
நான் பாட்டுக்கு ஃபேஸ்புக்குல உழச்சிக்கிட்டுயிருந்தேன்.
அம்மா (சந்தோஷமா) : ஏ.. பாப்பாவ காலுக்கு நடுவுல போட்டா நல்லா தூங்குதுடா...கொஞ்ச நேரம் நீயும் வெச்சு பாரேன்.
நான் (சந்தேகமா) : ம்..போடுங்க. ஆனா..
தங்கை (சிரிச்சுகிட்டே) : இப்ப தாண்டா 'போனா'..இன்னும் அர மணி நேரத்துக்கு 'போகமாட்டா'.
நான் : சரி சரி..
மருமகள என் காலுக்கு நடுவுல போட்டுட்டு அம்மா பக்கதுலயே நின்னாங்க..நான் ஃபேஸ்புக்குல கடமய செஞ்சுகிட்டு இருந்தேன்..
10 நிமிஷம் கழிச்சு..
அம்மா (பூரிப்பா) : ஹை.. பாரேன்..நல்லா தூங்கிடுச்சு டா..
நான் : ஆஆ...கால்ல என்னமோ சூடா இருக்கே...ஐயோ பேண்ட் ஈரமாயிடுச்சே...
தங்கச்சி (சத்தமா சிரிச்சுகிட்டே) : போயிட்டாளா...
எவ்ளோ நேரத்துக்கு ஒருதடவ 'போறா'னு என்னைய வெச்சு டெஸ்ட் பண்றாங்க போல...