
நேற்று சென்னையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பெற்றோருடன் சென்றிருந்தேன். இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்திருந்ததால்,
1) Address proof (Ration Card)
2) Date of Birth Proof (+2 mark sheet)
3) நான் மத்திய அரசுப்பணியில் இருப்பதால் ஜிப்மரிலிருந்து NOC - ஆகிய மூன்றும் கேட்டிருந்தார்கள். எனக்கு வந்த ஈ-மெயிலில் இந்த மூன்றும் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. கேட்டிருந்த அனைத்து original documentகளையும் எடுத்துச்சென்றிருந்தோம்.
ஆனால் அங்கு சென்றதும், screening செய்யும் receptionல் இருந்த பெண், என்னுடைய Birth certificate, Aadhar card, ஜிப்மர் ID card, driving licence என கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட originalகளை கேட்டார்.
"ஏன் ?”
“Address proof தேவைப்படுது”
"அது தான் ration cardல் இருக்கிறதே”
"Ration Card நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை”.
(நம்பவில்லை என்றால் பின் எதற்காக Ration Cardஐ ஆதாரமாக கேட்கிறார்கள் ?)
"இதெல்லாம் இணையதளத்தில் கேட்கப்படவில்லையே? ஏன் எல்லாத்தையும் கேக்குறீங்க? “
“இது தான் MEA ரூல்ஸ். இருந்தா கொடுங்க. இல்லைனா உள்ள போக முடியாது”நு முகத்துல அடித்தாற்போல் பதில். (MEA - Ministry of External Affairs). நல்லவேளை எல்லாவற்றையும் வைத்திருந்தேன்.
அடுத்து என் பெற்றோருக்கு கேட்டிருந்த Documentகளை கொடுத்ததும், அதே பெண்மணி, "ரேவதி என்பவர் லக்ஷம் என்பவரின் மனைவி தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?”நு கேட்டார். எனக்கு கோவம். ரேவதி-லக்ஷம் பெற்றோர் பெயர். "அதெல்லாம் எங்கேயும் கேட்கப்படவில்லையே”
"இது தான் ரூல்ஸ்”
(இந்திய அரசை பொறுத்தவரை, பெண்களுக்கு மட்டும் 'இன்னார் தான் கணவர்' என்ற ஆதாரம் தேவை. ஆண்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. இந்த அநீதியை எதிர்த்து பப்ளிசிட்டி பெண்ணியவாதிகள் போராடமாட்டார்களா?)
"Ration Cardல் குடும்பத்தலைவர் , மனைவினு தெளிவா இருக்கே. Aadhar cardடிலும் எல்லாம் இருக்கு." (மத்திய அரசு கொடுத்திருந்த pension அட்டையில் அப்பா-அம்மா இணைந்திருக்கும் புகைப்படம் இருந்தது. ஆனால் அதையும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்)
"நீங்க வேனா உள்ள போய் officersகிட்ட கேளுங்க. நான் வெறும் Private staff”.
எனக்கு அதிர்ச்சி. பாஸ்போர்ட் அலுவலகத்தில் எதற்கு தனியார் தொழிலாளி ?
பேசிப்பார்த்து பயனில்லை.
உள்ளே செல்ல கண்டிப்பாக Notary அட்வகேட்டிடமிருந்து கணவன்- மனைவி என affidavit வாங்கி வரச்சொன்னார்கள்.அதற்கான ஆட்கள் வாசலிலேயே தயாராக இருந்தார்கள். இவர்களே அவர்களிடம் refer செய்தார்கள். அவர்கள் ஒரு முடிவோடு தான் இருந்தார்கள். அங்கே 2 நிமிட வேலை. ஒரு கையெழுத்து. 600 ரூபாய். இந்தியன் படத்தில் லைசன்ஸ் வாங்க அலுவலக வாசலில் கமல் கவுண்டமணி போலவே வசூளித்தார்கள்.
எல்லாம் முடித்து passport அலுவலகம் உள்ளே சென்றோம்.
சில அரசு அதிகாரிகளை தவிர்த்து மற்ற அனைவரும் TCS (Tata Consultancy Services) நிறுவன ஊழியர்கள்.உள்ளேயே TCS அறை என தனியாக ஒரு அறை. நம்பவே முடியவில்லை. பிறகு தான் தெரிந்தது. Passport அலுவலக பணியை Outsourcing செய்துள்ளார்கள். போட்டோ எடுத்தார்கள். அனைத்து விரல்களின் கைரேகையையும் எடுத்தார்கள். aadhar அட்டை வழங்கும் போது கைரேகை,புகைப்படம் என எல்லாவற்றையும் பதிவு செய்தார்களே ? கண்விழி மூலம் விழித்திரையையும் புகைப்படம் எடுத்தார்களே? அதெல்லாம் என்னவாயிற்று ? Urine test, motion test, DNA test மட்டும் தான் பாக்கி. சரி. இதெல்லாம் நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியம் தான். வரவேற்க வேண்டிய முன்னேற்றம் தான். ஆனா, நாட்டின் முக்கியமான துறையான வெளியுறவுத்துறையில் தனியார்கள் எப்படி நுழைந்தார்கள் ? நாட்டின் பாதுகாப்பு தனியார் வசம் செல்வது ஆபத்தான போக்கு தானே ? யானை போகுரது தெரியாதாம், ஆனா ஊசி போகுறது மட்டும் தப்பாம். நம்மள தான் துருவித்துருவி விசாரிப்பார்கள். தனியாரிடம் ஈனு எல்லாத்தையும் ஒப்படைப்பார்கள்.
அலுவலகத்திலிருந்த Displayல் எல்லாமே ஆங்கிலம். படிவங்களும் ஆங்கிலத்தில். கிராமத்திலிருந்து வந்திருந்த 50 வயது பெண்மணிக்கு Pincode தெரியவில்லை. அதையும் கேலி கிண்டல் செய்தார்கள். கம்ப்யூட்டர் தெரிந்ததால் எல்லாம் தெரிந்தவர்கள் போல் நடந்து கொண்டார்கள் TCS ஊழியர்கள். மக்களை சற்று அதட்டலாகவே வழிநடத்தினார்கள். ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை கடினம் தான். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
அனைவருக்கும் Feedback form கொடுக்கபட்டிருந்தது. அதை எழுத ஆரம்பித்ததும், பணியிலிருந்த security ஊழியர்(தனியார்) “அதெல்லாம் எழுத வேண்டாம். பெயர் மட்டும் எழுதி கொடுங்கள்”நு சொன்னார். நான் மறுத்துவிட்டேன். பிடிவாதமாக புகார் எழுதி கொடுத்தேன். “படிவங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது.ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ? தமிழிலும் படிவங்கள் வழங்கப்பட வேண்டும்” என எழுதிக்கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட TCS ஊழியர் எனது Feedbackஐ படிக்கவேயில்லை. என் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, என் கண் முன்னேயே பக்கத்தில் இருந்த கூடையில் போட்டுவிட்டார்.
இப்படி நான் போகும் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஏதாவது பிரச்சனை, வாக்குவாதம். இந்த முறை அப்பா அம்மா உடனிருந்தார்கள். என்னை சமாதனப்படுத்திக்கொண்டே ஊழியர்களிடம் சமாதானம் பேசினார்கள். அவர்களுக்கு பழகிவிட்டது. எனக்கு தான் இந்த நாடு வெறுத்து போய்விட்டது. அடுத்த வருடம் 3 நாள் மட்டும் வெளிநாடு பயணம் செய்ய திட்டமிட்டு அதற்காக தான் பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், இந்த நாடு இப்படியே இருந்தால், நிரந்தரமாக வெளிநாடு போய்விடுவது தான் எனக்கு சரியான முடிவு.
- பாலாஜி