இன்று மதியம் - நானும் ஜூனியர் மருத்துவரும் 

"தம்பி வா போலாம்"
"நா வரல ஸார்"


"ஏன் ?"
"எனக்கு பயம்"


"இதுல என்ன பயம் ?"
"ஒரு தடவ கூட கொடுத்ததில்ல.மயக்கம் வந்திடும் ஸார்"


"இதுக்கு முன்னாடி நீ எமர்ஜென்ஸியில வேல செஞ்சது இல்ல ? crush injury எல்லாம் பார்த்ததில்ல ? சர்ஜரி assist செஞ்சதில்ல ? ரத்தம் பார்த்து பயமா என்ன ?"
"ரத்தம் பார்த்து பயமில்ல. ஆனா நான் ப்ளட் டொனேட் பண்ண பயம்."


"ஏன் பயம் ? நான் இது வரை 11 முறை டொனேட் செஞ்சிருக்கேன். எனக்கு எந்த தொந்தரவும் வந்ததில்லையே.எவ்ளோ பேர் ரத்தம் இல்லாம ஆபரேஷனுக்காக வெய்ட் பண்றாங்க. டாக்டர் நீயே கொடுக்கலைனா பொது மக்கள் எப்படி தருவாங்க. "
"ஏன் பயம்னு தெரியல.... என்னோடது ரேர் குரூப் இல்ல சார். நிறைய கிடைக்குமே. நான் கொடுத்து தான் காப்பாத்தணும்னு இல்லையே."


"காமன் ப்ளட் குரூப் தான் நிறைய தேவைப்படும் தெரியும்ல.டெங்கு சீசன் வேற ஆரம்பிக்க போகுது.ப்ளட் ரொம்ப்ப ஷார்ட்டேஜா இருக்கு பா...வந்து கொடு "
"இப்போ தரல சார். எமெர்ஜென்ஸினா கொடுப்பேன்."


"அப்போ நீ ப்ளட் டொனேட் பண்ண வர மாட்ட ? ஒரு யூனிட் கொடுத்தா ஐ.கார்ட் கொடுப்பாங்க. ஒரு வருஷம் வரைக்கும் நமக்கோ நம் குடும்பத்தினருக்கோ ரத்தம் தேவைப்பட்டா, ரத்த வங்கியில கார்டை காட்டி ரத்தம் வாங்கிக்கலாம். எப்போ யாருக்கு ரத்தம் தேவைப்படும்னு தெரியாதே."
"இல்ல சார். …வேண்டும்னா ஆர்கன் டொனேட் பண்ணறேன் சார்"


"ஆமா, இப்போ ரத்தம் கொடுக்க மாட்ட, இறந்ததுக்கப்புறம்….."
"சார் compel பண்ணாதீங்க. இஷ்டப்பட்டவங்கள மட்டும் கூட்டிட்டு போங்க."


"பெண்களை ப்ளட் டொனேட் பண்ண வாங்கணு நான் அழைச்சதில்லை. அப்படி நினைச்சிக்கிறேன்"னு கோவமா சொல்லிட்டு, சம்மதம் உள்ளவங்க மட்டும் வாங்கனு சொன்னதும், நிறைய ஜூனியர்கள் கிளம்பினார்கள் .


(போகும் வழியில் )
ஜூனியர் : ஏன் பொண்ணுங்க டொனேட் பண்ண வேண்டாம்னு நினைக்குறீங்க சார் ?
நான் : பொண்ணுங்க தாராளாமா செய்யலாம். ஆனா நம்ம நாட்டுல பெண்களுக்கு அனீமியா இருக்கும். எடை குறைச்சலா இருக்கும். மாச மாசம் இரத்த இழப்பு இருக்கும். இவங்ககிட்ட வாங்கி தான் ரத்தம் சேகரிக்கணுமா என்ன ? நாமலே கொடுத்துடலாம். இது என் தனிப்பட்ட கருத்து .


ரத்தம் கொடுக்க ஆரம்பிச்சோம்.


" அந்த டீ.விய ஆன் செய்ய மாட்டீங்களா ? ஃப்ரூட்டி கொடுப்பாங்களா ? பிஸ்கட் கொடுப்பாங்களா? னு ஜூனியர் பசங்க வழக்கம் போல வால்தனம் செஞ்சாங்க. ரத்த வங்கி மேடம் ,எல்லாத்தையும் கேட்டுகிட்டு சிரிச்சுகிட்டே வேலைய செஞ்சாங்க.

அப்ப தான் நான் எதிர்பாராதது நடந்தது.


ஜுனியர் பெண் மருத்துவர் ரத்தம் கொடுக்க வந்தார்.
பட்டுனு, "நீங்க ஏன் வந்தீங்க"னு கேட்டுபுட்டேன்.
"நான் ஏன் சார் வரக்கூடாது ?"


"இல்ல. பொண்ணுங்க எதுக்கு …?"
"ஏன் பொண்ணுங்க தரக்கூடாதா ?" (கோபமான பதில்) 


"அப்படியில்ல…"
"என் எடை சரியாயிருக்கு சார்.ஹீமோகுலோபின் நார்மலாயிருக்கு. எந்த வியாதியுமில்ல,எந்த மருந்தும் எடுத்துக்கல. பீரியட்ஸ் இல்ல. நான் ஏன் கொடுக்க கூடாது சார் ?"
எனக்கு,பளார் பளார்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்துச்சு.


ரத்தம் கொடுத்து எழுந்ததும் தான் கவனிச்சேன்.
என் பின்னாடி வயதான அம்மா (50 வயசு இருக்கும்) ரத்தம் கொடுத்துகிட்டிருந்தாங்க.
(ஃபோட்டோவில் இருப்பவர்). 
ரத்தம் கொடுக்க மாட்டேன்னு சொன்ன பையனுக்கு, இந்த அம்மா பளார்னு வெச்ச மாதிரி இருந்தது.


"இன்று ரத்தம் கொடுத்ததில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள்" -மேடம் இதை சொன்னதும் ஆச்சர்யம்.


சில வருடங்களுக்கு முன்
************************
பெண் மருத்துவர் : எங்களால் மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியும். உங்களுக்கெல்லாம் (ஆண்களுக்கு) அந்த சந்தோஷ ஃபீலிங் கிடைக்கவே கிடைக்காது.
நான் : ப்ளட் டொனேட் செய்யுற எல்லாருக்கும் அதே போன்ற ஃபீலிங் கிடைக்கும். எனக்கு கிடைச்சிருக்கு.

நீங்களும் அனுபவிச்சு பாருங்க.
donate blood.save lives.

பாலாஜி.