55 வயதிலும் காலை வெறும் வயிற்றில் தொடங்கி மாலை வரை வெறும் டீ வடையை மட்டும் சாப்பிட்டுவிட்டு, நின்று கொண்டே தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.

"பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சா, மருத்துவத்தொழில விட்டுட்டு prostitution தொழிலுக்கு போயிடுங்க"னு மருத்துவர்களுக்கு கோவமா ஆலோசனை சொன்னவர். 

MBBS முடித்த வேளையில், 'சிவில் சர்வீஸ் எழுத விருப்பம்'னு சொன்னவுடன், 'இந்தியாவுக்கு நல்ல ias ஆஃபீஸர்களை விட நேர்மையான மருத்துவர்கள் தான் இன்றைக்கு தேவை'னு சொல்லி என்னை இதே துறையில் பணிபுரிய ஆலோசனை கொடுத்தவர்.

எங்கள் Plastic Surgery HOD, மருத்துவர்.ஜோசஃப் விக்டர் சார் அவர்கள். அவரைப் போன்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இந்த நாட்டில். அனைவருக்கும் என் மருத்துவர் தின வாழ்த்துகள்.