திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு .
எல்லாப் புகழும் மாணவர்களுக்கே ! 

# உண்மையை வெளிப்படுத்தி தீயை பற்ற வைத்தது சேனல்-4. 
இரத்த சொந்தம் ஏதும் இல்லாத அவர்கள் நமக்கு செய்த உதவிக்கு, வாழ்நாள் முழுதும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். 
சேனல்-4 தொலைகாட்சிக்கு நன்றிகள்.

# தீயை பரப்பியது சமூக இணைய தளங்கள்.
மாணவர்கள் போராட்டத்தை அத்தனை வெகுஜன ஊடகங்களும் இருட்டடிப்பு செய்தன. மக்களுக்கு கொண்டு சேர்த்ததே சமூக இணைய தளங்கள் தான்.
தீ கொளுந்துவிட்டு எரிந்ததும், வேறு வழியில்லாமல் தொலைகாட்சிகள் இச்செய்தியை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டன.
லைக், ஷேர், ரீ ட்வீட் மூலம் செய்தியை பரப்பிய அத்துனை ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளங்களுக்கும் நன்றி. thanks a lot guys.

# திமுக தலைவர் அவர்களே !
1953ல் கல்லக்குடியை வென்றதில் துவங்கி '09 உண்ணாவிரத நாடகம் வரை, நீங்கள் தான் தலைவர். கோடிக்கணக்கானவர்கள், உங்களைத்தான் தமிழினத் தலைவராக, மன வறையிலும் , வரவேற்பறையிலும், மணவறைகளிலும் வைத்திருந்தார்கள்.
நீங்களோ, குடும்பத்திற்காக,பதவிக்காக, காலத்துக்கும் மறக்க முடியாத துரோகம் செய்தீர்கள்.

புரட்சித்தலைவி இதய தெய்வம் தங்கத்தாரகை மாண்புமிகு டாக்டர் அம்மா அவர்கள் , 'மக்களை நெஞ்சில் குத்துபவர்'என்பது தெரிந்தது தான்.
ஆனால் நீங்கள் முதுகில் குத்தியது தான் வேதனை.

ஆபத்தான நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க வேண்டிய நீங்க ,அவங்கள எட்டி உதைசிட்டு இப்போ எல்லாரும் செத்துப்போனதும், 'போஸ்ட்மாட்டம் செய்ய வேண்டும்'னு கோரிக்கை வெக்குறீங்க.
சரி, நீதியாவது கிடைக்கட்டும்.

'கூட்டணி முறிவு' என இன்று நீங்கள் எடுத்துள்ள முடிவுக்கு பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்க வேண்டும். குண்டு சத்தமும், குழந்தைகள் மரண ஓலமும் நினைவுக்கு வருவதால் கொண்டாட ஏதுமில்லை.

அன்றே இதை செய்திருந்தா,தலைவரேனு கண்ணீர் விட்டு காலில் விழுந்திருப்போம்.
வேற வழியேயில்லாம இப்போ நீங்க எடுத்த முடிவுக்கு, பத்தடி தள்ளி நின்னு, சந்தேகத்தோட, வணக்கம் மட்டுமே வைக்கிறேன்.
திமுக தலைவருக்கு நன்றி.

பாலாஜி.