சுகாதாரமற்ற குடிநீர் , உணவு மூலம் டைஃபாய்டு , காலரா போன்ற பல தொற்று நோய்கள் பரவிகிட்டு இருக்கு.
"ஒவ்வொரு வருஷமும் 15 லட்சம் குழந்தைகள் வயித்துப் போக்கால் இறந்து கொண்டிருக்கிறார்கள் " - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு. http://www.who.int/mediacentre/factsheets/fs330/en/index.html

பெரிய பெரிய உணவகத்தில் விற்கப்படும் உணவு சுகாதாரமாத்தான் இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை- தவறான கருத்து.

பெரிய பெரிய உணவகத்தின் சமையலறையை ஒருமுறை சென்று பாருங்கள் - மறுமுறை அந்த உணவகத்துக்கு நீங்க போக மாட்டீங்க- காற்றோட்டமே இருக்காது. காய்கறிகள் தரையில் கொட்டி கிடக்கும். சட்டை கூட போடாத வியர்வை வழியும் சமையல் ஆட்கள். கரப்பான் மேயும் .ஒரு வித வாடை வீசும் . சிலருக்கு வாந்தியே வரும்.

இன்னைக்கு மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள ஒரு உணவகத்துக்கு போயிருந்தேன் . குஜராத்தி ஹோட்டல்.
பளிச்சுன்னு கண்ணுல பட்டது இந்த அறிவிப்பு : "வாடிக்கையாளர்கள் சமையலறையை பார்வையிடலாம்"

உள்ள போய் பார்த்தோம்.
"இது சமையலறையா?'' னு ஆச்சர்யமா இருந்தது. சமயலறைக்குள்ள சாமி படத்த வெச்சு பூஜை பண்ணுறாங்க .
"வரவேற்பறை எது சமையலறை எது? "னு கண்டுபிடிக்க முடியாத அளவு இருந்தது சமையலறை. அவ்வுளவு சுத்தம்.
எல்லா உணவும் மூடி வைத்திருந்தார்கள்.
ஊழியர்கள் சலவை செஞ்ச ஏப்ரன் போட்டிருந்தாங்க.
அது ஸ்டார் ஹோட்டல் கிடையாது.
நடுத்தர உணவகம் தான்.

இன்னொரு அறிவிப்பு- 3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாதி கட்டணம் தான் - சரி தான். குழந்தைங்க எவ்ளோ சாப்டுட போறாங்க.

"வாடிக்கையாளர்கள் சமையலறையை பார்வையிடலாம் "- இப்படி ஒரு அறிவிப்பு வைக்க அந்த உணவக நிர்வாகத்துக்கு எவ்வுளவு தன்னம்பிக்கை வேணும் ?
மானேஜர் ஒரு நடுத்தர வயது பெண்- வெளியே வரப்போ அவரை பாராட்டிட்டு வந்தோம்.

இதே மாதிரி ஒரு அறிவிப்பு எல்லா உணவகத்துலயும் இருந்தா, நாம பயம் இல்லாம சாப்ப்பிடலாம் தானே ?
நிச்சயம் உணவக உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
நாம ஏன் இதை வலியுறுத்தக் கூடாது ?