மே மாசம் பரிட்சை.
pass ஆனா M.D…ஊத்திகிட்டா empty.

காலையிலேயே வீராப்பா லைப்ரரிக்கு போனேன்.
ஆயிரக்கணக்கான புத்தகங்க…..
நடுவுல அப்பாவி புள்ளையா நான்.


"பெண்கள் இறப்ப தடுக்க அரசாங்க திட்டங்கள்"- படிக்க ஆரம்பிச்சேன்.
40 நிமிஷம் தான் ஆச்சு.
டொக் டொக் டொக்….ஹீல்ஸ் சத்தம்.
தலைய திருப்பி பார்த்தா….
ஆஹா…ஆஹாஹா……
மனசுக்கு சார்ஜ் ஏறிடுச்சு.


புத்தகங்கலெல்லாம் என்னையவே மொறைக்குற மாதிரி இருந்துச்சு.
வெடுக்குனு திரும்பி, "குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்குற திட்டங்கள்" படிக்க ஆரம்பிச்சேன்.
1 மணி நேரம் ஆச்சு.


திடீர்னு மல்லிகை வாசம்…நிமிந்து பார்த்தா…
ம் ம் ம்..ம்….தரிசனம் கிடைச்சுது…
ஆனா மல்லிகை பூ இல்ல . பெர்ஃப்யூம்…பரவாயில்ல.
கண்ணு வழியா சார்ஜ் ஏத்திக்கிட்டேன்.


அடுக்கியிருந்த கார்டியாலஜி புத்தகங்க, என்னைய பாத்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருந்துச்சு.
ரோஷம் வந்து, குனிஞ்சு நல்ல புள்ளையா "போலியோ ஒழிப்பு திட்டம் " படிக்க ஆரம்பிச்சேன்.


அப்புறம் ....?
நிறைய பேர் வந்தாங்க..போனாங்க...
சிவப்பு, புரவுன், பிங் னு ….கலர் கலரா…லிப்ஸ்டிக்…
நீலம்,வெள்ளை, ஊதானு கலர் கலரா டீ-ஷர்ட்கள்.
தமிழ் டைரக்டர் இருந்திருந்தா, ஜெர்மனியில டூயட் சாங் வெச்சிருப்பார்..ப்ச்...


கண் 'மை'ய , புருவத்துல மட்டும் தான போடுவாங்க..இமையிலயும் போடுவாங்க சரி. ஆனா, கண்ணுக்கு மேலயும், கீழயும் கலர கலரா போட்டுருக்காங்களே..
அது என்னது ? யோசிச்சேன்…
ஐய்யோ....பரிட்சை ..படிக்கணுமே..படிக்கணும்…படிச்சேன்.
ஆனா என் கண்ணு தான் அடிக்கடி கதவ பாத்துச்சு..



மணி 9 ஆச்சு...
படிச்சதுக்கு நோட்ஸ் எடுக்கணுமே…..எடுத்தேன்…
எத ?
தூரத்துல உக்காந்து படிச்சுக்கிட்டிருந்த இந்த குதிர கொண்டைய, அப்படியே என் நோட்டுல வரைஞ்சேன்.



காலையில இருந்து ராத்திரி வரைக்கும் படிச்சேன்…
புத்தகம் தவிரவும் நிறைய பார்த்தேன்..படிச்சேன்.
ஆனா, என்னய தான் யாருமே பாக்கல.கண்டுக்கல.


அவங்க எல்லாம் நம்மல பாக்கணும்…
என்ன செய்யலாம் ?
அரசாங்க திட்டம் மாதிரி நானும் ஒரு திட்டம் போட்டிருக்கேன்:-
# இனி தெனைக்கும் லைப்ரரி போகணும்.
# டொக்கு.. டொக்குனு சத்தம் வர மாதிரி ஹீல்ஸ் செருப்பு வாங்கணும்.
# என் கலருக்கு தகுந்த மாதிரி , எடுப்பா ப்ரவுன், அட்ட கருப்பு கலர்ல லிப்ஸ்டிக் வாங்கி போட்டுக்கணும்….
# கண்ணுக்கு மை அப்பிக்கணும்.
# "இந்த நாள் இனிய நாள்"னு இங்குலீஸ்ல எழுதியிருக்குற டீ- ஷர்ட் வாங்கி போட்டுக்கணும்.

அப்படியாவது நம்மல யாராவது பாப்பாங்களா ?