வித விதமான வாழ்க்கை….

ஒரு நாளுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்குற, பேருந்து வசதி இல்லாத கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்துல பணி.
காலை: ஒரு குட்டி கிராமத்துல தெரு தெருவா நடந்தேன். வழி விடாதா எருமை மாடுகள் . "பீடி குடிக்காதீங்க"னு சொன்னதுக்கு "இனி குடிக்க மாட்டேன்"னு பொய் சொன்ன நடுத்தர வயது ஆண்.
மதியம் : PHCய பெரிய மருத்துவமனைனு நம்பி வந்து, ஏமாந்த பெண் நோயாளியின், கண்ணுல விழுந்து இருந்த feviquickஐ வெறும் சலைனை கொண்டு நீக்குனதுக்கே, ''நல்லா இருப்ப''னு அவள் தந்தை வாழ்த்தினார்.
அடுத்த காட்சி ?
10 ரூபா மருந்த கடையில வாங்க முடியாத ஏழை பெரியவர் . அரசாங்கத்தை திட்ட ஆரம்பித்தவரை சமாதானப்படுத்தி அனுப்பினோம்.
மாலை 6 மணி : 2 சக்கர வாகனத்துல, சாலையே இல்லாத சாலையில் நகரத்துக்கு பயணம் . வெளிச்சம் கொடுக்க நிலா கூட இல்லை.6 மணிக்கே கும் இருட்டு.
இரவு 8 மணி : 15 பேர் உட்காருற ஷேர் ஆட்டோவுல தொங்கிகிட்டே மாநகரத்துக்கு பயணம் .
9 மணி -
அந்நியனோட அடுத்த வாழ்க்கை.
30000 கோடி மெட்ரோ ரயிலில் சொகுசு ஏ.சி பயணம்.
10 மணி : நாட்டின் தலை நகர் . சில மணி நேர சந்தோஷத்துக்கு பல லட்சம் செலவு செய்த பார்ட்டி . இரவை வண்ணமாக்கிய வண்ண விளக்குகள்.
கப் எடுத்து தண்ணீர் கேட்டதும், ஏளனமா சிரித்தார்கள் .
தண்ணி குடிக்க வேண்டிய இடத்தில் தண்ணீர் குடித்தது குற்றம் தான்.
மாலையில் நான் பார்த்தது, 'முகத்தை கூட வெளியே காட்டாத' ஹரியானா கிராமத்து பெண்கள்.
இரவில் நான் பார்த்த டெல்லி பெண்கள் ? வேண்டாம். அதை சொன்னால் , "ஆண்கள் மட்டும் செய்யலாம், பெண்கள் செய்தால் குற்றமா"னு பெண்ணுரிமைவாதிகள் சண்ட போடுவாங்க.
DJ வின் பாப் இசைக்கு பலர் குத்திக்கொண்டிருந்தனர்.
ஜோதியில் ஐக்கியமானேன். adrenaline peak.
உடம்புல எத்தன ஜாயிண்ட் இருக்குனு இப்போ தான் புரிஞ்சுது. அத்தனையிலும் வலி .
இப்போ 1.30 மணி - தூங்கிடுவேன்.
காலை 8 மணிக்கு ?
அடுத்த நாடகம்.
நாட்டின் முக்கியமான மருத்துவமனையில, குழந்தை மருத்துவ பயிற்சி வகுப்பு. வாய் கை கால அடக்கி,வால சுருட்டிகிட்டு அமைதியா கத்துக்கணும். குழந்தைங்ககிட்ட கொயந்த மாதிரியே பேசணும்.
வித விதமான வாழ்க்கை .
வித விதமான மனிதர்கள்.
எடத்துக்கு தகுந்த மாதிரி டிசைன் டிசைனா நடிக்குற, எனக்கு கொடுங்கைய்யா பத்ம பூஷன் விருது. நான் வேண்டாம்னு மறுக்கவே மாட்டேன்.
பாலாஜி.