"சொல்ல மறந்த கதை”. 






எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த படம். 

10,12 வருஷம் முன்னாடி பார்த்தது. நேத்து டிவியில ஓடுச்சு. நெய்வேலி, மயிலாடுதுறை, பண்ருட்டினு நான் வளர்ந்த ஊர்கள்ல படம் நகரும். எங்க தோட்டத்துலயும் முந்திரி, பலா மரம் இருந்துச்சு. படிச்ச வசதியில்லாத சேரன், ஹோட்டல் முதலாளி பிரமிட் நடராஜனின் மகளை கல்யாணம் செய்வார். அதன் பிறகு, வீட்டோடு மாப்பிள்ளை மற்றும் சம்பளம் வாங்காத ஹோட்டல் மேனஜர் என சேரனுக்கு டபுள் ப்ரமோஷன். படம் முழுக்க மாமனார் மருமகனுக்கு செம “மரியாதை" கொடுப்பாரு. ஒரு கட்டத்துல முகத்துலயே துப்புவாரு. 


முதல் முறை கல்யாணம் செய்யப்போற அப்பாவி பசங்களுக்கு இந்த படம் ஒரு பாடம். 

"அப்பா அம்மா டாக்டரு. ஒரே பொண்ணு. பெரிய இடம். நர்ஸிங் ஹோம் எல்லாம் வெச்சிருக்காங்க. நீ போய் அத பாத்துகிட்டா போதுமாம்”

ஐயா சாமி, ஆளவிடுங்க.