
இன்று சமயபுரம் கோவிலுக்கு சென்றிருந்தேன்.
உள்ளே நுழைந்ததும் வசூல் வேட்டையை ஆரம்பித்துவிடுகிறார்கள். வாகன பார்க்கிங்க்கு தனி டிக்கெட். அநியாய விலை. அதை நடத்துவது கரைவேட்டிகள் தான்.சாமி இல்லைனு சொல்லும் கட்சி கரைவேட்டிகள். சாமியை தரிசிக்க செல்லும் வழி முழுதும் கடைகள்.பழம், தட்டு ,பூ, தேங்கா,பூஜை டிக்கட், இந்த டிக்கேட் அந்த டிக்கெட்.கட்டாயப்படுத்துவா
சாமிய தரிசிக்க 3 வரிசை (ஃபோட்டோ). இருப்பவனுக்கு சொகுசு தரிசனம். இல்லாதவனுக்கு 'ஆடு நரி' தரிசனம்.சாமி எல்லாருக்கும் பொது தான். இதெல்லாம் ஆசாமிங்க உண்டாக்குன பிரிவினை தான். "ஜாதி அடிப்படையில் கூடாது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அவசியம் "- இது என் நிலைபாடு.
வரிசை தான் மூன்று. ஆனா எல்லாருக்கும் பொதுவாக சமஅளவில் ஒன்னு கிடைக்கிறது. அது என்ன தெரியுமா ? துர்நாற்றம். இது கடவுள் மனுசனுக்கு கொடுக்கும் கட்டாய வரம். எவ்வுளவு பணம் கொடுத்து தரிசன டிக்கெட் வாங்கினாலும், இதிலிருந்து தப்பவே முடியாது. காரணம், கோயிலை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு, திறந்தவெளி தான் கழிப்பறை. பக்தியோட கோவிலுக்குள்ளே நுழைந்தால், ஒலி பெருக்கியில் அலறிய பாடல் என்ன தெரியுமா ? "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. ட்ட டடொய்ங்..ட்ட டடொய்ங். ஒன்றும் அசையாமல் நின்று போனது... ட்ட டடொய்ங்..ட்ட டடொய்ங்". சினிமா கேசட் விற்கும் கடையின் ஒலிபெருக்கி.
கூட்ட நெருசலில் கால் கடுக்க நின்னு வியர்த்து போய் சாமிக்கிட்ட போனா, 30 நொடி கூட தரிசனம் கிடையாது. அங்க இருக்குற சாமிங்க, "போ ப் போ போ", "தள்ளு தள்ளு","நிக்காத நிக்காத"நு சத்தமா கத்தி, விரட்டி விட்டுகிட்டிருந்தாங்க. பணம் இருந்தா மட்டும் மாலை மரியாதை.
ப்ரகாரத்துக்கு வந்தேன்.
கோவில் நிர்வாகம் ஒரு அறிவிப்பு பலகை வெச்சிருந்தாங்க :
"This Temple is under Continuous Video Surveillance".
டேய் நீங்க என்னடா எங்கள கேமரா வெச்சு வேவு பாக்குறது..நம்ம எல்லாரையும் மேல இருந்து ஒருத்தன் பாத்துகிட்டே இருக்கான். யாரும் தப்ப முடியாது.
பாலாஜி.