிக்கிறேன்.
# போன மாசம் மட்டும் என்னைய 4,5 பெண்கள் உதைச்சிட்டாங்க - என்னால ஒண்ணுமே பண்ண முடியல.
எங்க ? பிரசவ வார்ட்ல ! நான் பிரசவம் பாக்குறப்போ, பெண்ணோட காலை கட்டி போட மாட்டேன் (obstetrical stirrups). பிரசவ வலிய தாங்க முடியாம, சில பெண்கள் பிரசவம் பாக்குறவங்களையே உதைச்சிடுவாங்க. நின்னுகிட்டிருந்தா என் வயித்துல உதை விழும். உக்கார்ந்திருந்தா முகத்துல விழும்.
# போன வாரம் பிரசவத்துக்கப்புரம், அடியில தையல் போட்டுகிட்டு இருந்தேன்- சரியா மரத்து போகல போல. அந்த பெண் வலியில என் முகத்துலயே உதைச்சிட்டார்.
# பல வருஷம் முன்னாடி எங்க சண்டையில லேசா எனக்கு நெகக் கீறல் விழுந்ததுக்கு பெரிய ஆர்பாட்டம் பண்ணேன். இப்போ பிரசவ வலியில ஒரு பெண் என் கைய பிடிச்சி நசுக்கினார். நெகம் கீறி ரத்தம் வந்துச்சு. மௌனமா பல்ல கடிச்சி கிட்டு இருந்தேன்.
# கொஞ்சமா என் சட்டையை அழுக்கு பண்ணதுக்கே தங்கச்சிய அடி பின்னினேன். இப்போ அடிக்கடி பனிக்குடம் உடைஞ்சு நீர் முழுசும் என் சட்டையில தெறிக்கும்.
எல்லாம்,"முற்பகல் செய்யின் ..." - உணர்ந்துட்டேன்.
இப்போ அவ பொறுப்பு தங்கச்சி !
# இப்போ எனக்கு, எவ்ளோ சம்பளம் ? எவ்ளோ பேங்க் பாலன்ஸ் ?னு எதுவும் தெரியாது. பணத்து மேல ஈடுபாடு கிடையாது. தங்கச்சி தான் எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சுப்பா. ஆன் லைன் transaction முழுசும் அவரே செஞ்சிடுவார்.
# எனக்கு ரயில் டிக்கட் , ப்ளைட் டிக்கட் எடுத்துக் கொடுக்குறதே அவ தான்.
# என் தீசிஸ் data என்ட்ரி - சிக்கலா இருந்தது - அவ தான் முழுசும் செஞ்சு கொடுத்தா.
# இப்போ எனக்கு பொண்ணு பாக்குற வேலைய ஆரம்பிக்குறாங்களாம் ..
"உனக்கு போலீஸ் பொண்ணுதாண்டா பாக்கணும்- தெனைக்கும் நீ அந்த பொண்ணுகிட்ட சாத்து வாங்கணும் டா"னு சொல்றா.
"வரப்போற பொண்ணுக்கிட்ட இவன் பம்புரத, வீட்டு வேலை செய்யுறத வீடியோ எடுத்து you tubeல போட்டு உன் மானத்த வாங்கனும்டா " னு சொல்லிகிட்டு இருக்கா.
# இப்போ நான் சும்மா சிரிச்சாலே, "யாருடா அந்த பொண்ணு ? டாக்டரா நர்சா ? சொல்லு பேசி முடிச்சிடலாம் "னு ஓட்டுறா . அவளுக்கு தான் வாய் ரொம்ப நீளமாச்சே .
# நேத்து விடியக் காலை, நான் ,தங்கச்சி, மாப்பிள்ளைனு மூணு பேரும் ரயில்ல நாசிக் வந்து, ஆட்டோ எடுத்து வீட்டுக்கு வந்தோம் . என் 33 ஆயிரம் செல்போனை காணோம். வீடு முழுக்க தேடியும் கிடைக்கல. வருத்தத்துலையும், குழப்பத்துலையும் என்ன செய்றதுனு தெரியாம முழிச்சேன். தங்கச்சியும் மாப்பிள்ளையும் ஆட்டோ ஸ்டாண்ட் போய், ஆட்டோ டிரைவர் வீட்ட கண்டுபுடிச்சு, கேட்டுருக்காங்க. அவர் மறுத்துவிட்டாராம். "IMEI நம்பர் block செய்றோம்.போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம்"னு சொல்லிட்டு வந்திருக்காங்க.நான் நம்பர block பண்ண தயாரா இருந்தேன். வீட்டை தட்டி ஆட்டோ டிரைவர் மனைவி செல்போனை கொடுத்துவிட்டார். ஆச்சர்யம். கிடைக்கவே கிடைக்காதுனு நினைச்ச போன் திரும்பி வந்தது ஆச்சர்யம் தான்.
தங்கச்சிக்கு தைரியம் தான்.
மனசுக்குள்ள பழசெல்லாம் ஓடுச்சு
அக்கா, தங்கச்சி கூட பிறக்கிறதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும். அதுவும், அக்கா இருந்தா, பையன் கொடுத்து வெச்சவன். 'வயசுல சின்னவன்', 'தம்பி'னு பாத்து பார்த்து கவனிச்சுப்பார்.
எனக்கு அக்காவும் இல்லை.
அக்கா பொண்ணும் இல்லை .
வருத்தம் தான் .
வீட்ல ஒரே பிள்ளையா இருக்குறவங்க எதையோ மிஸ் பண்ணுனவங்க.நாம் இருவர், நமக்கு இருவர் தான் சரி .
தங்கச்சி, அக்கா- இல்லைனா சுவாரசியம் இருக்காது.
என்ன ....சின்ன வயசுல சண்ட நடக்கும்.பெருசானதுக்கப்புற ம் சீர் செய்யணும்...செஞ்சா போச்சு

என்ன ....சின்ன வயசுல சண்ட நடக்கும்.பெருசானதுக்கப்புற