போன வாரம் வரலட்சுமி நோன்பு. 
அடுத்த வீடு எதிர்த்த வீடுனு நிறைய லேடீஸ் வந்தாங்க. வீட்டுக்காரர் நால்லாயிருக்கணும்னு வேண்டுதல். சிலர் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க. எல்லாருக்கும் மஞ்சள்,குங்குமம், ப்ளவுஸ்,வெத்தல பாக்குனு அம்மா ஏதேதோ கிஃப்ட் கொடுத்தாங்க. இன்னைக்கும் ஏதோ விசேஷம் போல, நிறைய லேடீஸ் வந்தாங்க, அதே மஞ்சள், ப்ளவுஸ் பிட்...



என்னோட கேள்வி இது தான்:


ஆம்பளைங்க நல்லாயிருக்கணும்னா ஆம்பளைங்களுக்கு தேவையானத தான கிஃப்ட் கொடுக்கணும் ? 

அது என்னது அது நம்மளுக்காக விழா எடுப்பாங்களாம், ஆனா நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மஞ்சளையும் ப்ளவுஸ் பிட்டையும் கிஃப்ட் கொடுத்துப்பாங்களாம் ? 

இது பெண்ணாதிக்கம் தான ? 

ரக்க்ஷபந்தனுக்கும் இதே அநீதி தான். நம்ம கையில கவுறு கட்டிவிட்டுட்டு, எல்லா கிஃப்டையும் அவங்களே எடுத்துக்கிட்டாங்க. 

மத்திய பட்ஜெட்ல கூட அவிங்களுக்கு தான் தனியா நிதி ஒதுக்குனாங்க. 

தோழர்களே, இதை இப்படியே விடக்கூடாது !

அடிமைப்பட்டுக்கிடக்கும் ஆண்களே ! 
விழித்துக்கொள்ளுங்கள் !
சிங்கங்களே ! நாம் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது !
நாமும் விழா எடுக்க வேண்டிய தருணம் இது !
நம்ம வீட்டுக்காரி நல்லா இருக்கணும்னு சொல்லி விழா எடுப்போம். 


கல்யாணம் ஆகலைனா, காதலி நல்லா இருக்கணும்னு விழா எடுப்போம். அதுவும் இல்லைனா, காதலி கிடைக்கணும்னு விழா எடுப்போம்.

ஒரு பெரிய கிரவுண்ட்ல மாலை நேரத்துல விழா !

பேரு "கோவலன் நோன்பு” !

ஆண்களுக்கு மட்டும் தான் எண்ட்ரி !

பாட்டு கச்சேரி டான்ஸ்.

ராத்திரி பெரிய விருந்து, செம கட்டு கட்டுறோம்.

முடிவா, கல்யாணமான காளைகள் கால்ல நாம விழுறோம். 

டீசர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூனு நிறைய கிப்ஃட் கொடுப்பாங்க. காதலி இல்லாத தம்பிங்களுக்கு நான் நிறைய டிப்ஸ் கொடுப்பேன்.

முடிவா, கட்சிய எப்படி வளக்குறதுனு பேசி முடிவெடுப்போம்.
என்ன சொல்றீங்க ? 


"கோவலன் நோன்பு" எப்ப கொண்டாடலாம் ?

- ஆமுக