நாடு முழுதும் வெயில் சுட்டெரிக்கிறது. சன் ஸ்ட்ரோக் (Sun stroke) எனப்படும் வெயில் கொடுமையால், இந்த வாரத்தில், ஆந்திராவில் மட்டும் 524 பேர் இறந்துவிட்டிருக்கிறார்கள். இந்த செய்தியை, பத்திரிக்கைகள் தங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டு, 'வெயில் கொடுமையிலிருந்து மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்' என அறிவுரைகளையும் தந்திருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான செய்தியை கொடுப்பதற்கு தானே பத்திரிக்கைகள். ஆனால் இதை எந்த தேசிய பத்திரிக்கையும் செய்யவில்லை.

மாறாக, IPL விளையாட்டில் வெற்றி பெற்ற அணியின் புகைப்படம், அதில் நடைபெற்ற சூதாட்டம்,அந்த விளையாட்டில் நடைபெறும் விலையாட்டுகள் போன்றவற்றை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிட்டு, தங்களை 'தேசிய பத்திரிக்கை' என கூறிக்கொள்கின்றனர்.

வெகுஜன ஊடகங்களின் மீதுள்ள நம்பிக்கையை, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பாலாஜி.